Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : தை ராசிபலன் கடகம் : தை ராசிபலன் கடகம் : தை ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01

மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : எட்டாம் இடம் வலுப்பெற்றிருந்தாலும், நட்சத்ர அதிபதி செவ்வாய் வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஓரளவிற்கு சமாளித்து வருவீர்கள். உங்கள் கௌரவம் உயரும் வகையிலான சம்பவங்கள் நிகழும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனாதிபதியின் நிலை கையிருப்பைக் கரைக்கும். பொருளாதார ரீதியாக சிறிது சிரமங்கள் தோன்றலாம். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் இருந்து வரும். உடன்பிறந்தோரால் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களில் தோன்றும் பிரச்னைகளால் உங்கள் பணிகள் பாதிக்கப்படக் கூடும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிரயாணத்தின்போது உடன் பயணிப்போருடன் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் மன வருத்தத்தினைத் தோற்றுவிக்கும். முன்கோபத்தினைக் குறைப்பது நல்லது. கண்களில் நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக அமையும். நண்பர்களின் உதவியுடன் உங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அந்நியப் பெண்களால் நன்மை உண்டு. ஜன.யின் இறுதியில் செலவுகள் மேலும் அதிகரிக்கலாம். தகப்பனார் வழி சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவி வரும். தொழிலதிபர்கள் எதிர்பார்க்கும் தன லாபத்தினையும், வெற்றியையும் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிறுவியாபாரிகள் சிரமங்களை எதிர்கொண்டாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். அந்நிய தேசப் பணிக்காக காத்திருப்போருக்கு இழுபறி உண்டாகும். தனிப்பட்ட முறையில் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். இக்கட்டான சூழலில் நண்பர்களின் துணையுடன் உங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கு பெறும் வகையில் தொலைதூர பயணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால் தனி கௌரவத்தினைக் காண்பீர்கள். இடையூறுகளை சமாளிக்கும் மாதமாக அமைகிறது.
பரிகாரம் : ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : பிப். 10

திருவாதிரை : வலுப்பெற்ற எட்டாம் இடத்தின் காரணமாக நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்து வரும். திட்டமிட்ட செயல்கள் அதன்படி நடைபெறாது சற்று கால தாமதத்துடன் நடப்பதால் சிறிது சங்கடமான சூழலுக்கு ஆளாவீர்கள். இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாமல் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. வாக்கினில் நம்மையும் அறியாமல் வெளிப்படும் வார்த்தைகளுக்கு அடுத்தவர்களால் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்படும் என்பதால் கவனத்துடன் பேச வேண்டியது அவசியம். பொருளாதார ரீதியாக சற்று சிரமமான சூழல் நிலவி வரும். கையிருப்புகள் கரையத் தொடங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பிரச்னையைத் தரும் வகையில் அமையும். இந்த மாதத்தில் தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அநாவசிய குழப்பத்தினைத் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். பெண்களால் நன்மை உண்டாகும். முடிந்தவரை அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருந்து வாருங்கள். பிதுரார்ஜித சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில்ரீதியாக நண்பர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த தன லாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் தடைகளை எதிர்கொண்டு வெற்றி காண முயற்சிப்பர். திட்டமிட்டிருந்த முக்கியமான பணி ஒன்-று தடைபடும். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.  யோசிக்காமல் அவசரப்பட்டு செய்யும் காரியங்களில் நஷ்டத்தினை சந்திப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. எதிர்நீச்சலில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் நேரம் இது.
பரிகாரம் : வாராகியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம்: ஜன. 14, பிப். 10

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் : எட்டாம் இடமாகிய விரய ஸ்தானம் வலுப்பெற்றுக் காணப்படுகிறது. ஆயினும் நட்சத்ர அதிபதி குருவின் குணநலன்களைப் பெற்றிருப்பதால் பிரச்னைகளை அமைதியுடன் எதிர்கொண்டு வருகிறீர்கள். அனுபவப் பாடங்களின் மூலமாக மனதினில் தர்ம சிந்தனைகள் அதிகமாகும். நீதி. நேர்மை. நாணயம் பற்றி அதிகமாகப் பேசுவீர்கள். தர்மத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்களைக் கண்டு ஆத்திரப்படுவீர்கள். அவசரப்பட்டு பேசுவதால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். பொருள் வரவில் தடை இருந்து வருவதால் நிதி நிலைமையில் சிறிது பின்னடைவை சந்திக்கக் கூடும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் இருந்து வரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றலாம். அநாவசிய பிரயாணங்களை இந்த மாதத்தில் தவிப்பது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு சிலர் பல் வலியால் அவதிப்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மிகுந்த பயனைத் தரும். பல்வேறு வழிகளிலும் வந்து நிற்கும் செலவுகள் சற்று சங்கடத்தைத் தரக்கூடும். எதிர்பாராத செலவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிற்கும். உத்யோக ரீதியாக உடன் பணிபுரிபவர்களின் அலட்சியத்தால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அலுவல் பணியில் வேகம் காட்டுவீர்கள். வியாபாரிகள் சிறிது நாட்களுக்கு அகலக்கால் வைக்காமல் அமைதி காப்பது நல்லது. நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் ஒரு சில நேரத்தில் அடுத்தவர்களையும் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். மனதினில் தன்னம்பிக்கையும், திடமான சிந்தனையும் புத்துணர்வைத் தரும். நினைத்ததை செயல்படுத்த சிறிது காலம் பொறுமை காப்பது நல்லது. கேளிக்கை, கொண்டாட்டங்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். முன்கோபத்தினால் ஒரு சில விஷயங்களில் அவசரப்பட்டு செயல்படுவீர்கள். போராட்டமான சூழலை சந்தித்து வந்தாலும் மதிப்பும், மரியாதையும் உயரும் காலமாக அமைந்துள்ளது.

பரிகாரம் : ராஜராஜேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 15, பிப். 11

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar