Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: சித்திரை மாத ராசிபலன் தனுசு: சித்திரை மாத ராசிபலன் தனுசு: சித்திரை மாத ராசிபலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம்: சித்திரை மாத ராசிபலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: சித்திரை மாத ராசிபலன்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
11:04


விசாகம் 4ம் பாதம்:

கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடும் விசாகம் 4 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின்  பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு வாக்குவன்மை ஏற்படும். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

வணங்க வேண்டிய தெய்வம்:  சனிபகவான்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் - 16, 17; மே 13
அதிர்ஷ்டம்:  மே 1, 2

அனுஷம்:

புதிய விஷயங்களை நாடும் அனுஷம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் குறிக்கோளற்ற  பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதுாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  

வணங்க வேண்டிய தெய்வம்:   விநாயகர்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் - 17, 18; மே 14
அதிர்ஷ்டம்:  மே 3, 4

கேட்டை:

பூர்வீக விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்துறையினருக்கு பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:  முருகன்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் - 18, 19
அதிர்ஷ்டம்:  மே 4

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 17ம் தேதி பிரமாண்ட ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar