பாலமேடு : பாலமேடு கிழக்கு தெரு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்க வலம்புரி சக்தி விநாயகர், செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜன., 24 கணபதி ஹோமம், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தன. நேற்று காலை சிறப்பு தீபாராதனைக்கு பின் சிவாச்சார்யார் ராமசுப்பிரமணியன் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி அன்னதானம் வழங்கினார்.மெய்யப்பன்பட்டி வரம் தரும் விநாயகர் கோயில், பாசிங்காபுரம் ஆதிமூல வலம்புரி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.