Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸகளார்ச்சனா விதி
படலம் 3: ஸகளார்ச்சனா விதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
04:06

மூன்றாம் படலத்தில் ஸகளார்ச்சன விதி கூறப்படுகிறது. ஸகளார்ச்சனம் ஸர்வாபீஷ்டமென கூறப்படுகிறது. ஆசார்யன் சவுசாசமனஸ்நான ஸந்தியாவந்தன தர்பணம் முடித்து ஆலயம் நுழைந்து பாத பிரக்ஷõளன ஆசமன பஸ்மதாரணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மசுத்தி விஷயத்தில் செய்யவேண்டிய கிரியைகள் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கரந்யாஸபூர்வம் ஆத்மாசிவயோஜநம் பூதசுத்தி, ஆத்மா சைவதநுகல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் கரன்யாஸம் அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, த்ரவ்ய சுத்தி மந்திர சுத்தி பிரகாரம் ஸம்÷க்ஷபமாக நிரூபிக்கப்படுகிறது. பின்பு த்வாரபூஜை, பேரசுத்தி பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு ஆஸந கல்பன பிரகாரம் மூர்த்தி கல்பனம் நிரூபிக்கப்படுகிறது. வித்யா தேஹகல்பனம் விசேஷமாக பிரதிபாதிக்கப்படுகிறது. ஸதாசிவன், மஹேசன், ருத்ரன் என மூன்றுவிதமாக சிவதேஹம் கூறப்பட்டுள்ளது. இதுவே வித்யாதேஹமென கூறப்படுகிறது. சிவனுடைய சமயவாயிநியான விமலாசக்தி ஸதாசவ சரீரமாக கூறப்படுகிறது. மஹேச்வரி மூர்த்தி சவும்யரூபிணி, ரவுத்ரீ மூர்த்தி, உக்ரஸ்வரூபிணி, பிரம்மா, விஷ்ணு ருத்ர, மஹேச சதாசிவர் ஆகியவர்கள் காரண தேவர்கள் ஆகும். ஸதாசிவ தேஹத்திற்காக அஷ்டத்ரிம்சத்கலாந்யாஸம் செய்யவேண்டும். ருத்ர ஈசர்களுக்கு சரீரசித்திக்காக ஏகத்ரிம்சத் கலாந்யாஸம் செய்யவேண்டும் என்று ஸ்தான விஷயங்கள் வித்யாதேஹவிஷயத்தில் பிரதிபாதிக்கப்படுகிறது.

இவ்வாறு காலாந்தக கஜாரிமூர்த்திகளின் த்யான விஷயமும் கூறப்படுகிறது. பின்பு முன்பு கூறிய மூர்த்திகளின் ஆவாஹநபிரகாரம் ஸம்÷க்ஷபமாக சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்தாபனாதிகம், பாத்யாதிகம், கந்த புஷ்பப தூபதீப நைவேத்யமும் எல்லாமும் லிங்கார்ச்சனை விதிப்படி செய்யவும் என சூசிக்கப்படுகிறது. பிறகு பஞ்சமாவரணம் அல்லது நான்கு, மூன்று, இரண்டு, ஒன்றாவது ஆவரணங்களில் இஷ்டப்பட்ட ஆவரணார்ச்சனம் முன்பு கூறியபடி உள்ள விதியாகும் என்று ஆவரணார்ச்சனை சூசிக்கப்படுகிறது. பிறகு பரிவாராலய, ஸ்வதந்த்ராலயத்தில் பலி அர்ப்பணிக்க வேண்டும். இதில் ஹோமம் நித்யோத்ஸவமாவது செய்ய வேண்டும். இங்கு கூறப்படாத சுத்த ந்ருத்தாதிகள் எல்லாம் லிங்கார்ச்சனைபடி செய்ய வேண்டும். சுத்த ந்ருத்தமின்றி எல்லா கர்மாவும் செய்யலாம் என்று கல்பிக்கப்படுகிறது. நடராஜருக்கு பிரதோஷாதிகளில் நீராஜன விதி விதிக்கப்படுவதாக சூசிக்கப்படுகிறது. உத்ஸவ ஸ்நபன தமநாரோபண பவித்ராரோஹண க்ருத்திகா தீப, வசந்தோத்ஸவ, மாஸோத்ஸவ நவநைவேத்ய கர்ம, பிராயச்சித்த ஜீர்ணோத்தாரண கர்மாக்களில் தேவருக்கு செய்யக்கூடிய விஹிதமான எல்லா கர்மாக்களும் தேவிக்கும் செய்தல் வேண்டும் என்று சூசிக்கப்படுகிறது. தேவி விஷயத்தில் பூரநட்சத்திரத்துடன் கூடிய ஆடி மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் பூர கர்மவிதி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஸகளார்ச்சனை விஷயம் கூறப்பட்டு மஹேச்வர விஷயத்தில் கவுரி. அவ்வாறே சதாசிவ விஷயத்தில் மனோண்மணியையும் அந்தந்த சக்தி மந்திரத்தினால் பூஜிக்கக் கூடிய கவுரியின் ந்யாஸ விஷயத்தில் ஷட்விம்சதி கலாந்யாஸத்தில் மூர்த்தி கல்பனம் செய்தல் வேண்டுமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக மூன்றாவது படல கருத்து தொகுப்பு ஆகும்.

1. எல்லா நன்மைகளையும் அளிக்கக்கூடிய (உருவ) ஸகள பிம்பங்களின் பூஜை முறைகளை கூறுகிறேன். சவுசம், ஆசமனம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், தர்பணம் முதலியவைகளைச் செய்துவிட்டு

2. கோயிலை அடைந்து கால்களை அலம்பி ஆசமனம் செய்து விபூதியை தண்ணீரோடு கலந்து பூசிக்கொள்ள வேண்டும்.

3. உரிய முறைப்படி திருபுண்ட்ரம் விபூதி தரித்துக் கொண்டு கரன்யாசம் செய்து சிவபாவனை செய்ய வேண்டும்.

4. பூதசுத்தி செய்து அம்ருதாப்லாவனை செய்து ஆத்மாவில் சிவனை ஆவாஹனமும் செய்து ஈசான மந்த்ரம் முதலான பிரம்ம மந்திரங்களால் கரநியாஸம் செய்ய வேண்டும்.

5. தன் உடலில் கலாநியாசம் செய்து ஈசான மந்திரத்தை சிரசிலும் தத்புருஷ மந்த்ரத்தை முகத்திலும் மாலாமந்திரத்தை தியானித்து

6. மற்றதை முன்போல் செய்து முப்பத்தோறு கலாசக்திகளோடு கூடிய நியாஸம் செய்து, அந்தர்யாகம் செய்து பிறகு ஸ்தான சுத்தியை செய்ய வேண்டும்.
சந்தனம், புஷ்பம், அக்ஷதைகள் சேர்த்து விசேஷார்க்யம் தயார் செய்து கொண்டு

7. நிரீக்ஷணம் முதலிய நான்கு ஸம்ஸ்காரங்களால் திரவயசுத்தி செய்துகொண்டு முன்புபோல் தன்னையும் பூஜை செய்துகொண்டு மந்த்ர சுத்தி செய்துகொள்ள வேண்டும்.

8. அஸ்திரமந்திரத்தால் வாயிலை ஜலத்தினால் தெளித்து (பிரோக்ஷணம் செய்து) விருஷபத்தை எதிரில் பூஜை செய்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மேல் பாகத்தில் வினாயகரையும், ஸரஸ்வதியையும்

9. நந்தி, மஹாகாளர், கங்கை, யமுனை முதலியவைகளை பூஜை செய்து கீழே அஸ்திரத்தையும், பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.

10. வாஸ்து பிரம்மாவிற்கு புஷ்பங்களை அணிவித்து அர்க்யம் கொடுத்து ஈசான மந்திரத்தால் சிவனுடைய மாலை முதலியவைகளை எடுத்து

11. வஸ்திரத்தினாலோ அல்லது தண்ணீராலோ சுத்தம் செய்து ஆதார சக்தி முதல் அனந்தன், தர்மம், அதர்மம் முதலியவைகளை வணங்கி பூஜை செய்து

12. அதச்சதனம், ஊர்த்வச்சதனம், என்ற இவைகளின் மேல் தாமரையின் கர்ணிகையில் ஹ்ருதய மந்திரங்களோடு கூடிய வாமாதி(களை) சக்திகளை பூஜித்து சிவாஸனம் பூஜை செய்ய வேண்டும்.

13. அங்கு மூர்த்தியை ஆவாஹணம் செய்து வித்யாதேஹம் கல்பிக்க வேண்டும், ஸதாசிவன், மஹேசன், ருத்திரன் என்ற மூன்றாகச் செல்லப்படும் மூர்த்தியின் பெயர்களே

14. சிவதேஹம் என்று சொல்லப்படுவதாகும். அதுவே வித்யாதேஹம் என்று சொல்லப்படுகிறது. எந்த குற்றமற்ற பரிசுத்தமான சக்தி சிவனோடு இணைந்து ஒன்றாகவே இருப்பதாக உள்ளதோ

15. அந்த உருவமே செயல் மாறுபட்டால் ஸதாசிவ சரீரமாக எண்ணப்பட்டது ஆகும். அப்படியே மஹேச்வரியின் உருவம் அழகான உருவமானதாக மஹேச்வரீ என்பதாகும்.

16. அப்படியே உக்ரவடிவத்துடன் உடையவள் ரவுத்திரி எனப்படுகிறாள். இந்த கிரியாசக்திகளுக்கு குண்டலினி சக்திதான் காரணமாக இருக்கிறாள்.

17. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், ஸதாசிவன், ஆகிய காரண தேவர்கள் ÷க்ஷத்திரக்ஞர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

18. பிரம்மா, விஷ்ணு இவர்களின் உருவமானது மாயையின் காரணம் என கூறப்படுகிறது. ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவன் இவர்களின் மூர்த்தி அமைப்பு கிரியா வடிவமாக கூறப்படுகிறது.

19. இவ்வாறாக ருத்திரன், ஈஸ்வரன், ஸதாசிவனுக்கு மூன்றுவிதமாக கூறப்பட்டுள்ளன. அவ்வாறாக சிவனுடைய சரீரத்தை ஞானமயமாக கூறப்பட்டுள்ளது.

20. அந்த மூன்று வகையான சரீரங்களின் சித்தியின் பொருட்டு மூர்த்தியை கல்பிக்க வேண்டும். ஹ்ருதய மந்திரமான ஹாம் என்ற பீஜங்களைக் கொண்டு அந்த மூர்த்தியில் பஞ்சப்ரும்மங்களை சேர்க்க வேண்டும்.

21. பிறகு சாந்தியதீத கலை முதலான கலாந்நியாசத்தை சிவனுக்கு செய்ய வேண்டும். அதன் முறை கூறப்படுகிறது. ஈஸ்வரனுடன் கூடிய சரீரத்தில் சித்தி ஏற்படுவதற்காக 38 கலைகளுடன் கூடிய நியாஸம் கூறப்படுகிறது.

22. ருத்திரன், ஈஸ்வரன் இவர்களின் சரீர சுத்தியின் பொருட்டு 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸம் செய்ய வேண்டும். 38 எண்ணிக்கையுள்ள கலாந்நியாச மானது முன்பே சொல்லப்பட்டுள்ளது.

23. 31 எண்ணிக்கையுள்ள கலாந்நியாஸத்தில் விசேஷம் சிறிது கூறப்படுகிறது. மஹேஸ்வர விக்ரகத்திற்கும், ருத்திர மூர்த்திக்கும் ஒரு சிரசும், ஒரு முகமும் ஆகும்.

24. அங்கு ஈசானமுக மந்திரத்தினால் ஸகள விக்ரகத்தில் மாலா மந்திரத்தினாலும் விசேஷமாக முன்பு போல் நியாஸம் செய்யவேண்டும்.

25. ஸதாசிவஸ்வரூபத்தை தியானம் செய்து பதினான்காவது ஸ்வரமான ஒள என்ற எழுத்தையும் ஆறாவது எழுத்தான ஊ என்ற எழுத்தையும்

26. சாந்தம் என்றதான ஹ என்ற எழுத்தையும் ஹ்ருதயத்திற்கு உட்பட்டதான ஹாம் என்ற எழுத்தையும் சேர்த்து வித்யாதேகம் கல்பிக்க வேண்டும் (ஓ ஹாம் ஹளம் வித்யாதேகாய நம:) இவ்வாறாக ஸதாசிவ பிம்பம், லிங்கம் இவைகளில் பூஜிக்க வேண்டும்.

27. மஹேசன், நிருத்த மூர்த்தி, முதலியவைகளின் தியானத்தை அமைதி உருவமாக தியானித்து மஹேஸ்வரனுடைய மந்திரத்துடன் கூடியதாக பிம்பம் அமைக்கும் முறைப்படி தியானிக்க வேண்டும்.

28. காலாரிமூர்த்தி, கஜஸம்ஹாரமூர்த்தி இவைகளை ரவுத்ர சொரூபமாக தியானித்து அந்தந்த மூர்த்தி மந்திரத்தோடு வித்யாதேகம் கல்பிக்க வேண்டும்.

29. மஹேசன் ருத்திரமூர்த்தி இவர்களுக்கு ஸதாசிவனை பூஜிக்க வேண்டும். இவர்களுடைய வித்யாதேஹ கல்பனையிலும் மந்திரம் ஸதாசிவனுக்கு போல எல்லா இடங்களிலும் சிவனேதான் ஆகும்.

30. அந்த ஆவாஹண மந்திரம் மந்திரோத்தார விதியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையிலேயே ஆவாஹணம் செய்ய வேண்டும். முன்பு கூறப்பட்டபடியே சிவனுடைய மூன்று தேஹங்களிலும் ஆவாஹணம் செய்து

31. ஸ்தாபனம் முதலியவைகளையும் பரமேஸ்வரனுக்கு செய்து பிறகு பாத்யம், (ஆசமனம்) சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் முதலியவைகளையும் கொடுத்து

32. தாம்பூல ஸமர்பணம் வரையில் அனைத்தும் நிஷ்களார்ச்சளையில் போல் செய்ய வேண்டும். ஐந்து ஆவரணம், நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆவரணத்தோடு

33. இஷ்டமான ஆவரணத்தோடு கூடியதாக முன் சொன்ன முறையில் ஆசார்யன், பூஜை செய்ய வேண்டும் பரிவாரங்களோடு கூடியிருந்தால் அதில் பலியிட வேண்டும்.

34. ஹோமமும், நித்யோத்ஸவமும் ஸ்வப்ரதான ஆலயத்தில் செய்யவேண்டும். சுத்த நிருத்தம் முதலியவைகள் எவை எவை சொல்லப்படவில்லையோ, அவைகளை நிஷ்கள சிவனுக்கு சொன்னதுபோல் செய்யவேண்டும்.

35. திவார பாலார்ச்சனையோடும், பலி ஹோமம் இவைகளோடு கூடியதாகவும், சுத்த நிருத்தத்தை தவிர்த்தோ எல்லா செயல்களையும் செய்ய வேண்டும்.

36. பிரதோஷம் முதலியவைகளில் நடராஜருக்கு நீராஜநம் செய்யவேண்டும். உத்ஸவம், ஸ்னபநம், மரிக்கொழுந்து சாத்தும் விழா முதலியவைகளிலும்

37. பவித்ரோத்ஸவம், கிருத்திகாதீபம், ஸம்வத்ஸர உத்ஸவம் வஸந்த உத்ஸவம், முதலியவைகள்

38. அந்தந்த மாஸத்தில் மாஸோத்ஸவம், பிராயச்சித்தம், நவநைவேத்யம் (தைபொங்கல்) ஜீர்ணோத்தாரணம், முதலியவைகளை (ஆசார்யர்கள்) செய்ய வேண்டும்.

39. ஸ்வாமிக்கு கூறப்பட்ட எல்லா பூஜை முறைகளையும் தேவிக்கும் செய்யவேண்டும். மேலும் ஆடி மாத பூரநக்ஷத்திரத்திலும் ஐப்பசி மாத பூரநக்ஷத்திரத்திலும்

40. ஆதிசக்திக்கு அன்னம், பழம், புஷ்பமிவைகளால் பிம்பம் முழுவதும் நிரப்பி செய்யப்படும் பூஜையான பூரகர்மாவையும் செய்யவேண்டும். மஹேச்வரனின் சக்தி, கவுரி என்றும் ஸதாசிவனின் சக்தி மனோன்மணி என்பதுமாகும்.

41. மனோன்மணீ மந்திரத்தால் மனோன்மணியில் பூஜை செய்யவேண்டும். கவுரி மந்திரத்தால் கவுரியை இருபத்தாறு கலைகளோடு கூடியவைளாய் பூஜை செய்ய வேண்டும்.

42. ஆதி சக்தியின் மந்திரத்தினால் ஆதி சக்தியை பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்திரத்தில் உருவ பிம்ப பூஜை முறையாகிய மூன்றாம் படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar