Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கனவுகள் முறை
படலம் 22: கனவுகள் முறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
03:06

22 வது படலத்தில் கனவுகள் முறைப்பற்றி கூறப்படுகிறது. முதலில் தீட்சைக்கு முன்பும் விருப்பமான செயல்களிலும் உயர்ந்ததான கனவு காணவும் கூறப்படுகிறது. யாமம் என்ற கால முறைப்படி கனவின் பயன் கூறப்படுகிறது. சுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்கள் கூறப்படுகின்றன. பிறகு அசுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்களும் நிரூபிக்க படுகின்றன. கனவில் தேவர்கள், பித்ருக்கள் முனிவர்கள் பிராம்மணர்கள் அரசன் இவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன் படியே பயனும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தாது என்ற தோஷத்தை கொடுக்க கூடிய சொப்பனங்களுக்கு சுபம் அசுபம் என்ற அறிவிப்பு இல்லை என கூறப்படுகிறது. இவ்வாறு முன்பு காணப்பட்ட விஷயத்தை உடையவும் முன்பு கேட்கப்பட்ட விஷயத்தை உடையவும் ஆகிய சொப்பனத்திற்கும் நல்லவை, தீயவை என்ற பயன் இல்லை என கூறப்படுகிறது. ஜாதியில், வயதால், பணத்தினாலோ, சுத்தத்தினால், தர்மத்தினால், கல்வியாலோ யார் உத்தமனோ அவனே முதலில் நல்லவை தீயவையோ சொப்பனத்தை ஆசார்யனிடம் தெரிவிக்க யோக்யனாகிறான் என கூறப்படுகிறது. முறையாக ஒரு ஆசார்யன் சிஷ்யர்களின் ஒருவருக்கொருவர் ஆசரிக்க வேண்டிய நியமங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 22வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிராம்மணோத்தமர்களே! ஸ்வப்னாத்யாயம் பற்றி கூறுகிறேன் கேளும். தீøக்ஷக்கு முன்போ, காம்ய விஷயத்திலோ உத்தமமான ஸ்வப்நத்தை அறிய வேண்டும்

2. அதில் முதல் யாமத்தில் ஸ்வப்நம் ஏற்பட்டால் அந்தந்த காலத்தில் தன்னுடைய பல பாவத்தை கொடுக்கக் கூடியதாக அறிய வேண்டும்.

3. முதல்யாம ஸ்வப்னம் ஒருவருடத்தில் சித்தியாகும். இரண்டாம் யாம ஸ்வப்னம் ஆறுமாதத்தில் ஸித்தியாகும். மூன்றாம் யாமக் கனவு.

4. ஒரு மாதத்தில் ஸித்தியாகும். நான்காம் யாம ஸ்வப்நம் சந்தேஹமின்றி (நிச்சயம்) சீக்கிரமாக பலனைக்கொடுக்கும்.

5. காந்தியுள்ள சூர்யன், நட்சத்ரங்களுடன் கூடிய சந்திரன், பிரதீப்தமான அக்னிஹோத்ரம் ஜ்வாலையுள்ள தீபம்

6. தாய், தந்தை, மனைவி, புத்ரர்கள், ஸஹோதரர்கள், நல்ல ஜனங்கள் இவர்களை ஸ்வப்னத்தில் கண்டால் குறைவில்லாத லட்சுமி கடாக்ஷம் அடைகிறான்.

7. சந்திரன், சூர்யன், நட்சத்ரமிவைகளின் குறைவும், மாறுதலும், அபகரிப்பதாகவும் இவைகளின் தாரணம் போலும் ஸ்வப்னம் கண்டால் ராஜ்யத்தை அடைகிறான்.

8. வெண்மை நிற புஷ்பமாலை, வெண்மை நிறப்பறவைகள், ஸ்வர்ண மயமான பறவைகள் இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைகிறான்.

9. கந்தர்வ நகரம், தேவ, கந்தர்வ ஸ்த்ரீகள் (பெண்கள்) ஸ்வப்னத்தில் கண்டால் அதிகமான லட்சுமி கடாக்ஷமடைகிறான்.

10. ஸ்வர்ணமயமான குடை, வெண்மையான மாலையணிந்ததாகவும் மாமரம் முதலிய புனிதமான விருக்ஷம், இவைகளை ஸ்வப்னத்தில் கண்டாலும்.

11. அந்த விருக்ஷங்களில் ஏறுவதாகவும், அவைகளின் பழங்களை பறிப்பதாகவும், அந்த பழங்களை சாப்பிடுவதாகவும் மலை, மாளிகை, குதிரை, யானை.

12. பசு, சிங்கம், காளைகளை தரிசித்தாலும் அவைகளில் ஏறுவதாகவும் ஸ்வப்னம் கண்டாலும் சிம்மா சனம், யானை, பல்லக்கு இவைகளில் ஆரோஹணம் செய்வதாகவும் ஸ்வப்நம் கண்டாலும் சுபமாகும்.

13. ஸூரியன், சந்திரன், அக்னி சமுத்ரம், ஆகாயம், பூமி, மலை, தர்சனத்தாலும், ஆழமான சமுத்ரத்தை தாண்டுவதாகவும், காட்டையும் ஜலத்தையும் தாண்டுவதாகவும்

14. எருமை மாடு, பசுக்களை துன்புறுத்தாமல் பால் கறக்கும் கர்மாவையும், தன்னுடைய இடத்தில், பெண் சிங்கம், பெண் யானை அதன் பந்துக்களுடன்

15. பிரஸவம் ஏற்பட்டதாகி ஸ்வப்நம் கண்டால் அவைகளுக்கு ஸ்வப்ன பலன் ஐஸ்வர்ய மேற்ப்படுத்தல் ஆகும். காராம் பசுவின் பாலை அதன் கன்றுகுட்டி போல் விளையாட்டாக குடிப்பதாக கண்டாலும்

16. தயிர், பக்வமாகாத மாம்ஸம், நல்ல பாயஸ பக்ஷணமும் இவைகள் கிடைத்தாகவும் ஸ்வப்னம் கண்டாலும்

17. அம்ருதம், ரத்தம், கள் இவைகளின் பானமக (குடித்தல்) மீன் சாப்பிடுதலும் அல்லது இவைகளின் தர்சனமும் ருதிர (ரத்த) ஸ்னானமும்

18. பசுமாட்டின் கொம்பினால் அபிஷேகமும், சந்திரகாந்தியால் ராஜ்யாபிஷேகமும் இவற்றை ஸ்வப்னத்தில் தரிசத்தால் சுபமாகும்.

19. பசுமாடு, சிங்கம், யானை இவைகளை சண்டையில் வெற்றியடைந்து பெருவது போலும் சாஸ்திரங்களை படிப்பது போன்றும் அன்னத்தை புசிப்பது போன்றும்

20. நாபியில் புல் மரமுண்டாவதாகவும், புஷ்பம், தீர்த்தம், கேசம் இவைகள் கையில் ஏற்பட்டது போலவும், வெண்மாலை தரித்தாகவும்

21. வெள்ளை வேஷ்டி தரித்த பிராம்மண தர்சனமும், அவர்களின் சுபமான ஆசீர்வாதமும் வெண்மையான பழங்களின் தர்சனமும், விசிறி, கொடி தர்சனமும்

22. தாமரைக்குடையும், மணிகளாலான கண்ணாடியையும், தீபம், சாமரம் ஆயுதம் தாமரைபுஷ்பம் இவைகளையும்

23. சுத்தமான ஜலதர்சனமும் தடாக தர்சனமும், ராஜாதர்சனமும் அவருடன் பேசுவது போல் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

24. பிரதிமையுடன் கூடிய தேவலாயத்தையும் வெண்மையான பசுவையும் ஸமுத்ரம் (கடல்) ஜலமுள்ள நீர்வீழ்ச்சியையும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைவான்.

25. ஸமுத்ரம், நீர்வீழ்ச்சி இவற்றின் நீரை குடிப்பதாக ஸ்வப்னம் ஏற்பட்டால் ராஜ்யமடைகிறான். சங்காபரணமும், ஸ்வேத (வெண்மை) வஸ்த்ர புருஷனையும்

26. அழகும், இளமையுள்ள பெண்களையும், அந்த லக்ஷணமுள்ள லக்ஷ்மியை ஸ்வப்னத்தில் தர்சித்தால் உத்தமமான செல்வத்தை அடைகிறான்.

27. பாம்பை பிடிக்கும் குமாரனையும், யானையையும் ஸ்வப்னத்தில் கண்டால் புத்திரனையடைகிறான். புல்லையும், அதிக தான்யத்தையும், அக்னியுடன் கூடிய வீட்டையும்

28. ஸ்வப்னத்தில் பார்த்தால் லக்ஷ்மியை அடைவான். மின்னலையையும் ஜலமுள்ள பூமியையும் சத்ருநாசனமும், சத்ருக்களை கொல்வதாக வேண்டும்.

29. விவாததூதங்களில் வெற்றியும், யுத்தத்தில் விஜயத்தையும் கண்டால் லக்ஷ்மியை அடைகிறான், பூமியில் சந்திரன் பிரவேசனமும்

30. சுத்தமான ஆகாயம் உணவை அடைவது, இறந்தவன் அக்னியை கிரஹிப்பது இவைகளை கண்டால் அரசத்தன்மையை அடைகிறான்.

31. வீணை முதலிய நரம்பு வாத்யவாதனத்தை மனிதன் ஸ்வப்னம் கண்டால் சுகத்தை அடைகிறான். மரத்தை தாண்டுவதும், அழுவதும் சுபத்தை கொடுக்கும்.

32. அந்நிய ஸ்தீரீகளை ஸ்வப்னத்தில் காண்பது லாபத்தையும் அவர்களின் ஆலிங்கனமும் சங்கிலிகளால் கட்டுண்டு இருப்பது போலும், தான்யம், தனது சரீரம் எரிவது போன்றும்

33. சரீரத்தை விட்டு வெளியில் நிற்பது திசைகள் தாறுமாறாக சுற்றுதல் போன்றும், தானாக வந்த பாம்பினாலோ சிங்கத்தினாலோ (புசிப்பதாக) தன்னை கண்டாலும்

34. பயிர்களின் தர்சனமும் ஹ்ருதயம், தலை இவைகளின் தர்சனமும் ரத்னகற்களாலான பாத்திரத்திலும் வெள்ளி பாத்திரத்திலும் போஜனம் செய்வதும்.

35. ஸ்வர்ணமயமான இலையில் தாமரை இலையில், தயிரன்ன போஜனமும், குதிரையில் (கணைத்தல்) சப்தமும், வெற்றியடை, சாப்பிடு என்ற சப்ததையும் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

36. முத்ரை, வண்டுகூட்டம், மழை, இவைகளின் ஸ்வப்னதர்சனம் சுபமாகும். பிண்ணாக்கு, விராட்டித்தூள் இவைகளை கண்டால் சுபமாகும். தன் வீடு உயர்ந்ததாகவும் கண்டால் சுபமாகும்.

37. பந்துக்களுடனும், பிரகாசிக்கிறதன்னை வீட்டில் இருப்பவனாகவும் மங்களரமான அங்குரங்களையும், (முளைப்பாலிகை) கல்வி அளிக்கிற சிவாகமத்தையும்

38. ரத்தத்தால் சிகப்பான கால்களையும் (பாதம்) தோலையும் ஸ்வப்னத்தில் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் சீக்கிரமாக ஐஸ்வர்யத்தையும் பல குழந்தைகளையும் அடைகிறான்.

39. எவனுடைய வலக்கை வெட்டப்பட்டு ரத்தத்துடனாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ, அவன் புகழையும், ஆயுளையுடைய குழந்தையையும் சீக்கிரமாக அடைகிறான்.

40. எவன் தலையை ரத்தமுடையதாகவும், வெட்டப்பட்டதுமாக ஸ்வப்னம் காண்கிறானோ அவன் க்ஷிப்ராரோக்யமும் பணத்தையும், அபிவ்ருத்தியையும் அடைகிறான்.

41. ஸ்வர்ணமயமாக சரீரத்தை ஸ்வப்னத்தில் தர்சித்தால், ஸர்வாபரண பூஷிதராகவும் ஸ்வப்னத்தில் கண்டால் தனதான்யத்தை அடைகிறான்.

42. கடைவைத்து ஜீவிப்பவனாக தன்னை ஸ்வப்நத்தில் பார்க்கிறவன், கடைவ்யாபார அபிவிருத்தியையும், ஆயுளையுமடைகிறான்.

43. சக்ரம், பூர்ணகும்பம், ஸ்ரீவத்ஸம் ஸ்வஸ்திகம் இவைகளையும், ஸோமபானம், குடிப்பதாகவும் ஸ்வப்ன கண்டால் விருப்பப்பட்ட பலனையடைகிறான்.

44. சிவாகமாதி சப்த சிரவணத்தை ஸ்வப்நத்தில் கண்டால் பணத்தைக் கொடுக்கும், குரு, ஆக்ஞை ஆகமம், தேள், தர்சனமும் சுபமாகும்.

45. தேவஸ்த்ரி, மருத்கணஸ்திரீ, பிராம்மண ஸ்த்ரீ இவர்களோடு பேசுவது போல் ஸ்வப்நம் கண்டால் சுபமாகும். தாம்பூலம், மை, பில்வம், குங்குமம், மண்டலம் இவைகளையும்

46. செங்கல் செய்வது போலும் சுவர், வீடு அமைப்பது போலும், நந்தவனம் அமைப்பது போல் காண்பது சுபமாகும்.

47. செல்லக்கூடாத இடங்களுக்கு செல்வதாகவும் சரீரம் முழுவதும் அம்பு பந்தனமாகவும் பந்துக்களோடு பணத்தை பங்கிட்டுக் கொள்வதாகவும் கன்னிகைக்கு கணவனை அடையச்செய்தலும்

48. ஸ்னாநம் சிவார்ச்சனம், அக்னிதர்பணம், நல்லோர் தர்சனம், கணங்களின் தர்சனம், அறிஞர்களின் தர்சனம், அம்ருதபானம் ஆகாயத்தில் பறப்பது போல் (கனவு)

49. இவ்வாறானவைகளை, ஸ்வப்னத்தில் தர்சித்தால் சுபத்தின் அறிகுறியாகும். பூமி, வஸ்த்ர லாபம், கட்டில், படுக்கை, வஸ்திரம் எரிவதாகவும்

50. ஆஸனம் எரிவதாகவும், படகில் ஏறுவதாகவும் புதிய வெண்மையான ஆடையை தரித்தாகவும் சுத்தமான அன்னம் புசிப்பதாகவும்

51. தேனீ, தாமரை இவை ஜனிப்பதாகவும், பேன் இவைகளை அழிப்பதாகவும் சங்க பத்மநிதி லாபமும் சுபமான ஸ்வப்னமாக கூறப்படுகிறது.

52. பார்த்த பொருள் கிடைக்காததாகவும் அடைந்த (கிடைத்த) பொருள் அபஹரிக்கப்படுவது போலும் ஸ்வப்னம் கண்டால், விருப்பமில்லா அறிகுறியாகும்.

53. லிங்கம், பிரதிமை பின்னமானதாகவும், ராஜா மரணமடைந்ததாகவும் பிண்டிகை அரசி, ராஜ்யத்தின் ஸ்தானங்களின் குழப்பமேற்படுதலை போலும்

54. பந்துக்களின் அழிவையும், புத்ரநாசத்தையும், அக்னிபிரவேசம், கையில் கிடைத்த பொருள் பழம் அழிந்தது போலவும், விபூதி வெல்லம் பழம், காய்கறி இவைகள் கையிலிருந்து நழுவியதாக கனவு கண்டால் விருப்பத்தை தராததாகும்.

55. வெளிதேசத்திற்கு செல்வது போலும், ஜாதியிலிருந்து நழுவதலையும், வியாதி பீடிக்கப்பட்டது போலும், மேல்தூக்கிய விகாரமான பல்லையும், அழுக்குடைய தன்மையையும் கண்டால் அபசகுனம்.

56. தங்கம், வெள்ளி இவைகள் நெருப்பு, மூத்ரம், மலம் இவைகளிலிருந்து வெளிவந்ததாக கண்டால் அசுபமாகும். தலையில் வெண்கலப் பொடியையும் நிர்வாணம், அழுக்குதுணி.

57. எண்ணை தேய்த்துக் கொள்வது போலும், கீழே விழுவது போலும், உயர்ந்த ஊஞ்சலில் ஏறுவது போலும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். சிகப்பு புஷ்பமரம், சண்டாளன், வேடதர்சனம்

58. பக்வமாம்ஸத்தை புசிப்பது போலும், எண்ணை ரத்தம் இவற்றை கனவில் கண்டாலும் நர்தநமாடுதல், விழுங்குவதாகவும் தனக்கு விவாஹம் (திருமணம்) ஏற்படுவது போலும், பாடுவதுபோலும்

59. நரம்பு மீட்டி வாசிக்கும் வாத்யமல்லாத வாத்யங்களை இசைப்பது குளிப்பது கோமய (பசுமூத்ரம்) ஸ்நானம்

60. முடவன், அன்னம், தாயாரின் மடியில் இருப்பதாகவும் காண்பது அசுபமாகும். (சுடுகாடு) சிதையில் ஏறுவது, மின்னல் விழுவதாக வேண்டும்

61. சூர்யன், சந்திரன், நட்சத்ரங்கள் விழுவதாக ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். ஆகாயம் அந்தரிக்ஷம் பூமி இவைகளின் விழுதலை தர்சித்தாலும்

62. தெய்வம், பிராம்மணர்கள், அரசன், குருக்களின் (ஆசார்யர்களின்) கோபம், குமாரியை ஆலிங்கனம் செய்வதாகவும், புருஷர்களின் மைதுனத்தையும்

63. தன்சரீர குறைவையும், விக்கல், வாந்தி எடுத்தலையும் தெற்கு நோக்கி செல்வதாகவும் தொப்பூழ் வியாதி இருப்பதாகவும்

64. வீடுகள் விழுவதாகவும், வீட்டை பெருக்குவதாகவும், பிசாசு, ராக்ஷஸர்கள், குரங்கு மனிதர் இவர்களாலான பீடையையும்

65. பிறரால் உண்டானதும் அதனால் துக்கம் ஏற்பட்டதை போலும், காவியுடை அணிந்ததாகவும் காவியுடை அணிந்த பெண்களுடன் விளையாடுதலை செய்வதாக வேண்டும்

66. அவர்களுடன் ஸ்நேஹம், பானம், குளித்தல், சிவப்பு புஷ்பமாலை தரித்தல் விளையாடுவது நக்குவது வெடிப்பு பசி, தாகத்தால் பரிச்ரமம்

67. நட்சத்ரங்கள் கொடிகள் அருவிகள் செல்லுதலும் மீசை, தாடி கேசவபனம், பிரதாபத்தில் ரஜ்ஜு விடுபடுவதாகவும்

68. நகத்தை நீட்டாக வளர்ப்பதும் ஸ்த்ரீகளை ஸேவிப்பதாகவும் உத்ஸவத்தில் விரூபநரனால் சரீரத்தை ஹிம்சிப்பதையும்

69. பசு, புழு, பறவைகளின் ஸ்தம்பித்தது போலும் மரணத்தையும், தாண்டுவதும், வெடிப்பும் வெளியில் செல்வதுபோலும் ஸ்வப்னம் ஏற்பட்டால் அசுபமாகும்.

70. ஜது பாண்டத்தினால் ஸரஸ்ஸில் விளையாடுவது, நர்த்தனம், செய்வதும் திரவ்ய நாசமாகும். நண்பஹாநியும், நண்பவியோகமும் கருப்பு வஸ்த்ரதாரியும்

71. வெட்டுபட்டகையையும், தாமரையை அபஹரிப்பதும். கிழிந்த கந்தலான வஸ்த்ரத்தையும் கோயில், வீடு, மாடியிலிருந்து இறங்குவது போல் காணும் கனவு அசுபமாகும்.

72. காது, மூக்கு முதலிய இடங்களில் ஸர்ப (பாம்பு) பிரவேசமானது போலும் பருத்தி, எள், கிழங்கு, இரும்பு முதலிய உலோகம் கிடைப்பதுபோலவும்

73. ஸ்வஸ்த புருஷனுக்கு வியாதி ஏற்பட்டது போலும், வியாதிஸ்தன் மரணமடைந்து போலும், கொடி பின்னமானதாகவும், குடைபின்னமானதாகவும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும்.

74. ஒருவரின் தாமரையை தரிப்பது அசுபமாகும். சிரிப்பதும், எள் சாதத்துடன் சாப்பிடுவதும்

75. கீழே தொங்குகிற சிரஸாகவும் அந்த தலையோடு தைலஸ்னானம், செய்வது போலும் பல் உடைந்தது போலும், யானையும், பூமியும், அக்னியால் எரிந்ததாகவும்.

76. மரங்கள், மலை இவைகளின் பீடத்தில் கருப்பிரும்பு, பீடத்தில் இருப்பதாகவும், தேர் கருப்பாக ஆனதாகவும் தேர் கழுதையோடு கூடியதாகவும்

77. வெளியில் செல்வதாகவும், கட்டப்பட்ட கழுத்தாகவும், குள்ளநரி பீடை, ஸர்பபீடனம் நிருத்தம் ஸமஜமில்லததாகவும், நாபிக்கு கீழ் பிரதேசங்களில்

78. புல், மரம், புசுக்கள் உண்டானதாகவும், விளையாடுதாகவும் ருத்ராகாரமாக, கழுதை, குரங்கு, பாம்பு, ஒட்டகம் இவைகளின் போகத்தையும்

79. மற்ற ஸத்வர்களால் இஷ்டமில்லாத சரீரத்தில் பூசுவதும், அசுபமாகும். கோமயலேபனமும், எண்ணை பசையாலும் சேர் குழம்பிய ஜலங்களால் பூசிக்கொள்ளுதல் வேண்டும்.

80. நாக்கு, கைகளின் நகம், ரோமவிச்சேதனம் ஸ்வப்ன தர்சனமும் அசுபமாகும். பாம்பு நம் சரீரத்தின் மேல் ஏறுதலும், நம்மை நுகர்வதும் போல் ஸ்வப்நம் கண்டால் நல்லதல்ல

81. நாய்களாலும், விகாரமான முகமுள்ளவர்களாலும் மிகவும் முகர்ந்ததும், தனக்கு முன் சேர்ந்து இருப்பதாகவும் ஸ்வப்னத்தில் கண்டால் துக்கத்தை அடைகிறான்.

82. எவனுடைய அங்கம் முழுவதும் பிரவிரஜித பிரேதங்களால், குப்புறசயமனமாகவும் ஸ்வப்னம் கண்டால் சமீபவாசியான யமதூதர்களால் இழுக்கிப்படுகிறான்.

83. சிற்றிலவை (இலவமரம்) புரசு, குளிர்ந்த பூவரசு, தேவதாருவிருக்ஷம், புஷ்பங்களோடு கூடியதாகவும் யார் ஏறுவதாக ஸ்வப்னம் காண்கிறானோ

84. இம்மரங்கள் உலர்ந்து வறண்டு போதலையும், பிரமேயமுள்ளவர்கள் தீர்த்தபானமும் செய்வதற்காகவும், வெண்குஷ்டரோகிகள், மஞ்சள் போஜனமும்

85. ரத்த பித்தம், குடிப்பதாகவும் ரத்தக் கலராக இருப்பது போல் தர்சித்தால் அழிவடைகிறான். ஸ்வப்நத்தில் உடைந்தவானத்திலிருந்து இறங்குவது போலும் காண்பது அலக்ஷ்மியைகொடுக்கும்.

86. சூர்ய சந்திர நக்ஷத்ரங்களின், அசுபத்தத் தன்மையை காண்பது அசோபனமாகும். தாமரை ஹவிஸ் கன்னிகை இவர்கள் ஆகாயத்திலிருந்து ஏற்பட்டதாகவோ.

87. கிருஹங்களின் (ஆழ்வும்) கிரஹணமும், ராஜாவிற்கு மரணம் மேற்படுமாகும், அசுபமாகும். அசுபங்களின் தர்சனமும், அவைகளால் ஆலிங்கனம் செய்யப்பட்டதும்

88. காக்கை, கழுகு, பருந்து, பிசாசு, ராக்ஷஸர் பிரதிமை விழுவதாகவும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் துக்கத்தை அடைகிறான்.

89. விழுந்ததும், மேலெழுந்துமான, கொடி, மலை, காளை, வீடு, பெரியசுவர் இவைகளை ஸ்வப்னத் தில் கண்டால் பிரதானமானவர்க்கு மரணமேற்படும்.

90. அணைந்த தீபம், வண்ணான், தூது செல்பவன், வர்ணம் தீட்டுபவன், மலேச்சர், அந்த்யஜர், கருப்பு பல், துர்முகர் இவர்களை தர்சித்தால்

91. கபால, பைத்ய வேஷ புருஷனையோ, ஸ்த்ரீயையோ, சூலத்துடன் கூடிய மானையோ ஸ்வப்ந முடிவில் தர்சித்தால் உடனே மரணமேற்படும்.

92. கொல்வதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்டால் அதே பலிதமாகும். குதிரை, ஒட்டகம், கழுதை, எருமை, நாய்

93. ஓநாய், பெண் எருமை, எண்ணை, கெட்ட நிறம், காக்கை, நரி, காளை, பன்றி, பூஜை, ஆந்தை, கருநிற ஸர்ப்பம்

94. கரும்புழு, கரும்பசு, இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் பயமேற்படும். மேற்க்கண்ட பிராணிகளை ஸ்பர்சித்தாலும், கிரஹித்தாலும் ஆரோஹித்தாலும்

95. ஸ்வர்ண விருக்ஷத்தை ஸ்வப்நத்தில் தர்சித்தாலும், மரணமேற்படும், அக்னி, வாஹனம், தேர், குடை முதலியன பின்னமேற்படாது போலும்.

96. விதவையை, பார்த்தல், விதவை சங்கமுமாக தர்சித்தால் தனக்ஷயமேற்ப்படும். தான் எரிந்து புகைவதாகவும் சிரஸை முண்டநமாகவும்

97. அந்நியர்களால் கட்டியதாகவும் சண்டை போட்டதாகவும் தர்சித்தால் பயமேற்படும். கஞ்சி, மது, குடிப்பதாக தர்சித்தால் தனநாச மேற்படும்.

98. அரிசி, பக்வமாம்ஸம், உமி, நெருப்பு, பயறு, உளுந்து, மிளகு, கடுகு இவைகளை ஸ்வப்னத்தில் கண்டால் அசுபமேற்படும்.

99. குண்டங்களில் குதிப்பது, விருப்பமில்லாதவைகள், கேச விகீர்ணத்வம் (தலைமயிரை அவிழ்த்து போட்டுக் கொள்ளுதல்) திரி, நல்லெண்ணை, மை, முதலியவைகளை பூசிக்கொள்வது போல் கனவு கண்டாலும்

100. இருட்டில் படுத்திருப்பதும், பெரிய வழியில் செல்வதாகவும் ஸன்யாஸி பிரேதங்களோடும், முட் புதர்களில் நுழைவதாகவும்

101. (நட்சத்ரத்தை) தாரத்தை பக்ஷிப்பதாகவும், பிணத்தை பக்ஷிப்பதாகவும் சிகப்பு வர்ணத்ரவ்யம் கிருஷ்ணவர்ணமாவதாகஸ்வப்நம் கண்டால் உயர்வில்லை என்பதாகும்.

102. கிருஷ்ண வஸ்த்து சிகப்பு வஸ்துவானால் அசுபமாகும். வேறுவிதமாக ரத்தத்திலிருந்தும், தாமரையிலிருந்து புரசமரத்திலிருந்தும் ரக்த சந்தனத்திலிருந்துமாக கருப்பு பொருள் ஏற்பட்டாலும்

103. அவ்வாறே, வண்ணான், வர்ணம் தீட்டுபவன், தூதன், ம்லேச்சன், பாஷண்டன் இவர்களை கனவில் கண்டால் அவனுக்கு அசுபமேற்படும்.

104. பாம்புப்புற்று தர்சனம், காய்ந்த விஷவ்ருக்ஷ தர்சனம், பூதங்களின் அழுகை, க்ஷணநேரத்தில் மரம் விழுதலும் இஷ்டமில்லாததாகும்.

105. தேவதைகள், பிராம்மணன், பித்ருக்கள், யோகிகள், அரசன் இவர்களுடன் கனவில் யார் பேசுகிறானோ அவன் அவ்வாறே ஆகும். (நடக்கும்)

106. பிராத்திக்கிற கர்ம விபாகம் சுபாசுபத்திற்கும், ஸ்வப்னத்தில் லிங்கம் தர்சித்தால் தாது லிங்கம் தோஷமில்லை.

107. எந்த சிறந்ததாதுவும் தாதுவால் தூஷிக்கப்பட்டும் அந்த விகாரமாக ஸ்வப்நத்தில் பிரத்யக்ஷமாக காண்பது போல் காண்கிறானோ

108. யார் தூங்கியவனாக பொருளை எடுத்து தர்சித்ததை கேட்டதை, அதே சிந்தனை ஸந்ததியாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ ப்ரத்யக்ஷமாக பிரகாசிப்பது போல் அனுபவிக்கிறான்.

109. சுபாசுபமான இருவகை ஸ்வப்நவிக்ஞானம் ஆகமத்தில் அபிப்ராயமேதுமில்லை. தர்சன தொகுப்பின் ஞானம், ஆகாயம் வியாபித்தது போல் பிரகாசமாகும்.

110. ஸ்வப்நத்தில் சுபாசுபமாக, யார்சமமாக காண்கிறானோ, அவன் ஒருமைப்பாட்டை விடுபட்டவனாகிறான். அது உண்மையாகும், இது ஒன்றும் விசேஷமில்லை.

111. சுபம், அசுபம், ஆனஸ்வப்னங்களை ஆசார்யனிடத்தில் தெரிவிக்க வேண்டும். பிராம்மணாதி வர்ணக்ரமமாகவோ வயதுக்ரமமாகவோ, பொருளாலோ

112. ஒழுக்கத்தினாலோ, தர்மத்திலோ, வித்யையினாலோ யாருக்கு ஸ்ரேஷ்டத்வம் உள்ளதோ அவனிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.

113. இந்த வரிசைக்ரமமாகவே தங்களுடைய ஸ்வப்நத்தை தெரிவிக்க வேண்டும். ஆசார்யனுடைய அனுக்ஞையாலே அவைகளின் ஜ்யேஷ்டத்தை அறிய வேண்டும்.

114. பிராம்மண ஸமயதீøக்ஷ ஸம்ஸ்காரத்துடன் கூடியவன், நிர்வாண தீøக்ஷயோடு கூடியவன் சூத்ரனும், ஒரே பாத்தியதையுடைய இருவரும்

115. மேற்கூரியவர்களின் நடுவில் எவனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனை குருவை ஆச்ரயிக்க வேண்டும். முதலில் ஸமானதீøக்ஷயுடன் இருந்தாலும்

116. எங்கு நியோக மேற்படுகிறதோ, அந்த சிசுவே முன்னதாகவே உத்தம குருவை நமஸ்கரிக்க வேண்டும், ஜாதி முதலியன சமம், ஸ்மஸ்காரஸமமாக இருந்த போதிலும்

117. எந்த தேசிகனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனே முதலில் குருவை ஆச்ரயிக்க வேண்டும். பரஸ்பர நமஸ்காரமும், இது மாதிரியான கிரமமாக அறிய வேண்டும்.

118. ஜ்யேஷ்டத்வத்திலும் ஸமஸ்காராதிகள், அவர்களுக்கு குரு அனுமதியுடன் செய்க, குருவிற்கு ஸமானமான நமஸ்காரங்கள் காரணமில்லை.

119. ஓர்தேசிக சிஷ்யர்களின் ஆசாரம் கூறப்பட்டுள்ளது. அதிகமாக கூறுவதேன், தேசிகனால் எது கூறப்படுகிறதோ

120 அவ்வாறே ச்ரேயஸ்ஸை விரும்புகிற சிஷ்யர்களால் எப்பொழுதும் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் ஸ்வப்நாத்யாய விதியாகிற இருபத்தியிரண்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar