Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தீக்ஷிதர்களின் அந்த்யேஷ்டி
படலம் 27 : தீக்ஷிதர்களின் அந்த்யேஷ்டி என்ற கிரியையின் விளக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
04:06

27 வது படலத்தில் தீட்சிதர்களின் அந்த்யேஷ்டி என்ற கிரியையின் விளக்கம் கூறுகிறேன் என்பது கட்டளை பிறகு தீட்சிதர்களின் பிராம்ணன் முதலிய 4 வரணத்தவர்களில் கீழ்பட்ட ஜாதிகளில் நிற்கிறார்கள். அவர்களிலும் ஆசார்யன், ஸாதகன், புத்திரகன், சமயீ என்ற நான்கு பிரிவு உடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் அந்த்யேஷ்டி தீட்சிதர்களால் செய்யவேண்டும் அதில் ஆசாரியன் ஸாதகன், புத்திரகள், இவர்களின், அத்வ சுத்தியுடன் கூடிய அந்த்யேஷ்டியும் இதரர்களுக்கு அத்வசுத்தி இல்லாததால் அந்த்யேஷ்டி செய்யவேண்டும் என்று வேறுபாடு நிரூபிக்கப்படுகிறது. மறுபடியும் இறந்த ஆசார்ய, ஸாதக, புத்ரக இவர்களில் அறியாமையால் யார் ஆசாரமின்றியும், பிராயசித்தம் செய்யாதவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்களுக்கு தத்வ சுத்தியுடன் கூடிய அந்த்யேஷ்டி செய்யவேண்டும். மற்றவர்களின் விஷயத்தில் தத்வ சுத்தி இன்றி அந்த்யேஷ்டி செய்யப்படவேண்டும். இவ்வாறு பிராணனை உடனே தியாகம் செய்யும் யோகிகளின் விஷயத்தில் தத்வ சுத்தி செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு அந்த்யேஷ்டிவிதி கூறப்படுகிறது. முதலில், பஸ்மஸ்னாநம் செய்யவேண்டும். பிறகு ஆசார்யனால் இந்த தீட்சிதன் சிவாக்னியை பரிபாலிப்பவன் சீக்கிரமே சபிண்டீ கரணத்திற்கு பிறகு சிவத்தன்மையை அடையப் போகிறான் என்று பூஜை முதல் கொண்டு பரமேஸ்வரனிடத்தில் தெரிவித்து செய்யவேண்டும் என்பது வசனமாகும். பிராணனைவிடும் சமயத்தில் காதுக்கு அருகில் ஆசார்யனாலோ, மற்றவறாலோ சிவமந்திரம் முதலிய மந்திரங்களை சொல்லவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. இறந்தவர்களின் ஸ்னாநம் அலங்காரம் முதலியவைகள் செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தீட்சிதர்களுக்கும் சிவனின் கட்டளையை ஏற்று நடத்துபவர்களுக்கு மற்ற புருஷர்களுக்கும் முறைப்படி தாம்பூலத்துடன் கூடியதான மஞ்சள் பொடி கொடுக்க வேண்டும் என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. இறந்தவரை ஸ்ம்சானத்திற்கு அழைத்து செல்வதற்கான ஆசந்தி என்கிற சவத்தை எடுத்துசெல்லவும் திரவ்யம் கூறப்படுகிறது.

சிவயோகி விஷயத்தில் பல்லக்கு செய்யப்பட வேண்டும். ஆசந்திகம் என்கிற மூங்கில் முதலியவைகளால் செய்யப்பட்ட பாடையில் இறந்தவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் முறை கூறப்படுகிறது. அதில் துல்லிய ஜாதி எனும் வரை சேர்ந்த ஜாதி உள்ளவர்களாலும் பூணலை இடப்பாகமாக தரித்துக் கொண்ட தீட்சிதர்களால் அந்த பாடையை தூக்கிக்கொண்டு ஈசான திக்கில் கொண்டு செல்லவும் என கூறப்படுகிறது. பாடையைத் தூக்குபவர் களுக்கு அகாலமரணம் ஏற்படுவதில்லை. இறந்தவரிடம் சென்று ஸ்நானம் செய்து வபனம் தர்பணம் செய்வதால் மேல் உலகத்திலும் இங்கும் விரும்பத்தக்க நன்மையை அடைகிறான். ஆனால் உத்தமனால் ஹீநவர்ண ஜாதிகளுடன் வருத்தத்தை விட்டு விட்டு பின் தொடர்ந்து செல்லக்கூடாது. அறியாமையால் பின் தொடர்ந்து சென்றால் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என கூறி பிராயச்சித்தம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. உதவி இல்லாத சிவயோகியின் உயிர் பிரிந்த போது அவனுக்கு சம்ஸ்காரம் செய்பவனுக்கு துக்க அழிவு ஏற்படுகிறது என்று பலன் கூறப்படுகிறது. பிறகு அருகில் உள்ள நதி முதலான ஜலதீரங்களை அடைந்து அங்கு பந்தலோ, கொட்டகையோ அமைத்து அதில் மத்தியில் குண்டம், ஸ்தண்டிலம் முறைப்படி செய்து குண்டத்தின் தெற்கு பாகத்தில் பிணத்தை புதைப்பதற்காக உள்ள இடம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு தேசிகனால் சிதையை புதைக்கும் பூமிக்கு முன்னதாக செய்ய வேண்டிய பூஜைகள் விளக்கப்படுகிறது. பிறகு வர்தனியில், பாசுபதாஸ்திரம், தசாயுதம் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு செய்யவேண்டிய சிவ பூஜா முறை, அக்கினிகார்ய முறை இவைகளை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு சிதா பூமியின் பூஜா விதியில் வேறு முறை கூறப்படுகிறது. பிறகு யாக சம்மந்தப்பட்ட விறகுகளாலும் சந்தனம், அதில் இவைகளாலும் சவப்படுக்கை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு இறந்தவனின் தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு நிவிருத்தி முதலான கலாசுத்தி விவரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு சவத்தை படுக்கையில் ஏற்றுவதும் அதன் அக்னி சம்ஸ்கார முறையும் கூறப்படுகிறது.

தகனத்திற்கு பிறகு செய்யவேண்டிய முறையும் கூறப்படுகிறது. அஸ்திர வர்தனியை விட்டு எரிவது நதி தீரத்திற்கு சென்று ஸ்னாநம் செய்வது இறந்தவரை உத்தேசித்து வபனம் ஜலதர்பணம் முதலிய கிரியா விசேஷங்கள் கூறப்படுகின்றன. பிறகு அந்த இறந்தவரை எரித்தவருடன் அனுசரித்து சென்றவர்களுக்கும் சவத்தின் தீட்டு முதலிய முறைகளையும் தன்னுடைய வீட்டுக்கு செல்லும் வரை உள்ள விதியையும் கூறப்படுகின்றன. பிறகு வீட்டின் வாசல்படியை அடைந்து வேப்பிலையை கடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சமயத்தை அனுசரித்து சமய தீக்ஷõமாத்திரத்தினால் அனுக் கிரஹிக்கப்பட்டவனும் மேற்பட்டதான தீட்சையால் தீட்சை இல்லாதவனும் நிர்வாண தீட்சை உடையவனும் இறந்த விஷயத்தில் தத்வ சுத்தியுடன் கூடி அந்தயேஷ்டி செய்யவேண்டும் என அந்த்யேஷ்டி கூறப்படுகிறது. ஜலத்தினாலோ, அக்னியினாலோ, ஆயுதத்தினாலோ, விருக்ஷத்தினாலோ யானை, சிங்கம், கரடி, இவைகளாலோ மற்ற சாத்விகமான பிராணிகளாலோ, மரம் விழுதல் முதலாலோ, தன்கையால் அடித்தாலோ, வெட்டினாலோ கயிற்றால் கட்டிப் போட்டு விழுந்தாலும் இப்பேர்பட்ட காரணங்களால் மரணம் அடைந்தவர்களுக்கு பிராயசித்த பூர்வமாக அந்த்யேஷ்டி கூறப்படுகிறது. சரீரம் சேதனம் ஆனவர்களுக்கும் அவயவம் இல்லாதவர்களுக்கும் க்ஷயம், குஷ்டரோகம், வைசூரி முதலிய பெரிய வியாதியுடன் கூடிய சரீரத்துடன் உடையவர்களுக்கு மரணம் ஏற்பட்ட சமயத்தில் தர்பம் முதலிய திரவ்யங்களால் செய்யப்பட்ட சரீரத்தில் அந்த்யேஷ்டி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு வைசூரி முதலான வியாதியில் வித்யாசமான சரீரத்தை உடையவர்கள் இறந்த விஷயத்தில், அந்த்யேஷ்டி செய்வதாவது அக்னியில் மந்திரம் இன்றி தகிப்பது புதைப்பது அல்லது கங்கை ஜலத்தில் போடுவதோ செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு தீ குளித்தல் முதலியவைகளால் இறந்தவர்கள் விஷயத்தில் அவர்களால் செய்யப்பட்ட தீக்குளித்தல் முதலியதான கார்யம் புண்யத்திற்காக செய்யப்பட்டதா இல்லையா என அறிந்து கர்மாவை அனுஷ்டிக்க வேண்டும். தர்பை முதலான திரவ்யங்களால் சரீரம் செய்து அதன் சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சவுளம் செய்து கொள்ளாதவர்கள் இறந்த விஷயத்தில் குழியில் புதைப்பதை செய்யவேண்டும். அவர்களுக்கு தீ இடுவதோ பிண்ட பலி கொடுப்பதோ, ஜலதர்பணமோ செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு இரண்டு வயதிற்கு உள்ளாக இறந்தவர்களின் விஷயத்திலும் எரிப்பது ஜல தர்பணம் செய்வது வேண்டாம் என கூறப்படுகின்றது. சவுள கர்மா செய்து கொள்ளப்பட்டவர்களுக்கு தீயூட்டுவது, பிண்டம் போடுவது, ஜலதர்பணம் உண்டு என கூறி அங்கு செய்ய வேண்டிய பிண்டம், ஜலதர்பண முறை கூறப்படுகிறது.

பிறகு யதிகள் ஞானிகள் இவர்கள் இறந்த விஷயத்தில் உப்பால் நிரப்பப்பட்ட குழியில் இறக்கி மூடவும் என்று கூறி அவர்களை புதைக்கும் குழிபற்றி விதிப்படி கூறுகிறார். பிறகு யதிகள், ஞானிகள் இறந்தபொழுது புதைக்க குழியில் கிரியைக்கு பிறகு அங்கே ஆலயத்துடன் கூடிய பீடமோ லிங்கமோ, பிம்பரூபமாகவோ ஸ்தாபித்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இந்த சன்யாசிகளை ஞானிகளின் விஷயத்தில் பிண்டம், ஜலதர்பணம் சிரார்த்தம் மற்ற இதர அபர கிரியைகளும் செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இடி, தீ, ஜலம் இவைகளால் இறந்தவர்களுக்கு தீயூட்டும் முறை கூறப்படுகிறது. பிறகு கணவன் வேறு தேசத்திற்கு சென்று அங்கு இறந்ததை அறியாமல் இருந்தால் அவன் மனைவி 12 கழித்து வருடம் விதவைத்தன்மையை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இறந்தவனை எரிப்பதற்காக நெருப்பு தயாரிக்கும் முறை கூறப்படுகிறது. தத்வ சுத்தி இல்லாத அந்த்யேஷ்டியுடன் கூடிய மாஹேஸ்வரர்கனின் விஷயத்தில் தகனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதல்நாள் முதற்கொண்டு 12ம் நாள் வரை இறந்தவரை குறித்து செய்யவேண்டிய தர்பண முறையும் போஜன முறையும் கூறப்படுகிறது. பிறகு இறந்தவரை எரித்த முடிவில் இறந்தவரை குறித்து ஆடையில்லா தன்மையை போக்குவதற்காக குடும்பத்துடன் கூடிய தீட்சிதனுக்கு வேஷ்டி அரிசியுடன், கூடிய தானம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. திலதீர்தத் தர்பணத்திற்கு பிறகு நதீ முதலானவைகளிலோ கிருகத்தில் பலிகொடுக்க வேண்டும் என பலிவிதி கூறப்படுகிறது.

இவ்வாறாக நைஷ்டிகனுக்கு பிரதிதினமும் தர்பணமும் பலியும் கொடுக்கக் கூடாது நைஷ்டிகரை தகனம் செய்த பிறகு அதற்காக தர்பணம் செய்யவும் பிறகு சிவனை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு இறந்த நைஷ்டிகனை குறித்து பந்துக்களுடன் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. அழவும் கூடாது என காரணத்துடன் விளக்கப்படுகிறது. பிறகு சாம்பல் கரைக்கும்வரை கூறப்படுகிறது. பிறகு இரண்டாம் தினத்தில் சரீரம் முழுவதும் எரிந்துவிட்டதா இல்லையா என அறிய சந்தேகம் காணப்படுகிறது. அதற்காக மூன்றாவது தினத்திலேயோ சாம்பல் கரைப்பது செய்யலாம் என கூறப்படுகிறது. அஸ்தி முதலிய சாம்பலை, ஜலத்தில் கரைக்காமல் கங்கை முதலிய நதிகளில் கரைப்பதற்காக புதிதான மண்பாண்டங்களில் எலும்புகளை மட்டும் சேகரித்தோ அதை கிராமத்திற்கு வெளியில் வைத்து 6 மாதம் 1 வருடத்திற்கு உள்ளோ அந்த அதற்கு மேலான காலத்திலோ கங்கை முதலிய புண்ய நதிகளில் போடவும் என்று கூறி அதன் விதிமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு தீட்டு காக்கும் முறை, அதிகாரத்தை அனுசரித்து விஸ்தாரமாக கூறப்படுகிறது. இவ்வாறு 27வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே பிராம்மணோத்தமர்களே! சிவ தீøக்ஷ பெற்றவர்களை பற்றிச் சொல்கிறேன். பிராம்மணர், ஷத்திரியர், வைச்யர், சூத்ரர் அனுலோமத்தில் தோன்றியவர்கள்.

2. ஆச்சாரியர்கள், ஸாதகர்கள், புத்ரகர்கள் சைவசமயநெறி நிற்பவர், இவர்கள் எப்பொழுதும் அவர்களுக்கு ப்ராணன் முடிந்தபின் அவர்களுக்கு தீøக்ஷகளினாலே அந்த்யேஷ்டி என்ற (கடைசீயாகம்) செய்ய வேண்டும்.

3. ஷடத்வ சுத்தியோடு கூடிய ஆசார்ய சமயீபுத்ரகன் இம் மூவர்களுக்கு அத்வ சுத்தி செய்தும் இதரர்களுக்கு அந்தேஷ்டியானது, அத்வ சுத்தியின்றியும் ஆகிறது.

4. எந்த ஆசாரத்தையும் விட்டு விட்டவர்கள் ஆசார்ய முதலிய மூவர் இவர்களும் பிராயச்சித்தம் செய்யாமலே மரணம் அடைகிறார்களோ அவர்களுக்கு அந்த்யேஷ்டி கர்மாவில்

5. நித்யம் முதலிய கர்மானுஷ்டானங்களை நன்றாக அனுஷ்டித்தவர்களுக்கும் தத்வ சுத்தியாவது செய்யவேண்டும். ஸமயானுஷ்டானங்களை கடைப்பிடிக்காத நிஷித்தவர்களாக எவர்கள் இருக்கிறார்களோ அந்த அப்ரமாதிகளுக்கு கவனத்துடனுடையவர்களுக்கு

6. தத்வ சுத்தியை விட்டு விட்டு கேவல அந்தேஷ்டி சொல்லப்படுகிறது. எவர்களினால் ஸத்ய ப்ராணத்யாகம். பிரம்ம ரந்திரம் முதலிய பிளவுகள் வாயிலாக ஆத்மா மேல் நோக்கி பிரிகின்றதோ அவர்களுக்கும்

7. அவர்களுக்கும் யாகங்களை அறிந்தவர்களால் தத்வ சுத்தி சொல்லவில்லை. எவர்க்கு ப்ராணன் வெளியே போகும் காலம் என்பது யமன் ஜந்துக்களோடு உயிரை அழைத்துச் செல்வதாகும்.

8. விதிப்படி ஆக்னேயஸ்நாநம் மந்திரங்களுடன் கூடிய சரீரத்தை உடையவனாகவும் முமுக்ஷúக்களுக்கு அப்படியே ஆக்னேய ஸ்நானத்தை செய்வதாலும் மந்திர கார்யத்தை செய்யவேண்டும்.

9. முமுக்ஷúக்களின் நிமித்தம் பரமேஸ்வரனை அஹிம்சை முதலான எட்டு புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும். தன் கையாலோ அல்லது மற்றவர்களுடைய கையாலோ சந்தனம் முதலியவைகளால்

10. நன்றாக அவருடைய ஹ்ருதயத்தில் லிங்க வடிவமான சந்தன மஹேஸ்வரனை செய்தும் கைகூப்பியும் அவருடைய மஸ்தகத்தில் தலை உச்சியில் சன்னிதாபன முத்திரை காட்டியும்

11. அதன் பொருட்டு இந்த வாக்யத்தை தேவேசனின் சன்னதியில் படிக்க வேண்டும். உங்களால் தீøக்ஷ செய்யப்பட்ட இவர் சிவாக்ஞையை காப்பாற்றுபவர் (பரிபாலனம் செய்பவர்)

12. உடனே சிவதத்வத்தை அடைந்தவாகிறார் பின் சபிண்டீகரணம் செய்யப்படும். இவ்வாறு தேவ தேவனை நோக்கி விக்ஞாபித்து தனக்குறிய இடத்தில் வைக்க வேண்டும்.

13. ஒரே முறையில் அல்லது பலவித முறைகளிலே இவருடைய அந்தேஷ்டி கிரியையை செய்யவேண்டும். ஆன்மா மேலே செல்லும் சமயத்தில் காது சமீபத்தில் ஸம்ஹிதா மந்திரங்களை படித்தல் வேண்டும்.

14. விசேஷமான சிவமந்திரத்தையும் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் படிக்க வேண்டும். இந்த எல்லாவற்றையும் ஆசர்யனாலோ, மற்றவர்களாலோ விதிப்படி செய்ய வேண்டும்.

15. அவருடைய கோத்திரத்தில் தோன்றியவர்களினாலோ சொல்லப்பட்ட கிரியைகளை செய்கின்ற மற்றவர்களாலோ ப்ராணனை இழந்த அந்த மனிதனின் ஸ்நாநத்திற்காக தீர்த்தத்தை எடுத்து வரவேண்டும்.

16. நூறு குடங்களினால் ஜலத்தை எடுத்து நன்றாக ஸ்நாநம் செய்விக்க வேண்டும். கிரஹஸ்தராக இருப்பின் சவுகிகமான ஸ்நாநத்தை அவர்களால் செய்துவிக்க வேண்டும்.

17. இவ்வாறு குடங்களாலும், கலயங்களாலும் ஸ்நபன விதிப்படி சொல்லப்பட்ட ஸ்நாநத்தை செய்ய வேண்டும். வர்தனி கும்பம் இல்லாமல் தனித்த ஜலகும் பத்தோடு ஸ்நாநம் செய்விக்க வேண்டும்.

18. முதலில் ஸ்தண்டிலத்தில், வஸ்திரத்தோடு ஹிரண்யமும், கூர்ச்சமும் பரப்பிய அக்ஷதையோடும் மாவிலை தேங்காயுடன் கூடிய கும்பத்தில் ஹ்ருதயாதி வித்யாதேக மந்திரங்களினால் அர்சிக்க வேண்டும்.

19. வீட்டிலோ, அல்லது மயானத்திலோ இவ்வாறு ஸ்நாநம் செய்விக்க வேண்டும். அல்லது ஸ்நபனத்தோடு கூடிய கும்பத்தால், ஸ்நாநம் செய்வித்து விபூதி பூசுவதாகிய ஆக்னேய ஸ்நாநத்தையும் செய்தல் வேண்டும்.

20. இவ்வாறு சம்ஹார மார்க்கத்தினால் கவுபீநம் வஸ்திரம் இவற்றை அணிவித்து அக்ஷமாலை முதலிய ஆபரணங்களினாலும் அலங்காரம் செய்துவிக்க வேண்டும்.

21. சிவசாஸனங்களை ஏற்றுக் கொண்டுள்ள தீக்ஷதர்களுக்கும், மற்றவர்களுடன் எப்படி முறையோ அதன்படி ராத்திரி சூர்ணம் (மஞ்சள் பொடி) தைலத்தோடு கூடியதாகவும்

22. தாம்பூல ஸஹிதமாக எல்லா ஜனங்களுக்கும் அப்பொழுதே தர வேண்டும். சவப்பாடை அடக்கம் செய்ய உரிய இடத்தை யாகத்துக்குரிய மரங்களினால் அடுக்க வேண்டும். அல்லது நிந்திக்கப்படாத நல்ல மரங்களினால் அடுக்க வேண்டும்.

23. சவ புருஷனின் அளவில் ஆறங்குல அளவாக அதிகமாக்கி மூன்றுமுழ அளவு வரையிலாக நீளமும் மூன்று, நான்கு, ஐந்து பாக அளவாக

24. நல்ல அகல அளவும், பரிசுத்தமானதும், சவத்தின் ஆசனமாகவும், கொட்டகையை மேற்படி கார்யங்களை செய்வதற்காக சவப்பாடையின் சமீபத்தில் அமைத்து

25. சிவப்பு மாலை, சிவப்பு வஸ்திரம், இவைகளை போர்வையாக போத்தி தொங்கும்படி செய்ய வேண்டும். மற்ற இடங்களில் அமர்ந்த நிலையில் ஜீவன் பிரிந்த சிவயோகிகளை வைத்தும்

26. நல்ல வாசனை புஷ்பங்களால் அலங்கரித்து சுபமான எல்லா ஆபரணங்களினாலே அலங்கரித்து சுத்தமான பல்லக்கை எடுத்து வந்து அதில் சவமான சிவத்தை அமர்த்த வேண்டும்.

27. நல்ல சப்தத்துடன் முரவவாத்ய கோஷங்களுடன் செல்ல சமய நெறி உள்ள நல்லோர்கள் கூட்டத்தோடு பின்னால் வணக்கத்தோடு பணிவோடு செல்ல வேண்டும்.

28. சங்கத்வனியோடும், கானத்தோடும், சிவயோகியின் பெருமை அறிந்தோரும் அவரை பின் தொடர்ந்தும் அசையாத்தலைகளையுடையவர்களாகவும்.

29. கண்ணீர் விட்டும், அக்கண்ணீரால் ஸம்சார ஆசைகள் அடங்கி மேலான பாவத்தில் இருப்பவர்களாக தென்புறம் தலையை வைத்து இரண்டு கட்டை விரல்களை கட்டியநிலையில்

30. தர்பகைகயிறுகளால் அந்த சவத்தை கட்டி பந்துக்களுடன் அபசவ்யமான பூணலுடன் கூடிய தீøக்ஷ பெற்ற தீக்ஷிதர்களினாலே பூணூலை இடமாக போட்டுக் கொண்டு ஈசானதிக்கை அடைய வேண்டும்.

31. அஸ்திரம் அல்லது வேறு மந்திரங்களை ஜபித்து கொண்டு வருபவர்களோடு தண்ணீருடன் கூடிய குடத்தை தூக்கிக் கொண்டு முக்கோணம் போல் அமைத்த உரியில் வைத்து. புகையோடு உள்ள அக்னியை வைத்து அதன் முன்னே செல்லவேண்டும்.

32. தூக்கிச் சென்றதற்காக இளைப்பாற குனிந்து தெற்கே தலை வைத்ததாக சுத்தமான பூமியின் மேல் இறந்தவனை இறக்கி வைக்கவேண்டும்.

33. விரதங்களை அனுஷ்டித்தவனும் அனுஷ்டிக்காதவனும் சிவதீøக்ஷ ப்ராமணர்களுடைய சவத்தை எவன் சுமந்து செல்கிறானோ அவனுக்கு அகால மரணம் எற்படாது.

34. அந்த சிவதீக்ஷித ப்ராம்மணரை தொடர்ந்து சென்று ஸ்நாநம் செய்தும். கொப்பளித்தும் தானங்களை தந்தும் மறைவு குறித்து, தண்ணீரில் மூழ்கியும் வருவதினால் விரும்பிய சுகத்தை அடைகிறான். இங்கு மேலான இடமாக பாவிக்க வேண்டும்.

35. மறைந்தவர் உன்னதமான பெரியோர்களை அனுசரித்து குற்றம், குறை உள்ளவராயினும் விரதங்களை விட்டவராயினும் பின் செல்லக் கூடாது. மேற்கூறியவர்கள் பின் தொடர்ந்தால் ஸ்னானம் செய்து ஸத்யோஜாதமந்திரத்தை நூறு முறை ஜபிகக்க வேண்டும்

36. துணை இல்லாதவரும் தலைவர் இல்லாதவரும், ஆன இறந்த சிவயோகியை தோஷ மற்றவராக நினைத்து, சமபூமிக்கு எடுத்துச் சென்று அந்தயேஷ்டி கர்மாவை யார் செய்கிறானோ அவன் மங்களத்தையடைகிறான்.

37. வைசியர் முதலிய மூன்று வகுப்பிற்கும் வேறு வகுப்பிற்கும் இந்த முறை ஏற்படுத்தப்படுகிறது. பிறகு சவஸ்தானம் வெகு தூரமில்லாமல் தண்ணீருக்கு பக்கத்தில் சுத்தமான சமமான இடத்தில்

38. பந்தல் அல்லது கொட்டகையாகவே அமைத்து இவ்வாறாகவே அதன் நடுவே ஆறு அங்குலம் உயரத்தோடு ஒருமேகலையை நாற்கோணமாக

39. குண்டத்தையும் விதிப்படி ஓர் முழ அளவில் மண்ணினால் அமைத்து அக்னிதிக்கில் ஸ்தண்டிலம் அமைத்து அவ்வாறே நான்கு முழ அளவில் சிதைக் குழியை அமைக்க வேண்டும்.

40. இரண்டு முழ அளவு அகலமும், எட்டங்குல அளவு கனமும் உள்ளதாக அமைக்க வேண்டும். சவக்குழியில் தெற்கு பாகத்தில் குண்டம் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக ஸ்தண்டிலம் குண்டம், சவக்குழி, ஆகிய மூன்றையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

41. சவக்குழிக்கு சமீபமான இடத்தை கோமயத்தால் மெழுகி, ஆசார்யன் ஸ்நாநம் செய்து சுத்தி உள்ளவனாகவும் கையில் அஸ்திர தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு

42. ஸ்தண்டில சமீபம் வரை பிரதட்சிணமாகச் சென்று வடக்கு முகமாக அமர்ந்து மாறுதலான நியாசத்தை செய்து, அஸ்திர மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து கொண்டு

43. அந்தர்யாகம் செய்து கொண்டு அஸ்திர மந்திரத்தினால் அஸ்திர வர்த்தனியை அபிமந்திரித்து அந்த தீர்த்தத்தால் எல்லா திரவ்யத்தையும் பிரோக்ஷித்து ஆத்ம பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டு

44. ஸம்ஹிதா மந்திரங்களையும் கலைகளையும் சம்ஹார கிரமமாக கூறி பிரம்மா முதலிய காரணேஸ்வரர்களுடன் கூடியதாக தன்னுடைய சரீரத்தில் செய்து கொண்டு

45. சம்ஹார கிரமமாக சிவஹஸ்தம் பாவனை செய்து ஒரு தடவை சிவத்தை நினைத்து அங்கே தர்பைகள் விபூதி எள்ளு இவைகளை வாரி இறைத்து

46. விதிப்படி சிவத்தை அழைத்து சிதையிலோ பூஜிக்கவும். ஐந்தாகப்பகுப்பட்ட பூமியில் ஐந்து ஐந்தான கோஷ்டத்தில்

47. ப்ருதிவீ முதலிய பஞ்ச பூதங்களுக்குரிய ஐந்து வகை வடிவம் ஐந்துவகை நிறம் இவற்றால் விசித்ரமாக அமைக்கப்பட்ட மண்டவத்தில் வம்ச ரஜ்ஜூ முதலியவற்றிலிருந்து தோன்றிய வாஸ்த்து தேவதைகளை நியாஸம் செய்ய வேண்டும்.

48. அங்கே நடுவில் ஐந்து கோஷ்ட நடுவில் பூமியுடன் கூடியதாக பிரம்மாவையும் நிருருதி திசையில் ஜலத்துடன் கூடியதாக்கி நான்கு கோஷ்டத்தில் விஷ்ணுவையும்

49. நான்கு கோஷ்டங்களில் ஆக்னேயத்தில் அக்னியுடன் கூடிய நான்கு கோஷ்டமத்தியில் ருத்திரர்களையும் வாயு கோணத்தில் நான்கு கட்டத்தின் வாயுவுடன் கூடிய கோஷ்டத்தில் ஈஸ்வரனையும் பூஜை செய்யவேண்டும்.

50. ஈசான கோஷ்டம் நான்கிலும் ஆகாயத்துடன் கூடியதான ஈசானனை பூஜிக்க வேண்டும். கிழக்கு முதலான நான்கு கோஷ்டங்களில் இந்திரன், எமன், வருணன், குபேரன் ஆகிய நால்வரை பூஜிக்க வேண்டும்.

51. சவத்தின் நிஜப் பெயரோடும் வணக்கத்தோடும் நம: என்றும் ஸ்வாஹா முடிவோடு பலியை வைக்க வேண்டும். ஈசான திசையில் வர்தனியை பூஜித்து பாசுபதாஸ்திரத்தையும் பூஜை செய்ய வேண்டும்.

52. சூலத்திலிருந்து வஜ்ராயுதம் வரையுள்ள ஆயுதங்களை எட்டு திக்குகளிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கீழும் உள்ள பதத்தை விஷ்ணு பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

53. எள்ளு தர்பைகளின் நடுவே பவனை நன்றாக பூஜிக்கலாம். மண்டலத்தில் பவனை பூஜிக்கலாகாது. ஐஸ்வர்யம் முதலிய ஆசனத்தை கொடுத்து தளத்தோடு கூடிய பத்மாஸ னமத்தியில்

54. மனோன்மணி முதல் வாமா வரை உள்ள சக்ரத்தை பூஜை செய்ய வேண்டும். சம்ஹார கிரமாக ஆஸந பூஜையை மேலிருந்து (அபஸவ்யம்) அப்ரதக்ஷிணமாக சங்கரனை சாங்கமாக நன்றாக பூஜை செய்து

55. முன்போல சமஸ்காரம் செய்து குண்டம் சக்தியையும் அங்கே முன்போல குண்டத்தை ஸம்ஸ்காரம் செய்து சக்தியை அர்ச்சித்தும் அங்கே கிரவ்யாதம் சோஜ்ஜிதமான அக்னியை வைத்து அப்ரதக்ஷிணமாக சுற்றி

56. ஐந்து ஸம்ஸ்காரங்களினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னி ஹ்ருதய தாமரையில் சிவஸ்தலமாக அர்ச்சித்து எள்ளினால் தர்பணம் செய்து

57. பிறகு பூர்ணமாக நிரம்பி வழிகின்ற நெய்யினாலே சிதையில் சேர்க்க வேண்டும். அல்லது ஐந்து நிறங்களால் கல்பிக்கப்பட்ட மண்டலங்களை விட்டும்

58. நிரீக்ஷணம் முதலிய சம்ஸ்காரங்களால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட வெகு தூரத்திலுள்ள கலசங்களினாலே பின்பு சிதையை அடைந்த பீடத்தில் வைத்து மஹேந்திரபுரம் என்ற ஸ்வர்கத்தை எழுத வேண்டும்.

59. சிவப்பு வர்ண பொடியினால் அதன் நடுவே அக்னி பகவானை எழுதவும் அதனோடு அந்த தேவதைகளை சேர்த்து முளை குச்சிகளை கோணங்களில் சேர்ப்பிக்க வேண்டும்.

60. அக்னி திசை முதற் கொண்டு அபஸவ்யமாக நான்கு காய்ந்த கட்டைகளினால் அக்னிதோன்றுவதற்காக அடிப்பாகம் மேலாகவும் கட்டையின் நுனி கீழாகவும், இருக்கும்படி அஸ்திரமந்திரங்களினால் எடுத்து குறுக்காக ஒவ்வொன்றாக அடுக்க வேண்டும்.

61. ஐந்து அழகான நூலினாலே கவசமந்திரத்தால் சுற்ற வேண்டும் அல்லது சிவப்பு நூலினால் முழுவதும் சுற்றி கட்டவும்

62. சிவாக்னியில் சிவாஹுதியும் ரக்ஷணத்திற்காக ராக்ஷஸர்களுக்காகவும் செய்ய வேண்டும். அங்கே சவப்படுக்கையில் கனமாகப் பரப்பி யாகத்திற்கு உரிய கட்டைகளினால் அடுக்க வேண்டும்.

63. சந்தனம் அகில் இவைகளால் கலந்த அபசவ்யமாக மறைத்து அஸ்திர மந்திரத்தினால் தர்பம், புஷ்பம், எள்ளு இவைகளினால் பூஜித்து

64. இறந்தவரை குழைத்த மண்ணை எடுத்து மேலே அம்மண்ணினால் பூசி கோமயத்துடன் கூடிய ஜலத்தாலும் பூசி அபிஷேகம் செய்தும் தூபம் சமர்ப்பிக்கப்பட்டதுமான பிரேதத்தை புதியவிபூதியால் திலகமிட்டு

65. முன்பிறப்பின் வர்ணத்தை எதிர்நோக்காமல் நல்ல பூணூல் வஸ்திரம் இவைகளை ஸமர்பித்து அக்னேய திக்கில் சிவனை பூஜித்து தெற்கு பாகத்தில் தர்பாஸனத்தில்

66. நிரீக்ஷணம் முதலியவைகளால் சுத்தமானதும் ஐந்து வகையான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மந்திரமயமான சரீரமுடைய இந்த பிரேதத்தினுடைய (ப்ருத்வி முதலான) ஹ்ருதய கமலப் பிரதேசத்தில்

67. சுகதுக்க அநுபவ கர்ம வினையால் ஆஸ்ரிதமானதும் திரும்பவும் கிடைக்கப்படாததுமான மஹாஜலத்துடன் கூடிய அந்த லிங்கத்தை ஸமஹரித்து கீழ்வரும்படி எடுத்து வைக்க வேண்டும்.

68. ஓம் ஹூம் ஹம் ஹாம் ஹூம் என்ற மஹாஜாலமாக கருதப்பட்ட மந்த்ரத்தை சொல்லி குருவானவர் முடிவான வணக்கத்தை பாவித்து மரணமானவருக்கான தீøக்ஷயை செய்ய வேண்டும்.

69. வித்யாதேஹத்தை அந்த தேகத்திலிருந்து ஐந்து கலைகளையும் எடுத்து ஷடங்கத்தோடு சிவனை பூஜித்து மூலமந்திரத்தால் நூறுமுறை ஹோமம் செய்யவேண்டும்.

70. பின்பு சைதன்ய சன்னிதானத்தின் பொருட்டு தத்வங்களை சோதனம் செய்தல் வேண்டும். நிவிர்த யாதிகலைகளை முறைப்படியோ ஒரே முறையாகவோ எடுத்து

71. அதிபர்களுடன் கூடியதாக ஐந்து கலைகளை அக்னியில் முன்பு போல் பூஜிக்க வேண்டும். தாடனம் முதலிய ஸம்ஸ்காரங்களால் லிங்கத்திலிருந்து அதனால் அடையாளம் இடப்பட்ட ஆன்மாவை எடுத்து

72. ஜென்மாவின் வினைக்கு அதிகாரமான கலைகளையும் முன்பு போல் சேர்க்க வேண்டும். தொடர்ந்துள்ள தத்வங்களுக்கும் சுத்தியும் லயம், போகம் இவைகளையும் செய்ய வேண்டும்.

73. பாசத்தின் துண்டிக்கும் தன்மையில் பசுத்தன்மையுடைய ஆன்மாவிற்கு திரோபாவமென்கிற மறைப்புத் தன்மையாகிறது. அந்த கலைகளின் அழிவை கீழிலிருந்து மேலாக ஆன்மாவை மேன்மை அடையச் செய்வதற்காக செய்ய வேண்டும்.

74. முன்பு செய்யப்பட்ட நிர்வாண தீøக்ஷயால் ஆன்மாவை விடுபடச் செய்து மேலும் மற்ற பாகங்களையும் சுத்தி செய்ய வேண்டும்.

75. கூறப்பட்ட கர்மமலத்தின் வழியால் இவ்வாறாக தத்வங்களை சிவதத்வம் வரை சோதித்து அந்த தத்வங்களை ஹோமத்தின் முடிவில் அக்னியிலிருந்து எடுத்து சுத்தமான சிவபதத்தில் ஆன்மாவை சேர்க்க வேண்டும்.

76. ஆத்மாவிற்கு எந்த கிரியையால் மறுபிறப்பும் பிறரிடம் அடிமை தன்மையும் ஏற்படாதோ அவ்வாறாகச் செய்ய வேண்டும். மீதமில்லாத பாசங்களை சோதித்து ஈசனை பூஜித்து விசர்ஜனம் செய்ய வேண்டும்.

77. அந்த சரீரத்தில் வித்யாதேஹத்தையும் எடுத்து அதன் பதத்தில் சேர்க்க வேண்டும். ஸ்தண்டிலத்திலும் இவ்வாறாக ஈசனை பூஜித்து ஸம்ஹரித்து அதன் பதத்தில் சேர்க்க வேண்டும்.

78. சிதையில் மேலே சவத்தை எடுத்து வைத்து முன்பு போல் தர்பைகளினால் மூட வேண்டும். தெற்கு திசையில் தலையும் வடக்கு திசையில் பாதமும் இருக்கும்படி சவத்தை வைக்க வேண்டும். ஸ்ருக் ஸ்ருவம் இவற்றோடு கூட ஆகுதிகளை முக்தி அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டும்.

79. ஆசார்யன் ஸாதகன் அவர்களாலும் மற்ற கார்யத்திற்கு உரியவர்கள் குங்கிலியம் அகில் பச்சை கற்பூரம் சந்தனம் இவற்றை மரக்கட்டைகளோடு பின்கலந்தும்

80. மூடிவிட்டு குண்டாக்னியை சேர்த்து எடுத்து சவத்தின் சிரோபாகத்தில் வைக்க வேண்டும். தேன் தைலம் நெய் இவற்றை அக்னியில் வைத்து நன்றாக ஜ்வலிக்கும்படி செய்யவேண்டும்.

81. நெய் தேன், பால் நிறைவாக ஸ்ருக்கை நிறப்பி பூஜிக்கப்பட்ட பூர்ணாஹூதியாக ஆசார்யன் சவத்தின் தலைபாகத்தில் வடக்கு நோக்கிய முகமாக நின்று கொண்டு

82. கீழே கூறப்பட்டுள்ள வாக்யத்தை சொல்லிக் கொண்டு அக்னியில், நெய்யை விட வேண்டும். ஹே அக்னியே தெக்ஷினாக்கினியான நீர் காலனால் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்.

83. மந்திரத்தினால் பரிசுத்தமான சவத்திற்குரிய இந்த மஹாஹூதியை ஏற்றுக் கொள்ளும் என்று கூறி பிறகு அந்த இடத்தில் கீழ் நோக்கிய முகமாக கவிழ்ந்து ஸ்ருக் கருவத்தை போட்டு விட வேண்டும்.

84. ஸ்ரேஷ்டமான ஆசார்யன் எல்லா கர்மாக்களையும் செய்து அரிவாளையும் அஸ்திர கும்பத்தையும் எடுத்து அப்ரதக்ஷிணமாக வந்து

85. மேல் தூக்கி இடது தோளின் மேல் ஓட்டையிடப்பட்ட மேல் பகுதியுடன் சவத்தை பாராமல் ஜலதாரை விட்டுக் கொண்டு தன்னுடன் பிறந்தவர்களுடன் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

86. அபஸவ்யமாக இடப்பக்கமாக சுற்றி வந்து அந்த வர்தனியை கீழ் நோக்கியபடி கவிழ்த்துவிட வேண்டும். அங்கே அந்த தேசத்தை விட்டு வந்து அஸ்திர வர்தனியை முன் சொன்னபடி வைத்துவிட வேண்டும்.

87. பிறகு ஆற்றங்கரைக்கு சென்று ஸ்நாநம் செய்து ஜலத்திற்கு மேல் நல்லதர்பையை பரப்பி பிரணவத்துடன் கூடிய ஹ்ருதய மந்திரத்தை கூறி

88. சுத்தாத்மன் என்ற பதத்தையும் ஈசன் முதல் ஈசாந்தன் வரை உள்ள பெயர்களாக ஸ்கந்தன், கணேசன் என்ற பெயர்களாகவோ கூறி (ஓஹோம சுத்தாத்மன் ஸ்கந்தோ பவஸ்தா, ஓம் ஹாம் சுத்தாத்மன் சன்டோபவஸ்வதா, ஓம்ஹாம் சுத்தாத்மன் கனாதீசோ பவஸ்வதா)

89. என்று சொல்லிக் கண்டு முறைப்படி ஸ்வதா என்ற முடிவுடன் கூடிய மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து; தர்பணம் செய்ய வேண்டும். மறுபடியும் ஸ்நாநம் செய்து வடக்கு நோக்கிய முகமாக இருந்து சிவஸம்ஹிதை ஜபம் செய்ய வேண்டும்.

90. அஸ்திரங்களில் ஒன்றையோ அல்லது அகோராஸ்திர மந்திரத்தையோ நூறுமுறை ஜபம் செய்ய வேண்டும். அப்படியே சவத்தை சுவந்தவர்கள் தஹனம் செய்தவர்கள் இருமடங்கு ஜபம் செய்ய வேண்டும்.

91. இறப்பு தீட்டு நீங்கியவர்களாக தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு வாசற்படிக்கு வந்து வேப்பிலையை தின்று நியமத்தோடு துப்பி

92. ஆசமனம் செய்து பிறகு அக்னி ஜலம் கோமயம் வெண்கடுகுகளை தொட்டு கல்லின் மேல் கால்வைத்து மெல்ல பிரவேசம் செய்ய வேண்டும்.

93. நல்லவனாக சமயத்தில் நிலைபெற்றவனாகவும் உத்தர தீøக்ஷயில் நிர்வாண தீøக்ஷ செய்வதற்குரிய விருப்பமானதை குறை உள்ளவனாக உள்ள எனக்கு தர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

94. மரணமுற்றவனாயினும் அவருக்கு தத்வ சுத்தியோடு கூடிய அந்தேஷ்டி இங்கு சொல்லப்பட்டுள்ளன. ஜலத்தினாலோ நெருப்பினாலோ ஆயுதங்களினாலோ வேறு வகையில் யானை சிங்கம் இவற்றாலோ

95. புலி ஆகிய மிருகங்களினாலோ மரம் முதலியன விழுந்தாலோ தன் கையினாலே ஓங்கி அடித்துக் கொண்டோ கயிறு இறுக்கமாக கட்டியதால் உயிரற்று விழுவதினாலோ

96. இவ்வாறு பலவகையில் துர்மரணம் எவர்களுக்கு ஏற்படுகிறதோ அவர்களுக்கு முன்போல் அந்தேஷ்டி கிரியை சொல்லப்பட்டுள்ளது. சரீரம் காணாமல் மரணமுற்றவர்களுக்கும் அப்படியே சிதைந்து போன உடம்பு உடையவர்களுக்கும்

97. க்ஷயரோகம், குஷ்டம், வைசூரி முதலிய மஹாரோக முள்ள சரீரம் உள்ளவர்களுக்கும் தர்பை முதலியவற்றால் அமைக்கப்பட்ட தேகத்தில் அந்த்யேஷ்டி கிரியைகள் அனைத்தையும் செய்யவேண்டும்.

98. சிதைந்த அங்கம் வைசூரி முதலிய ரோகமுள்ள நோயுள்ள மனிதன் மரணமடைந்தால் மந்திரங்கள் இல்லாமல் கேவலமான அக்னியில் தகனம் செய்தோ கீழே புதைத்தோ அல்லது

99. கங்கை முதலிய தீர்த்தத்தில் பிரேதத்தை போட்டு நெருப்பு முதலியவற்றால் பிரவேசனம் புகுந்து மறைந்ததாக கருதப்படுகிறதோ அப்பொழுதே புண்யத்தின் பொருட்டு அந்தேஷ்டிகர்மாவை நடத்தவேண்டும்.

100. தர்பை கட்டுகளினாலோ பொரச மரத்திலிருந்து எடுத்த இலைகளினாலோ நூலினால் சேர்த்து கட்டியும் பஞ்சகவ்யங்களினால் நனைந்து பிரதிமையை தெளித்து பிரதிஉருவம் போல் செய்து அந்தேஷ்டி செய்ய வேண்டும்.

101. கோமியத்தால் உண்டாக்கிய உருவத்திலே இஷ்டமான உருவங்களை செய்தோ அந்த மரணமுற்றவருக்குரிய கர்மாக்களை அந்தேஷ்டியை முன்பு எப்படி உதாரணமாக சொல்லப்பட்டதோ அப்படியே செய்ய வேண்டும்.

102. பிறகு நெய், தேன், பால் இவற்றால் நனைக்கப்பட்ட அந்த பிரதிமையை தகிக்க வேண்டும். பத்ரை என்ற கரணம் பூரம், பூராடம், பூரட்டாதி இந்த நக்ஷத்திரத்தில் சுக்ரன், அங்காரகன், ப்ருஹஸ்பதி இவர்கள் இருக்கும் பொழுது

103. எவர்களுக்கு மரணமும் தஹநமும் ஏற்படுகிறதோ அது குலக்ஷயம் ஏற்பட காரணமாகின்றது. எனவே அதன் பொருளை உணர்ந்து மறுபடியும் தகநம் செய்வதை ஆதரவோடு செய்ய வேண்டும்.

104. சவுசம் செய்யப்படாத இறந்த மனிதர்களுக்கு அந்த்யேஷ்டிகிரியை குழியில் புதைப்பதை செய்ய வேண்டும். அவர்களுக்கு தகண கிரியையும் பலிதிணேநகம் இவைகள் தேவையில்லை.

105. சவுள வயதிற்குள் உள்ள மனிதர்களுக்கு மரணம் சம்பவித்தால் தகனம் அல்லது குழியில் புதைப்பது. ஆகிய அவடக்கிரியை செய்யலாம் இரண்டு வருடத்தில் குறைந்த பிரதேசத்தில் அக்னிகொண்டு செய்யும் கிரியை இல்லை. உதக கிரியையும் தர்பணமும் இல்லை.

106. யதிகளுக்கும், க்ஞானிகளுக்கும் பூமியினுள் அடக்கம் செய்கின்ற கிரியையான அவடகிரியை செய்ய வேண்டும். உப்பை நிறைய குழியில் சேர்த்து மூடி தண்ணீர் அன்னம் கலந்த பலி இல்லாமல் உத்தரக்கிரியை செய்ய வேண்டும்.

107. சவுள கர்மா செய்து கொண்டவன் இறந்தால் தகனம் பிண்டம் திலதர்பணம் உண்டு. வயதானவர் மரணமுற்ற ஒவ்வொரு ஆண்டிலும், பிண்டப்ர தானம், தர்பணம் முதலிய உதக கர்மாவில் செய்ய வேண்டும்.

108. தசாஹம் (பத்துநாளும்) பிண்டப்ரதானம் உதககர்மா ஆகும். சிறப்பாக பத்து வருடத்தில் அதற்கு மேலும் பூமிக் குழியினுள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேகத்தில் எந்தகர்மாவானது செய்யும்படி செய்யப்பட்டுள்ளதோ அந்த சுத்தியை செய்ய வேண்டும்.

109. மணற் கரையில் தர்பங்கள் வடக்கு பாக மஸ்தகமாக அமைத்து சிவிகை முதலியவற்றில் ஒற்றியும் ஸ்மசானத்தில் அல்லது சுத்தமான பூதலத்தில்

110. ஒரு முழ அளவு பூமியை தோண்ட வேண்டும். அதில் படுக்கையாக அதிகமாக விஸ்தாரமில்லாமல் கற்பிக்க வேண்டும். இதில் சவத்தைவைத்து அக்ஷதை முதலியவற்றை கர்த்தாகொடுத்தும் சந்தனம் முதலியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

111. அங்கே மரணம் அடைந்தவறை வைத்து தெற்கே தலையும் வைத்து மண்ணில் மூட வேண்டும். யோகிகளுக்கு ஒரு கோல் அளவு அல்லது பாதி அளவு தோண்ட வேண்டும்.

112. உப்பினால் மேலே மூடி அதன் சமீபமான இடத்தில் அங்கே ஆலயத்தோடு கூடிய பீடத்தையோ லிங்கத்தையோ

113. சிலை ரூபமாகவோ அந்த மரணம் அடைந்தவருடைய ரூபத்தையோ செய்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும். அங்கே பிண்டோதகம் சிராத்தையும் செய்ய வேண்டியதில்லை.

114. அவருக்கு கட்டைவிரலை கட்டுவது தாம்பூலம் அளிப்பது முதலிய யாதொரு கார்யம் உண்டோ அதை செய்தல் கூடாது.

115. இடி நெருப்பு ஜ்வாலை முதலியவற்றினால் மரணம் அடைந்தவர்களுக்கு காரண கார்யம் செய்ய வேண்டும். ஓர் வருஷத்திற்கு மேல் மனைவி ஊரில் இருந்து கணவன் வேறு இடத்திற்கோ சென்று வராமலிருந்தால்

116. பன்னிரண்டு வருஷத்திற்கு பிறகு மேற்படி விதவை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இறந்தவராகவோ மரணம் அடையாமலோ அறியாவிடில் விதவைக்கோலத்தை கடைபிடிக்க வேண்டும்.

117. நான்கு சதுரமண்டலத்தை செய்து அங்கே மூன்று அங்குலம் உயரமாக பாத்திரத்தை வைத்து அதன் நடுவில் உமியை நிரப்பி சிறு குச்சிகளில் அக்னியை ஏற்படுத்தி தகனம் செய்ய வேண்டும்.

118. மரணம் அடைந்தவர்களுடைய தகனத்தின் பொருட்டு இவ்வாறு உள்ள நெருப்பை எடுத்துக் கொண்டு பாலோடு கூடிய அரிசியுடன்

119. காது, மூக்கு, வாய், தொப்புள் இந்த இடங்களில் ஹ்ருதய மந்திரத்தால் ஒன்பது துவாரங்களிலும் தங்கத்தின் துண்டுகளை ஹ்ருதய மந்திரத்தால் வைக்க வேண்டும்.

120. பாலோடு கலந்த அரிசியை வாமதேவ மந்திரத்தினால் வாயில் வைக்க வேண்டும். அகோர மந்திரத்தால் கட்டை விரல் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும்.

121. அதன் பிறகு சஹோதரர்களோடு கூட மாலையிடுதலை ஸபிண்டர்கள் செய்ய வேண்டும். வஸ்திரத்தின் நுனியினால் அப்பொழுது எல்லோரும் அதற்கு பிரதட்சிணம் செய்து

122. தாகம் தீர ஜலம் நிரம்பிய கும்பத்தையோ எடுத்துக் கொண்டு மூன்று முறை பிரதட்சிணம் செய்து அஸ்திர மந்திரத்தால் அதன் இடது புறத்தில் வைக்க வேண்டும்.

123. உடைந்த கபாலத்தில் உள்ள தண்ணீரை ப்ராணஸ்தானங்களில் வைக்க வேண்டும். ஸ்நான முடிவில் பஞ்சகவ்யத்தை அல்லது நெய்யை சாப்பிட்டு சிவமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

124. அப்பொழுதே தன்னால் முடிந்த அளவு தானம் செய்வது சிரமத்திற்காகவும் இறந்து போனவர்களுடைய பெயரோடு கூட தண்ணீர் எள்ளு கலந்த தர்பணத்தையும் கொடுக்க வேண்டும்.

125. இது முதலிய கர்மாக்களை செய்ய தகுந்தது. தத்வசுத்தி இல்லாதவர்களுக்கு கடைசி இறுதி சடங்குகளோடு கூடிய மஹேஸ்வர வடிவம் உள்ளவர்களுக்கு

126. தினந்தோறும் ஈசன் ஸ்கந்தன் முதலிய பெயர்களோடு தர்பணம் செய்ய வேண்டும். முதல் நாளில் தனித்தனியாக மூன்று முறை தர்பணம் செய்ய வேண்டும்.

127. தினந்தோறும் ஒன்றாக கூட்டி பன்னிரண்டு நாள் வரை தனித்தனியாக 75 எண்ணிக்கையோடு கூடிய தர்பணம் செய்து அந்த எண்ணிக்கையால் போஜனம் செய்விக்க வேண்டும்.

128. ஐந்து ஐந்து எண்ணிக்கையோடு கூடிய 200 தர்பணத்தை ஈசான் முதலிய மூன்று பேர் உடைய திருப்திக்காக செய்து தினம் ஒருவரையாவது போஜனம் செய்விக்க வேண்டும்.

129. இறந்தவரை முன்னிட்டு தாகத்தின் முடிவில் வஸ்திரம் அரிசி இவைகளுடன் கூடிய தானத்தை இறந்து சிவதீøக்ஷபெற்ற குடும்பத்தினர்க்கு வஸ்திரமின்றி எரித்ததற்காக நக்ன பிரச்சாதனம் என்ற தானத்தை செய்ய வேண்டும்.

130. தர்பணத்தின் முடிவில் நதி முதலிய தீர்த்த கரையிலோ அல்லது வீட்டிலேயோ பலி கொடுக்க வேண்டும். குடும்பமில்லாத தனிமனிதனுக்கு தினந்தோறும் தர்பணமும் பலியும் செய்யக் கூடாது.

131. ஆனால் ஒரே நாளில் செய்யக் கூடிய சிராத்தத்தில் தகனத்தின் முடிவில் ஈசன் முதலிய மூன்று பேர்களின் பொருட்டு அதற்காக தர்பணம் செய்து அதன் பொருட்டு சிவனை பூஜிக்க வேண்டும்.

132. துக்கமில்லாதவனுக்கும், சாதுக்களுக்கும் கெட்ட மனதுடைய மனிதர்களுக்கும் ஏற்பட்ட மரணத்தை இயற்கையாகவே மரணம் ஏற்பட்டதாக நினைத்து சவகார்யத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

133. எவர்கள் சிவவிரதத்தை அனுஷ்டிக்கின்றவர்களோ எவர்கள் சைவர்களோ எவர்கள் குடும்பத்தோடு கூடியவர்களோடு அவர்களுக்கு துக்கம் கிடையாது. சிறிது விவேகம் இருப்பதினால் துக்கம் கிடையாது.

134. அப்படியே எப்பொழுதும் ஆத்மஞானம் உள்ளவர்கள் எப்பொழுதும் சிவனை போல உள்ளவர்கள் அவன் அழிவை அடைவதில்லை. அப்படியே அழிவுண்டென்றால் முன்புள்ளது போல் நித்ய சிவலக்ஷணமில்லாதவனாகிறான்.

135. போகத்தை காரணமாக இல்லாததால் ஆத்மாக்களுக்கு உபசாரமாக இறப்பு சொல்லப்படுகிறது. தன்னுடைய குணத்துக்கு தக்கவாறு மரணம் ஆவது குறைந்து விடுகிறது. மரணம் இல்லாத நிலை கூடுகிறது.

136. தனக்கு அனுகூலமாகவோ பிரதி கூலமாகவோ சொல்லப்பட்டாலோ அவனுக்கு இடையூறுகள் ஏற்படுவதில்லையோ அந்த விருப்பமானவற்றை அடைகிறான்.

137. எவர்கள் சிவதீøக்ஷ பெற்றவர்களாக சொல்லப்படுகிறார்களோ அவர்கள் முடிவில் எல்லாவற்றையும் அறியக்கூடிய அனுபவிக்க வேண்டிய உடம்பு உடையவர்களாக ஆகிறார். ஆத்மாவை ஆவரணமாக உடையவராகவும் இருக்கிறார்கள்.

138. யார் ஒருவன் தேகத்தோடு கூடியவனோ அவன் மிகவும் குறைவு உள்ளவனாக சொல்லப்படுகிறான். இந்த தேகமானது அழியக் கூடியது. மனித வாழ்க்கையில் வாழைமரம் வளர்ந்து வாழை குலை வெளிவந்தவுடன் தன்னை இழந்து விடுவதுபோல மனித வாழ்க்கை அமைகிறது.

139. சாரம் உள்ளதாக எவன் நினைக்கிறானோ ஜலத்தில் நீர்குமிழி முட்டை ஏற்படுவது போல் ஏமாற்றம் அடைந்து முட்டாளாகிறான். ஐந்து ஆதார ஸம்ஸ்காரத்தால் ஏற்பட்ட சரீரம் மரணத்தையடைந்தால்

140. தன்னுடைய உடம்பினாலே செய்கின்ற கார்யங்களினால் உயர்வோ தாழ்வோ அடைகின்றான். இதற்காக வருத்தப்படுவதேன். மலை, பூமி, கடல் தெய்வங்கள் இவைகள் அழிவதை கண்டு வருந்துவதில்லை.

141. மனித வாழ்க்கை கடல் நுறைபோன்றது. மனிதவாழ்க்கை யாசிக்கப்படுவதில்லை. ஸ்லேஷ்மம், கண்ணீர், பந்துக்கள், இவர்களால் விடுபட்டு யோக்யத்தில் மரணமடைகிறான்.

142. அதனால் அழக்கூடாது. சக்திக்கு தக்கவாறு கிரியைகளை செய்ய வேண்டும். மறுதினம் மற்ற அங்கங்களின் தகனத்தை செய்தோ செய்யாமலோ இருக்கலாம்.

143. இரண்டாவது நாளிலோ அல்லது மூன்றாவது நாளிலோ நெய், பால் இவைகளுடன் கூடிய பிண்டங்களோடு சிதையின் சஞ்சயன கார்யத்தை செய்ய வேண்டும்.

144. மண்ணினால் ஆன பாத்திரத்தை எடுத்து பால் அல்லது தண்ணீர் நிரப்பி அங்கே மூன்று கட்டைகளை வைத்து அதன் மேல் அந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்.

145. பிறகு சஞ்சயன கார்யமின்றி எலும்பை சேர்ப்பது செய்ய வேண்டும். புதிய மண்பாண்டத்தில் ஒன்று, மூன்று, ஐந்து ஏழாவது நாளில்

146. பிராம்ணன் முதலான வர்ணத்தில் உள்ளவர்கள் இறந்த விஷயத்தில் முறைப்படி எலும்பை சேகரிப்பது செய்ய வேண்டும். ஸத்துமா பொறி அன்னம் அப்பம் இவைகளால் நான்கு திசைகளிலும் பலியை கொடுக்க வேண்டும்.

147. இதற்கு பிசாச பலி என்று பெயர். அந்த பிசாசுகளுடைய திருப்திக்காக அனுஷ்டிக்க வேண்டும். அங்கங்களிலிருந்து அங்கங்களை எடுத்து அந்த மந்திரங்களினாலே எடுத்து வைக்க வேண்டும்.

148. கிராமத்திற்கு வெளியில் கங்கை முதலிய நதிக்கரையில் அந்த தினத்திலோ அல்லது 15 தினங்களுக்கு பிறகோ மூன்று மாதங்களிலோ

149. ஆறு மாதத்திலோ ஒரு வருட முடிவிலோ அதற்கு மேற்பட்ட தினத்திலோ அஸ்தியை போட வேண்டும். அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து திலங்களால்

150. முன்னோர்களின் தர்பணத்தையும் தேவர்களின் தர்பணத்தையும் செய்ய வேண்டும். முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும். அந்த பூமியிலேயே பித்ருக்களுக்கு பிண்டம் வைக்க வேண்டும்.

151. குருவின் சிஷ்யர்கள் குருவின் உறவினர்கள் நித்ய அனுஷ்டானம் தவிர மற்றஜபம் முதலியவைகளை மூன்று நாட்கள் அனுஷ்டிக்காமல் இருக்க வேண்டும்.

152. அவர்களின் மற்ற சைவர்களான க்ருஹஸ்தர்களும் பிரும்மசாரிகளும் தீக்ஷிதர்களும் சவத்தீட்டிற்காக ஓர் தினம் நித்யானுஷ்டானம் ஜபங்களை விட வேண்டும்.

153. உலக வாழ்க்கையில் உள்ள கிருஹஸ்தர்கள் குடும்ப பழக்க வழக்கங்களை விட்டுவிடக்கூடாது. ஆகையால் தீக்ஷிதர்கள் லோக வழக்கமான ஆசாரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

154. சைவானுஷ்டமான வ்ருதத்தை உடையவனுக்கு தன்னுடைய முன்பிறப்பை ஏற்காததாலும் சம்சாரபந்தம் இல்லாமையினாலும் பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு இரண்டும் கிடையாது.

155. தீøக்ஷயினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட பூர்வாஸ்ரமத்தை உடைய கிருஹஸ்தர்க்கு போக்கப்பட்ட ஸம்ஸார பீஜத்தை உடையதும் நல்ல கர்மாக்களை உடைய ஞானிக்கு

156. ஒரு க்ஷணமாத்திரம் பிறப்பு இறப்பு தீட்டு உண்டாகிறது. அதுவும் ஸ்நானம் செய்வதால் நிவர்த்தியாகிறது. பிராமணனுக்கு 10 நாட்கள் தீட்டாகும். க்ஷத்ரியனுக்கு 12 நாட்கள் தீட்டாகும்.

157. வைச்யனுக்கு பதினைந்து தினம் தீட்டு காத்தபிறகு சுத்தியாகும். சூத்திரர்களுக்கு ஒரு மாதம் தீட்டாகும். பிறாமணனால் விவாஹம் செய்து கொள்ளப்பட்ட நான்கு வர்ண பெண்களுக்கும்

158. முறைப்படி பத்து, ஆறு, மூன்று, ஒன்று ஆகிய தினங்களில் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு முன்பு தாய்வழியில் கூறியபடி தீட்டை காக்க வேண்டும்.

159. பூர்ண கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தால் கொஞ்சநேரம் தீட்டு உண்டு. ஸ்நானம் செய்த பின்பு சுத்தி ஏற்படுகிறது. அந்ததாயாருக்கு பெண் குழந்தை ஆண் குழந்தை கர்பசேதனம் ஏற்பட்டால் ஒரு மாதத்திற்கு தீட்டு உள்ளது.

160. குழந்தைக்கு நாமகரணத்திற்கு முன்பும் பல் முளைப்பதற்கு முன்பும் உபநயனத்திற்கு முன்பும் மரணம் ஸம்பவித்தால் முறையே ஸ்நாநம், ஓர் நாள் தீட்டு, மூன்று நாள் தீட்டு காக்கவும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

161. அதற்கு மேல் ஞாதிகள் மறைந்தால் மூன்று தலைமுறையினருக்கும் 10 நாட்கள் தீட்டு உண்டு. கவுகர்மா வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் விவாக வயதுக்கு முன்பு வரையிலும் உள்ளவர்கள் மரணம் அடைந்தால்

162. சஹோதரர்களுக்கு பத்து நாள் தீட்டு உண்டு. பெயர் சூட்டியிருந்தால் அந்த குழந்தையின் தகப்பனார் பத்துநாள் தீட்டு உண்டு. அவ்வாறே உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் தீட்டு உண்டு.

163. மாமியார் அத்தை இவர்கள் இறந்தால் அத்தை பையன் மாமா மாமா பையனும் அத்தை பையனும் இறந்தால் பக்ஷிணி என்ற ஒன்றரை தினம் தீட்டு காக்க வேண்டும்.

164. இரண்டு பகல் தினத்தின் நடுவில் உள்ள ராத்திரியோ இரண்டு ராத்திரியையுடைய ஓர் தினம் முழுமையுமோ அனுஷ்டிக்கும். தீட்டு பக்ஷிணி என்று கூறப்பட்டுள்ளது.

165. சபிண்டர்களான தன் முன்னோர்களுக்கும் மூன்று நாளும் சமான உதக வர்கம் என்ற பின்தங்கிய தலைமுறையினர்களுக்கு ஓர் நாளும் முறைப்படி தீட்டு காக்க வேண்டும்.

166. பல் முளைத்ததற்கு பிறகு இறந்தவர்களுக்கு ஸ்நானம் மட்டும் கூறப்படுகிறது. பிராம்ணனுக்கு உபநயனம் ஆனபிறகும் க்ஷத்ரியன் வில்லை பிடித்த பிறகும்

167. வைஸ்யன் வியாபாரத்தில் ஈடுபட்ட பிறகும் நான்காம் வர்ணத்தவர் இரண்டு வஸ்திரங்களை கிரஹித்த பிறகும் இறந்தால் முழுமையான தீட்டை அனுசரிக்க வேண்டும்.

168. சவுச கர்மா செய்து கொண்ட க்ஷத்ரியனிறந்தால் ஆறு தினங்கள் தீட்டு உண்டு. அவ்விதமே வைச்யனுக்கு ஒன்பது தினம் தீட்டாகும். சூத்ரருக்கும் பன்னிரண்டு தினங்கள் தீட்டாகும்.

169. இவ்வாறாக எல்லா க்ஞாதிகளுக்கும் ஆசவுச விஷயங்கள் கூறப்பட்டுள்ள ஆசார்யனுக்கு மரணம் ஏற்பட்டால் மூன்று இரவு தீட்டு காத்தல் வேண்டும்.

170. அந்த குருவின் தர்மபத்தினி, புத்திரன் இவர்கள் இறந்தால் ஓர் பகல், இரவு தீட்டு காக்க வேண்டும். இறப்பு தீட்டு ஏற்பட்ட சமயத்தில் பிறப்பு தீட்டு ஏற்பட்டால்

171. இறப்பு தீட்டுடன் பிறப்பு தீட்டு சென்று விடுகிறது. ஆனால் இறப்பு தீட்டு பிறப்பு தீட்டுக்கு சமமாகி செல்லாது. பிறப்பு தீட்டு இருக்கும் பொழுது இன்னொரு பிறப்பு தீட்டு ஏற்பட்டால்

172. முன்பு ஏற்பட்ட பிறப்பு தீட்டுடன் பிறகு ஏற்பட்ட பிறப்பு தீட்டு சமமாகி விடுகிறது. பிறப்பு தீட்டில் இறப்பு தீட்டும் பிறப்பு தீட்டில் பிறப்பு தீட்டும்

173. அந்த நிலையில் எந்த தினம் அதிகமாக உள்ளதோ அதைதீட்டிற்கு அனுஷ்டிக்க வேண்டும். குறைவான தினத்தால் தீட்டு காக்கக்கூடாது. இறந்த தீட்டில் 10 நாட்களுக்கு மேற்பட்டு இறந்த செய்தி அறிந்தால் மூன்று தினம் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும்.

174. பிறந்த தீட்டு முடிந்தவுடன் ஒருநாள் இருந்தால் போதும். அதற்கு மேலே ஸ்நானம் செய்தால் போதும். இறந்து போனவர்கள் தகனத்திலிருந்து நித்யாக்னி கார்யம் செய்பவர்களுக்கு ஒரு வருஷம் வரை ஸ்நானம் உண்டு.

175. நித்யாக்னி கார்யம் செய்யாதவர்களுக்கு மரணமடைந்த தினத்திலிருந்து ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும். எந்த மாஹேஸ்வர பதவியுடைய நான்காம் வர்ணத்தவர்களும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்தவர்களும் இறந்தால்

176. அவர்களுக்காக பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு 15 தினங்கள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறே ஐந்து ஆசார்ய ஸ்தானங்களையுடைய ருத்ரகன்னிகைகளும் 15 தினம் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும்.

177. கீழ்த்தரமான அனுலோமத்தவர்களுக்கும் அவ்வாறே விபூதி ருத்திராக்ஷம் தரித்தவர்களுக்கும் மரணம் ஸம்பவித்தால் தொடக் கூடாது. ஸ்பிண்டர்களுக்கும் தகனம் செய்வது கூறப்பட்டுள்ளது.

178. பிறந்த தீட்டைவிட இருமடங்கு இறப்பு தீட்டும் அதை விட இருமடங்கு ஆர்த்வம் என்ற அகால மரணத்தீட்டும் அதை விட இருமடங்கு சூதிகா என்ற தீட்டும் அதைவிட தகன கிரியையும் சம்மந்தம் உள்ளதாக ஆகிறது.

179. இவர்களால் பிரேதத்தை சுமந்து ப்ரேதஸ்பர்சம் செய்யப்பட்டதோ அவர்கள் நக்ஷத்திர தரிசனம் வரையிலோ சூர்ய தரிசனம் வரையிலோ கிராமத்திற்கு வெளியே இருக்க வேண்டும்.

180. பிறகு அக்னியை தொட்டு பஞ்ச கவ்யத்தையும் நெய்யையும் அருந்த வேண்டும். இவ்வாறாக ஸாமான்யமான மனிதர்களின் இறப்பின் ஆசவுச முறை கூறப்பட்டது.

181. எந்த நான்காம் வர்ணத்தவர்கள் மாஹேஸ்வரர்களாக கூறப்படுகிறார்களோ அவர்கள் இஸ்யாத்யர் என கூறப்படுகிறார்கள். சைவ சம்மந்த பாட்டுகளை அறிந்தவர்களுக்கும் அவ்வாறே சிவாஸ்ரமத்தை கடைபிடிப்பவர்களுக்கும்

182. தேவதாசிகளுக்கும் இருபது நாட்களால் சுத்தி ஏற்படுகிறது. தாசன் தாசிகளுக்கு அவர்களை ஆச்ரயித்த குலத்தில் சொல்லப்பட்டதான ஆசவுசத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

183. கீழ்த்தர வர்ணங்களில் ஆசவுசம் கூறப்படவில்லை. ருத்திர கன்னிகைகளில் குலமானது தாய்வழியாக உள்ளபடி கூறப்பட்டுள்ளது.

184. அவ்வாறே தேவதாசிகளுக்கும் தாய்வழியில் உள்ள தன்மையாக தீட்டு கூறப்பட்டுள்ளது. அரசர்கள் பிரோஹிதர்களுக்கும் பிறப்பு இறப்பு தீட்டு கிடையாது.

185. ஸமய தீøக்ஷ பெற்றவனுக்கு நித்யகர்மாக்களில் ஆசவுசம் எப்பொழுதும் ஏற்படவில்லை. க்ருஹஸ்தன் இல்லாதவன் விருதத்துடன் கூடியவனுக்கும்

186. நிர்வாண தீøக்ஷயுடன் கூடியவன் அனுஷ்டானம் செய்பவர்கள் நல்ல ஆத்மாக்கள், க்ருஹஸ்தர்கள் ஆகியவர்களுக்கு நித்ய நைமித்ய கர்மாக்களில் ஆசவுசம் இல்லை.

187. காம்ய கர்மாக்களில் ஆசவுசமானது ஏற்பட்டால் ஸ்நானம் செய்வதால் சுத்தி அடைகிறது. விரதிகளுக்கு ஸ்நானம் கூறப்படவில்லை. தனியாக சமைத்து உண்பவர்க்கு ஆசவுசம் இல்லை.

188. இவ்வாறாக தன்பொருட்டும் பிறர் பொருட்டுமாக ஆசவுச விஷயம் கூறப்பட்டது. பிறர் பொருட்டான பரார்த்தத்தை உலக ஸம்ரக்ஷணத்திற்காக விட்டு விடவேண்டும்.

189. ஸஹோதரர் மகன், தகப்பனார், மற்ற பந்து ஜனங்கள் ஞாதிகள் என்று கூறப்படுகிறார்கள். ஞாதிகளின் ஸ்திரீகளின் பிறப்பு விஷயத்தில் ஆசவுசம் கூறப்படவில்லை.

190. ஏழுதலைமுறை உள்ளவர்களிடமிருந்து உண்டான புருஷர்களின் பிறப்பு இறப்புகளில் தீட்டு அனுஷ்டிக்கப்பட வேண்டும். அவ்விடத்திலும் ஐந்தாம் தலைமுறைக்கு மேல் மூன்று நாள் ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும்.

191. இதற்கு மேல் உள்ள அறிந்ததான பந்துக்களின் ஆசவுசம் ஒன்றரை தினம் பிராமணர்க்கு விவாகமாய் இருப்பினும் அவ்வாறே க்ஷத்திரியர் முதலிய வம்சங்களுக்கும் ருதுவான பிறகும் (விவாகத்திற்கு பிறகு) ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும்.

192. பிராம்ணர் முதலானவர்கள் பிறப்பு விஷயத்தில் ஒன்று இரண்டு, மூன்று என்ற குறைவான முறைப்படியும் முறையில்லாமல் பிறந்தவர்களுக்கு இரண்டு, மூன்று நான்கு என்ற நாட்களின் அதிகப்படியானால் சுத்தி ஏற்படுகிறது.

193. கீழ்த்தரப் பட்டவர்ணத்தவர்களுக்கு ஆசவுசம் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் ஆசாரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஸாமான்யமான ஸ்திரீகள் எப்பொழுதும் பரிசுத்தமானவர்கள் அல்ல.

194. அபிஷேகத்தினால் சுத்தமாக்கப்பட்ட அரசர்கள் எப்பொழுதும் சுத்தி உள்ளவர்களாக ஆகிறார்கள். மஹான்களும் மந்திரிகளும் மஹேசனிடம் ஆர்வம் பக்தி உள்ளவர்களாக

195. சிவகைங்கர்யத்தில் ஈடுபட்ட எந்த நான்காம் வர்ணத்தவர்கள் விபூதி ருத்திராக்ஷம் இவைகளுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இருபது நாள் முதல் இருபத்தி ஐந்து நாள் வரை ஆசவுசம் அனுஷ்டித்து சுத்தியுள்ளவர்கள் ஆகிறார்கள்.

196. இறப்பு பிறப்பு சம்மந்தமுள்ளவர்கள் நித்ய அனுஷ்டானத்தை எவ்வளவு தினங்கள் அனுஷ்டிக்காமல் இருக்கிறார்களோ அவ்வளவு நாட்கள் சுத்தி உள்ளவர்கள் ஆகிறார்கள்.

197. நித்ய அனுஷ்டானம் செய்யாமல் இருந்ததிற்கு பிராயச்சித்தமாக இரவில் யவையானாலான போஜனமும் மூன்று காலமும் ஸ்நானம் பூஜை ஹோமம் ஜபம்.

198. இவைகளின்றி இடையூறு இல்லாமல் யோகாப்யாசம் செய்து அதன் முடிவில் மூன்று இரவு யோகமின்றி எப்பொழுது குறைவு ஏற்படுகிறதோ அப்பொழுது மூன்று தினங்கள் யோகத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

199. பக்தி ஞானம் வைராக்யம், இவைகளில் ஏதேனும் ஒன்றில் எவனுக்கு நன்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த ஸமயதீøக்ஷ உள்ளவனால் பூஜா கார்யம் செய்தல் வேண்டும்.

200. மந்தம், மந்ததரம் என்ற தன்மையோடு எவர்க்கு பக்தி, ஞான வைராக்யம் உள்ளதோ அவர்கள் இரண்டு நாள் அந்தர்யாகம் செய்ய வேண்டும்.

201. ஓர் தினம் யவையை புசித்து அல்லது அவிசயோ புசித்து ஸ்னானத்தின் முடிவில் ஆயிரம் ஆவிருத்தி அகோர ஜபம் செய்து பத்தில் ஓர் பாகமாக 100 ஆவிருத்தியை ஹோமம் செய்ய வேண்டும்.

202. எவனுக்கு சிகாசேதனம் இல்லையோ அந்த பாதார்தகன் என்ற ஸமயதீøக்ஷ பெற்றவனுக்கு மேல் கூறிய முறைப்படி ஜபங்களை அனுஷ்டிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

203. சிகாசேதனம் செய்து கொண்ட நிர்வாணதீøக்ஷ பெற்றுக் கொண்டவனுமான தீக்ஷிதனுக்கு நித்யம், நைமித்திகம், காமியம் மற்றும் எல்லா விசேஷ கிரியைகளுக்கும் யோக்யனாகிறான்.

204. சிகாதேசனம் இல்லாதவனுக்கு நித்ய கர்மாக்களில் மட்டும் யோக்யதை உண்டு. இவ்வாறாக எல்லோர்க்கும் ஆலய பிரவேசமானது.

205. அர்த்த மண்டபத்தின் வெளியில் வரை பிரவேசிப்பது குற்றமில்லை என கூறப்படுகிறது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அந்த்யேஷ்டிவிதியாகிற இருபத்தியேழாவது படலம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar