Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : ஆங்கில புத்தாண்டு பலன் 2021 மீனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 மீனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கும்பம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
கும்பம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

அவிட்டம் 3, 4ம் பாதம் :  எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. இக்கட்டான சூழலில் பொறுமை காப்பது அவசியம். பிறருக்கு உதவி செய்ய போய் சங்கடத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு.  யாருக்கும் வாக்குறுதி தராதீர்கள். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. சொத்து விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி தேவை. பெண்கள் தனிமையை தவிர்ப்பது நல்லது. ஓய்வின்றி உழைப்பதால் உடலில் தளர்ச்சி உண்டாகும். வெந்நீர் பருகுவது நல்லது. மார்ச் முதல் பணியாளர்கள் உயர்வு பெறுவர். சுய தொழிலில் லாபத்தை பெருக்க உழைக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையோடு செயல்பட வேண்டிய ஆண்டு இது.

சதயம் : திறமை ஒன்றே வெற்றிக்கு துணையாக அமையும்.  மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. நினைப்பதை செயல்படுத்த முடியாததால் வருத்தம் ஏற்படும். வரவிற்கு ஏற்ற செலவு காத்திருக்கும். கிரேடிட் கார்டு உபயோகத்தின் போது கவனம் தேவை. சகோதரருக்கு உதவி செய்ய நேரிடும்.  நன்றி இல்லாத மனிதர்களை கண்டு வருந்துவீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைப்பது அவசியம். பெண்கள் குடும்ப பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். டென்ஷன் காரணமாக உடல்நலக்குறைவு வரலாம். ஜூன் வரை பணியாளர்கள் சோதனையான சூழலை சந்திப்பர். பொறுமை காக்க வேண்டிய ஆண்டு இது.

பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் : மனதில் அவ்வப்போது குழப்பம் உண்டாகும். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் கூடுவதால் கையிருப்பு கரையும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். வெளியில் சந்திக்கும் பிரச்னைகளை வீட்டிற்குத் தெரியாமல் மறைப்பீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் பேசாமல் அமைதி காப்பது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. நிதி துறையினர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதிகாரிகளோடு மோதல் போக்கு உண்டாகலாம். சுயதொழில் புரிவோர் அகலக்கால் வைக்க வேண்டாம். சோதனையான ஆண்டாக அமையும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar