Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : தை ராசிபலன் கன்னி : தை ராசிபலன் கன்னி : தை ராசிபலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
சிம்மம் : தை ராசிபலன்
எழுத்தின் அளவு:
சிம்மம் : தை ராசிபலன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
03:01


மகம் : ராசிநாதன் சூரியனின் ஆறாம் இடத்து வாசமும் உடன் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலையும் வலுவான போட்டியையும், சிறிது சிரமத்தினையும் இந்த மாதத்தில் உங்களுக்குத் தருகிறது. எந்த ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தாலும் முதலில் சில தடங்கல்களையும், பின்னர் உங்கள் தனிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவற்றைத் தாண்டி வெற்றி பெறும் நிலையையும் காண்பீர்கள். தனாதிபதியின் நிலை பொருள்வரவில் சுணக்கத்தினை ஏற்படுத்தும். சேமிப்புகள் சிறிது காலத்திற்குத் தடைபடும். நீங்கள் பேசும் பேச்சுக்களே உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்பதால் வார்த்தைகளை கவனித்துப் பிரயோகிப்பது நல்லது. ஒரு சிலர் கண் நோயால் அவதிப்படக்கூடும். புதிய மனிதர்களை நம்பி இறங்கும் செயல்களால் உங்கள் பெயருக்குக் களங்கம் விளையக்கூடும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். வண்டி, வாகனங்களால் அதிக செலவிற்கு ஆட்படக்கூடும். பிள்ளைகளால் மனக்கசப்பினை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரிகள் வலுப்பெற்றுக் காணப்படுவார்கள். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும். அநாவசிய செலவுகள் தடைபடும். பெற்றோரின் உடல்நிலையில் தீவிர கவனம் கொள்வது அவசியம். தொழில்முறையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காண வேண்டி இருக்கும். கடும் போராட்டத்தினைச் சந்தித்தாலும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். மன உளைச்சல் காரணமாக இரவு தூக்கத்தைத் தொலைப்பீர்கள். அவசரப்பட்டு செய்யும் காரியங்களால் சிரமத்திற்கு ஆளாகி வருகிறீர்கள். சுயதொழில் செய்வோருக்கு கடன்பிரச்னைகள் தலைதூக்கலாம். இடைத்தரகர்களால் சிரமத்தினை காண நேரிடும் என்பதால் முக்கியமான விஷயங்களில் நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. நண்பர்களின் வழியில் மிகவும் நம்பிய நபர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 18

பூரம் : நட்சத்ர அதிபதி சுக்ரனின் சஞ்சாரம் மனதில் ஆசைகளை அதிகமாகத் தூண்டும். மனதில் தோன்றும் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆறாம் இடம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீங்கள் அவசரப்பட்டு செய்யும் செயல்களில் இழப்புகளோடு தேவையற்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். தனாதிபதியின் வலுவற்ற நிலை பொருளதார முன்னேற்றத்தில் சிறிது தடங்கல்களை உருவாக்கக்கூடும். பேசும் வார்த்தைகள் மற்றவர் மனதினைப் புண்படுத்தக்கூடும் என்பதால் கூடுதல் கவனத்தோடு வார்த்தைகளை பிரயோகிப்பது நல்லது. உடன்பிறந்தோரால் ஒரு சில தேவையற்ற தர்மசங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகள் தோன்றும். பிரயாணங்கள் சிரமத்தினைத் தரும் வகையில் இருக்கும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் நடவடிக்கைகள் ஒருசில தொல்லைகளைத் தரக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள். தொலைதூரப் பிரயாணத்தின்போது எதிர்பாராத பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடன் பயணிப்போருடன் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோக ரீதியாக உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். சுய தொழில் செய்வோர் சிறிது சிரமத்தினைக் காண வேண்டியிருக்கும். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் இருத்தல் நலம். மனோதைரியம் அதிகரிக்கும் அதே நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முன்பின் தெரியாத நபர்களுக்கு உதவி செய்து சிரமத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். நிதானத்துடன் செயல்பட வேண்டிய மாதம் இது.

பரிகாரம் : பூவராக ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 18

உத்திரம் 1ம் பாதம் : ராசிநாதனும் நட்சத்திர அதிபதியும் ஆகிய சூரியன் பிரச்னையைத் தரும் ஆறாம் வீட்டில் அமர்வதால் பரபரப்பாக செயல்பட வேண்டியிருக்கும். எதிர்ப்பு அதிகரித்தாலும் உங்கள் தனித்திறமையின் மூலம் அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து வருவீர்கள். ஜன.யின் இறுதியில் சுக்ரனும் ஆறாம் இடத்தில் இடம் பெறுவதால் நினைத்த காரியங்கள் எளிதில் முடியாது இழுபறியில் செல்லும். மனதில் தோன்றும் ஆசைகளை உடனுக்குடன் நடத்தி முடிக்க இயலாமல் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பேசும் வார்த்தைகளில் தோன்றும் கடுமை அடுத்தவர்களின் மனதினைப் புண்படுத்தக் கூடும். சேமிப்புகள் கரையத் தொடங்குவதால் பொருளாதார நிலையில் சிறிது சுணக்கத்தினைக் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தோரின் செயல்பாடுகள் உங்களுக்கு உபத்திரவத்தினைத் தரக்கூடும். வண்டி, வாகனங்களால் செலவுகள் தோன்றும். கடன்பிரச்னைகள் தலைதூக்கும் நேரம் இது. ஆறாம் இடம் வலுப்பெறுவதால் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவும் உள்ளது. வாழ்க்கைத்துணையுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த நன்மை காண்பீர்கள். நினைத்த காரியங்களை நண்பர்கள் மூலமாக சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிப்பதோடு சிறிது மன வருத்தத்திற்கும் ஆளாவீர்கள். பூர்வீக சொத்துக்களில் பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக இந்த மாதத்தில் சிறப்பான நிலையைக் காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் கௌரவம் உயரக் காண்பார்கள். கொடுக்கல், வாங்கலில் சிரமங்கள் தோன்றக்கூடும். அடுத்தவர்களை நம்பி பொறுப்பேற்பது கூடாது. உத்யோகஸ்தர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கும் விஷயங்களால் சிரமத்திற்கு ஆளாவார்கள். மாற்று மொழி பேசும் நபர்களால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.

பரிகாரம் : தன்வந்திரி பகவானை வழிபட்டு வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 19

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar