Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொம்பாக்கம் புதுநகரம் கோவிலில் ... வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வருமானம் சரிவு: பக்தர்களிடம் உதவி கோர திட்டம்
எழுத்தின் அளவு:
சபரிமலை வருமானம் சரிவு: பக்தர்களிடம் உதவி கோர திட்டம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
11:01

கம்பம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ’இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மகரவிளக்கு, மண்டல பூஜைகள், நவம்பர் முதல், ஜனவரி இரண்டாவது வாரம் வரை நடக்கும். கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது.மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கெனவே, கேரள அரசு, சபரிமலை கோவிலுக்கு, 70 கோடி ரூபாயை வழங்கியது. தற்போது கடும் நிதிநெருக்கடியில் இருப்பதால், கூடுதல் நிதி வழங்குமாறு, மாநில அரசை தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், ’வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும் கோவிலுக்கு, பக்தர்கள் வழங்கிய உபய பொருட்களை வங்கிகளில் வைத்து கடன் பெறவும் ஆலோசித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar