Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... காமாட்சி அமமன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் காமாட்சி அமமன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
01:02

கோவை : கோவை அருகே, குளத்தில், ஏழு, சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, பேரூர் பெரியகுளக்கரை ரோட்டில், நேற்று காலை நடை பயிற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மூன்று சுவாமி சிலைகள் கிடப்பதை பார்த்தனர். பேரூர் போலீசாருக்கு தகவல்  அளித்தனர். போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு அடி ஆழத்தில், ஏழு சிலைகள் கிடப்பது தெரிந்தது. பேரூர் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மீன் பிடிப்போர் உதவியுடன்,  உலோகத்தாலான, 2 அடி உயர மகாலட்சுமி; 2.25 அடி, விஷ்ணு துர்கை; 1.75 அடி, கருமாரியம்மன் மற்றும் சிறிய அளவிலான சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் சிலைகளுடன், 3 அடி கருமாரியம்மன்  கருங்கல் சிலையும் மீட்கப்பட்டது.

அனைத்து சிலைகளும் பேரூர் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன.உலோக, சிலை வடிவமைப்பாளர் ஒருவரை வரவழைத்த, வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகள் குறித்து கேட்டனர். அவர்,  உலோக சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை என, தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் நேரில் விசாரித்தார். கடத்தப்பட்ட சிலைகளை விற்பனை  செய்ய முடியாததால், குளத்தில் போடப்பட்டதா என்ற கோணத்தில், விசாரணை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar