Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: தை ராசிபலன் மிதுனம் : தை ராசிபலன் மிதுனம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
ரிஷபம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


கார்த்திகை 2, 3, 4ம் பாதம் : ராசிநாதன் சுக்ரனின் எட்டாம்இட சஞ்சாரம்துவக்கத்தில் சற்று சிரமத்தினைத் தந்தாலும்மற்ற கிரகங்களின் சாதகமான சஞ்சாரம் நற்பலனைத் தரும். மனதில் தன்னம்பிக்கை கூடும். திறமையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தருவதோடு தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பினையும் உயர்த்தும். உங்களது திறமையான பேச்சுக்கள் மிகுந்த வலிமை பெறும். கறாரான கருத்துக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தி நற்பெயர் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சூடான உணவுப் பொருட்களை மனம் விரும்பினாலும் அதை உட்கொள்ளும் வாய்ப்பு குறையும். உடன்பிறந்தோரின் நலனுக்காக சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும். வண்டி, வாகனங்களால் கூடுதல் செலவுகளைக் காண்பீர்கள். ஜன.யின் இறுதியில் எதிர்பாராத திடீர் பிரயாணங்களுக்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் கௌரவத்தினை உயர்த்தும். எதிர்கால நலம் கருதிய உங்கள் திட்டங்கள் நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருவதை அனுபவ பூர்வமாகக் காண்பீர்கள்.புதிய நண்பர்களின் சேர்க்கை நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். வாழ்க்கைத்துணையோடு லேசான கருத்து வேறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உறவினர்கள் வழியில் கூடுதல் செலவிற்கு ஆளாவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புகள் ஆதாயம் தரும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக சிறப்பான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்த்த வெற்றியினை அடைவீர்கள். இரவினில் நிம்மதியான உறக்கம் கெடும். கடன்சுமை சற்று குறையும். அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். தகப்பனார் வழி சொத்துக்கள் நன்மை தரும். நண்பர்களின் நலனுக்காக முன்னின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். நன்மை தரும் மாதமே.
பரிகாரம்: ஞாயிறு தோறும் சிவாலய பிரதட்சிணம் செய்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 7

ரோகிணி : ஒன்பதாம் இடம் வலுப்பெற்று இருப்பதால் பொது நல காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டியிருக்கும். தன்னலம் கருதாது செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உழைப்பிற்கான தனலாபத்தினை உடனடியாகக் காண்பீர்கள். பொருள் வரவு நிலை தொடங்கியிருப்பதால் நிதி நிலைமை சீரடையத்தொடங்கும். பேச்சுக்களிலும் தொழில் முறையிலான சிந்தனைகள் வெளிப்படும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வதில் மன நிம்மதி காண்பீர்கள். வெளியூர் பிரயாணங்கள் திருப்தியைத் தரும் வகையில் அமையும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயத்தினைத் தரும். உறவினர்களின் இல்லத்தில் நடைபெறும் சுபவிசேஷங்களுக்கு உதவி செய்ய நேரிடும். பிள்ளைகளால் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். அவர்களது எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.மறைமுக எதிரிகளை வெற்றி காண புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.முன்பின் தெரியாத நபர்களை நம்பி செயலில் இறங்குவதைத் தவிர்க்கவும். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். பூர்வீக சொத்துக்களில் பிரச்னைகள் தோன்றக்கூடும். உங்களை நம்பி வருபவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவீர்கள். உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் மிகுந்த நன்மதிப்பினைப் பெறும். உத்யோக ரீதியாக உங்கள் வேகமான செயல்பாடுகள் மேலதிகாரிகளின் ஆதரவினைப் பெற்றுத் தரும். வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். வெளியூர் பிரயாணங்களின் போது உடன் பயணிப்போருடன் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்நிய மனிதர்களால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நற்பலன்களை அடையும் மாதம் இது.
பரிகாரம் : அரசமரத்தடி நாகர் வழிபாடு.
சந்திராஷ்டமம் : பிப். 8

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் : ராசிநாதன் சுக்ரன் மற்றும் குருவின் பார்வையால் சிறப்பாக செயல்பட்டு வரும் உங்களுக்கு மாதத்தின் துவக்கத்தில் ஒரு சில தடைகள் உருவாகக்கூடும். ஜன. 29ம் தேதி முதல் ராசிநாதனின் இடமாற்ற நிலை வாழ்வியல் தரத்தை உயர்த்திப் பிடிக்கும். ஒன்பதாம் இடம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் மனதை தர்ம சிந்தனைகள் அதிகமாக ஆக்கிரமிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுவதில் அதிக அக்கறை கொள்வீர்கள். இதுநாள் வரை தடைபட்டிருந்த தனலாபமானது மெதுவாக வரத்துவங்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரத் துவங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த சிரத்தை கொள்வீர்கள். பேசும் வார்த்தைகளில் கறாரான பொருள் வெளிப்படும்.தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் இருந்த இடத்திலிருந்தே செய்ய வேண்டிய செயல்களை செய்து முடித்து நற்பெயர் அடைவீர்கள். திடீரென்று உண்டாகும் வெளியூர் பிரயாணங்கள் உடல்நிலையில் அசதியைத் தோற்றுவிக்கக் கூடும். வண்டி, வாகனங்களால் செலவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. உங்களது சிந்தனைகளும், கருத்துக்களும் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயரும்.வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு பக்கபலமாய் நிற்க நேரிடும். புதிய நண்பர்கள் சேருவார்கள். அடுத்தவர்களின் பணிகளுக்காக, ஒரே நேரத்தில் பலவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்வதால் உத்யோக ரீதியாக அலுவலகத்தில் நற்பெயரோடு பதவி உயர்விற்கான வாய்ப்பையும் காண்பீர்கள். வியாபாரிகள் அதிக அலைச்சலை சந்தித்தாலும் அதற்கான நற்பலனையும் அடைவார்கள். தொலைதூர ஆன்மிகப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். கடன்பிரச்னைகளை முடிவிற்கு கொண்டுவர முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் சுமைகளைக் குறைப்பதற்காக அக்கறையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.நற்பெயரையும் புகழையும் அடையும் மாதம் இது.

பரிகாரம் : விஷ்ணுதுர்கையை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 9

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar