Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பாணலிங்க பிரதிஷ்டையின் முறை
படலம் 36: பாணலிங்க பிரதிஷ்டையின் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
04:06

36வது படலத்தில், பாணலிங்க பிரதிஷ்டையின் முறை கூறப்படுகிறது. அதில் முதலாவதாக, பாணன் என்ற அசுரனின் வேண்டுதலால் அவனுக்கு பூஜையின் பொருட்டு மஹேஸ்வரனால் 14 கோடி லிங்கம் கொடுக்கப்பட்டது. அவன் அந்த லிங்கங்களை வழிபட்டு காலத்தின் முடிவில் நேபாளம், மற்ற நதியின், மத்யபாகம் மலைகள் இவைகளின் போட்டு விட்டான் என்று. பாண லிங்கத்தின் உற்பத்தி கூறப்படுகிறது. பாண லிங்க விஷயத்தில் கால் அங்குலம் என்ற அளவு விருத்தியால் உளுந்து அளவு வரையிலும் கை அளவு வரையிலுமாக உயரத்தின் அளவு எண்ணப்படுகிறது. அளவின்றி விருப்பபடியும் ஏற்றுக் கொள்ளலாம் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. அகலம், உயரம், விஷயத்தில் அளவு விரும்பதக்கதல்ல என்று அளவு முறை கூறப்படுகிறது. பிறகு ரேகை பிந்து கலப்படம் முதலியவைகள் இல்லாததாகவுமோ, அது உள்ளதாகவுமோ லிங்கத்தை ஏற்றுக்கொள்ளவும் என கூறப்படுகிறது. எல்லா லிங்கத்திலும் பாணலிங்கம் விசேஷம் என கூறப்படுகிறது. கிராமங்களின் ஒரே பூமியின் வெளியிலோ உள்பக்கமோ பாணலிங்கத்திற்கு விமானம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு கருங்கல், மண், உலோகம், நல்லமரம், ரத்தினங்கள் இவைகளால் பாண லிங்கத்திற்கு பீடம் அமைக்கவும் என கூறப்படுகிறது. அந்த பீடமும் எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்வதற்காக ஒரே நிறமாக அமைக்கவும் எனக் கூறி அந்த பீடத்தின் சுற்றளவு அளவு முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு நீர்வீழ்ச்சியில் இருப்பதும் மலைகளில் உண்டானதுமான லிங்கம் பாண லிங்க உருவம் போல் காணப்பட்டால் அந்தலிங்கமானது எல்லா நன்மையையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. ரத்னம் உலோகம், பிருதிவி, சம்மந்த பட்ட லிங்கங்களின் விஷயத்தில் பீடமானது அந்த பொருள் உண்டான பொருளாலோ, மற்ற பொருளாலோ அமைத்தல் நல்லது. அதில் எந்த திரவ்யத்தால் லிங்கம் உள்ளதோ அந்த திரவ்ய சம்மந்தமான பீடத்தை அமைப்பது சிரேஷ்டமாகும் என கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட எல்லா லிங்கங்களின் பிரதிஷ்டை முதலான கார்யங்கள் கூறப்படுகிறது என்று (பிரதிக்ஞை) காணப்படுகிறது. பிறகு சைவலிங்க பிரதிஷ்டையில் உயர்ந்ததான காலமானது, உதாரணமாக காணப்பட்டுள்ளது. அவ்வாறே சலலிங்க பிரதிஷ்டையுடன், பிரதிமாதி பிரதிஷ்டையிலும் நடுத்தரமான காலம் கூறப்படுகிறது.

பாணாதி லிங்கத்தின் விஷயத்தில் அதமமான காலம் விரும்ப தக்கதாகும். இந்த பிரதிஷ்டை விஷயத்தில் முமுக்க்ஷúகளின் விஷயம் விசேஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு வஜ்ரபந்தனம் இன்றி செய்யாமல் பாணலிங்க ஸ்தாபனம் ஆரம்பிக்கவும் என கூறி இந்த லிங்கஸ்தாபன விஷயத்தில் செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. முடிவில் எது கூறப்படாததாக உள்ளதோ அந்த விஷயங்களை லிங்கஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்யவும். நான்காவது தின ஹோமமும் சண்டிகேஸ்வர பூஜையும் இங்கு தேவைஇல்லை என கூறப்படுகிறது. பிறகு ஜீர்ணாதி குறைபாடு உள்ள பாணலிங்கத்தை முறைப்படி கொஞ்சங்கமும் நகர்த்தக் கூடாது. தங்கதகடு முதலான திரவ்யங்களால் கெட்டிப்படுத்தி சாந்தியை அனுஷ்டிக்கவும் என கூறி பாணலிங்க விஷயத்தில் ஜீர்ணோத்தாரண விதியில் செய்ய வேண்டிய பூஜா முறைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு அஷ்டபந்தனம் முதலியவைகள் விடுபட்ட போதிலும் தளவரிசைகள் ஜீர்ணம் ஆன பொழுதிலும் சாந்து பூசும் திரவ்யங்கள் குறைந்த பொழுதிலும், அதற்காக சொல்லப்பட்ட முறையையே அனுஷ்டிக்க வேண்டும் என கூறி அந்தந்த கார்யத்தை அனுசரித்து செய்யவேண்டிய விசேஷமுறை காணப்படுகிறது. ஆலயம் கீழே விழுந்தாலும், பின்னமானாலும், ஸ்வாயம் புவம் முதலிய விஷயத்திலும் இந்த முறையானது. ஸமான மாக கூறப்பட்டுள்ளது. பிறகு ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்களின் விஷயத்தில் மந்திர ஸங்கரம் விரும்பத்தக்க தல்ல என கூறப்படுகிறது. இரத்ன லிங்கம், ஸ்வர்ணம் முதலிய உலோக லிங்கம், மிருத்லிங்கம் சலலிங்கம் அசல லிங்கம் ஆகிய விஷயத்தில் பாணலிங்கம் ஸ்தாபனம் செய்யும் முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முடிவில் சலலிங்கமானது, அங்கம் பிராதாணிகம் என இரு வகைப்படும். அதில் சித்ரம் முதலிய பிரதிமைகளின் பூஜைக்காக அந்தந்த மூர்த்தீயின் முன்பாக பூஜிக்கப்பட்டலிங்கம் அங்கம் என கூறப்படுகிறது. அந்தலிங்கம் இன்றி மற்ற லிங்கங்கள் பிராதானிகம் எனப்படும். அந்த லிங்கங்களின் பூஜை எந்த காலத்தில் எவ்வாறு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நித்யோத்ஸவம் முதற்கொண்டதான அந்த பூஜையானது செய்ய வேண்டும். வேறு ஒரு இடத்தில் நித்யோத்ஸவம் முதலியவை சுத்தநிருத்தம் இவையின்றி மற்றவை முன்போல் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இந்த விதியானது ஆன்மார்த்த பூஜையில் விசேஷமாக கூறப்பட்டுள்ளதாக அறிவிக்கிறார் இவ்வாறாக 36வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பாண லிங்க பிரதிஷ்டையை சுருக்கமாக முறையை கூறுகிறேன். பாணன் என்ற அசுரன் ஆதரவோடு கூறுகிறேன். பாணன் என்ற அசுரன் ஆதரவோடு சித்தி அடையும் பொருட்டு

2. பூஜைக்காக பலவித லிங்கங்களை வேண்டினான். பிறகு மஹேச்வரன் பதினான்கு கோடி லிங்கங்களை அர்ப்பணித்தார்.

3. அவைகளை பூஜித்து கால முடிவில் கீழ்கண்ட ஸ்தானங்களில் ஸ்தாபித்தார். லிங்காத்ரியிலும் காலிகா கர்த்தத்தில் ஸ்ரீ நகரத்தில் கன்யா காச்ரமத்தில்

4. கன்யா தீர்த்தத்தில், நேபாளம், மஹேந்திரம், அமரேச்வரம் மற்றும் நதீமத்யம் பர்வதத்திலும் ஸ்தாபித்தார்.

5. உளுந்து அளவு ஓர் முழ அளவு வரை அவைகளின் அளவு உதாரணமாகும். கால் அங்குல வ்ருத்தியாலோ எதேச்சையான அளவோ ஏற்கப்படவேண்டும்.

6. பாண லிங்கத்திற்கு அகலம் சுற்றளவின் அளவு சொல்லப்படவில்லை. ரேகை, பிந்து, களங்கம் முதலியவை சேர்ந்ததாகவோ இல்லாததாகவோ இருக்கும்.

7. எல்லா லிங்க பூஜைகளுள் பாணலிங்க பூஜை விசேஷமாகும். ஸ்நபநத்தில் ஹோமத்தில் தூப, கந்த புஷ்ப நிவேதனத்திலும்

8. எல்லா கர்மாக்களிலும் ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்தில் ஆலயம் பீட விஷயங்களிலும் நியமம் ஏதும் குறிப்பிடவில்லை.

9. க்ராமாதி லக்ஷணமுள்ள எல்லா பூமிகளுக்கும் வெளியிலோ உள்ளிட்டோ பாண லிங்கத்தின் விமானம் கல்பிக்க வேண்டும்.

10. கற்சிலை, மண், உலோகம், நல்லமரம், ரத்னம் முதலிய திரவ்யங்களால் பீடம் ஏற்படுத்த வேண்டும், ஒரே ஜாதியையுடைய பொருளால் எல்லா விருப்பத்தையுமடைய பீடத்தை அமைத்தல் வேண்டும்.

11. லிங்க உயரத்தின் மூன்றில் ஒரு பாகமோ ஐந்தில் இரண்டு பாகமோ லிங்கத்தின் அடிப்பாக அளவோ லிங்கத்தில் பாதி அளவோ பீடமாகும்.

12. விருப்பப்பட்ட அளவோ, தோண்டப்பட்ட அளவுடன் கூடியோ, நீர்வீழ்ச்சியில் இருப்பதாகவும் பாண லிங்கத்தின் உருவ அமைப்பாகும்.

13. எல்லா சுகத்தையும் கொடுக்க கூடிய இன்னொரு லிங்கத்தை பற்றி அறியவும், மலை முதலானவைகளில் உண்டானவைகளும் பாணலிங்கமென அறிய வேண்டும்.

14. உயரமாக இருக்கும் பாகத்தில் முகத்தை பெருத்ததாகவோ மெலிந்ததாகவோ அழகானதும் உருவமுள்ளதும் மேல் பாகத்தை உடையதாக

15. ரத்ன லிங்கம் கூறப்பட்டு உலோக லிங்கத்திலும் இயற்கையானதோ அல்லது பின்னமானதோ அல்லது சேர்க்கப்பட்டதுமான லிங்கம் சிரேஷ்டமாகும் என அறிய வேண்டும்.

16. ரத்ன லிங்கத்திலும் உலோக லிங்கத்திலும் மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்திலும் மற்ற லிங்க விஷயத்திலும் பிரதிஷ்டை கூறப்படுகிறது.

17. சைல லிங்க பிரதிஷ்டையில் சிரேஷ்டகாலம் கூறப்படுகிறது. சந்திர சேகரர் முதலிய சல லிங்க பிரதிஷ்டையில் மத்ய காலம் கூறப்படுகிறது.

18. பாண லிங்க பிரதிஷ்டையில் அதம காலமாகும். யோகிகளின் லிங்க பிரதிஷ்டையில் எல்லா காலமும் உகந்தது. மாஸம், நக்ஷத்ர, வாராதி விதிகள் சொல்லப்படவில்லை.

19. அது போலவே பாண லிங்க பிரதிஷ்டையிலும் காலங்களை நியமிக்காமல் வஜ்ர பந்தனம் முதலியவைகளை செய்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

20. முன்பு கூறப்பட்டுள்ள விதிப்படி அங்குரார்ப்பணம் செய்யவும். ஒன்பது ஐந்து முதலான ரத்னங்களை வைக்க வேண்டும்.

21. பிண்டிகையின் குழி மத்தியில் தங்கத்தையாவது வைக்கவும். லக்ஷணோத்தாரம் செய்ய வேண்டாம். அதன் ஸ்வய உருவமோ அமைப்பாகும்.

22. ம்ருத்ஜலத்தினால் அஸ்த்ர மந்திரத்தினால் லிங்க சுத்தி செய்து ஜலாதிவாஸம் செய்து ஒன்பது, ஐந்து குண்டம் இவைகளை

23. வேதிகையுடன் கூடியதாக லிங்க அதிவாஸத்திற்காக செய்யவும், க்ருஹம் முதலியவைகளில் வேதிகையின்றி ஸ்தண்டிலத்தில் வைத்து பூஜிக்க வேண்டும்.

24. சில்பி உத்வாஸநம், புண்யாஹ பிரோக்ஷணம், பிராம்மண போஜனம் மெழுகுதல் பூமி பரீøக்ஷ வாஸ்து சாந்தி ஹோமம், தர்பணம் இவைகளைச் பரீøக்ஷ செய்ய வேண்டும்.

25. ஸ்தண்டிலத்தில் சயனத்தை வைத்து முன்பு கூறியதுபோல் பூஜை செய்யவும். ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை எடுத்து பஞ்சகவ்ய சுத்தி செய்ய வேண்டும்.

26. பிம்பத்தை பூஜித்து வஸ்திரம் அணிவித்து ரக்ஷõபந்தனம் செய்யவும். சயனாதி வாஸம் செய்து சிவகும்பம் வர்த்தினியுடன் கூட

27. சூத்ரத்துடனும் வஸ்திரத்துடனும் கூடிய அஷ்டவித்யேச்வர கும்பங்களை தேங்காயுடனும் ஸ்வர்ணத்துடனும், சந்தன ஜலத்துடனும்

28. ஸ்தாபித்து அந்தந்த தேவர்களுடன் கூட பூஜிக்கவும், தத்வதத்வேச்வரநியாஸம், மூர்த்தி மூர்த்தீச்வரந்யாஸம் செய்து சிவாக்னி கார்யம் செய்ய வேண்டும்.

29. ஸமித், நெய், அன்னம், பொறி, எள் இவைகளுடன் கூடி நூற்றி எட்டு ஆவ்ருத்தி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

30. மனோன்மணிக்கு பாதி பாகமான ஐம்பத்தி நான்கு ஆவ்ருத்தியும், அங்க மந்திரங்களால் பூஜித்து ஒரு பாகமும் தத்வதத்வேச்வர மூர்த்தி மூர்த்தீச்வர ஹோமம் செய்ய வேண்டும்.

31. லிங்கத்திற்கு வஸ்திர வேஷ்டனம் செய்வித்து நிவேதனம் ஸமர்ப்பிக்கவும். காலையில் ஸ்நான அனுஷ்டானங்களை செய்து மண்டப பூஜை செய்ய வேண்டும்.

32. லிங்கத்தையும், அக்னியையும் பூஜித்து அகோர மந்திரத்தால் நூறு ஆஹுதி செய்யவும். பஞ்சாங்க பூஷணமும் தட்சிணையும் பெற்று சந்தோஷமுடையவராக

33. முஹூர்த்த ஸமயத்தில் மந்த்ர நியாஸம் செய்யவும். தேசிகர்களுக்கு தட்சிணை ஒன்று முதல் ஒன்பது நிஷ்கம் வரை ஆகும்.

34. ஆஸன மூர்த்தி மூலத்துடன் பூஜித்து மூல மந்திரத்தை சிவனிடம் ஸமர்பிக்கவும், கட தீர்த்தங்களால் தேவன், தேவி இந்த மூர்த்தங்களை அபிஷேகிக்கவும்.

35. நைவேத்ய தூப தீபம் கொடுத்து ஸ்னபநாபிஷேகம் செய்விக்கவும். இப்படலத்தில் கூறாதவற்றை லிங்க ஸ்தாபனப்படி செய்ய வேண்டும்.

36. நான்காவதாக சண்டேச பூஜை ஹோமம் இங்கு கூறப்படவில்லை, அர்ச்சனாங்க விதிப்படி பிரதிதினமும் தேவனை அர்ச்சிக்க வேண்டும்.

37. விக்ரஹங்களின் குறை ஏற்படுதல் சிஷ்ட லிங்க விஷயத்தில் இல்லை, ஸாமான்ய பாண லிங்க விஷயத்தில் ஜீர்ணாதி தோஷ துஷ்டங்களை விதிப்படி மாற்றகூடாது.

38. குறை ஏற்படும் விஷயத்தில் ஸ்வர்ணபட்டங்களால் கெட்டியாக பந்தனம் செய்து சாந்தி செய்யவும். கும்பம், ஸ்தண்டிலம் மண்டலம் பீடங்களிலோ

39. முன்பு ஏற்பட்ட இடத்திலோ கிழக்கு திக் முதலான மண்டபங்களிலோ பரமேஸ்வரனையும் வடக்கு திக்கில் மனோன்மனியையும் பூஜித்து

40. அஷ்டவித்யேச்வர ஸஹிதமாக பூஜித்து கந்தாதி உபசாரங்களாலும் பூஜாகார்யங்கள் முடியும் வரை பஞ்சாங்க பூஷணராயும்

41. பூஜை முடிவில் விஸர்ஜனம் செய்து சாந்தி ஹோமம் செய்யவும், பூஜை ஆரம்பத்திலோ முடிவிலோ ஹோமம் செய்ய வேண்டும்.

42. அஷ்டபந்தனம் விடுபட்ட விஷயத்தில் ஸம்ப்ரோசணமின்றி முன்பு கூறப்பட்டதில் பாதி அளவு ஹோமத்தையோ செய்யவும், லிங்கத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து கும்ப ஸ்தானத்தை செய்யவும்.

43. கும்பத்தில் ஆவாஹித்து கும்ப மந்திரங்களை பூஜிக்கவும். ஜீர்ணோத்தாரண விதியில் ஸ்நபனம் ஏற்றத்தக்கதல்ல.

44. சிவாதி கும்பங்களால் அபிஷேகமோ பிரோக்ஷணமோ செய்யவும். ஹோமாபிஷேக க்ரியை முடிவில் ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

45. சுற்றிலும் மருந்து சாத்தும் கர்மாவில் இந்த விதி கூறப்பட்டுள்ளது. கர்ப்ப கிருஹத்தில் மற்ற இடங்களில் குறை இருந்தாலோ, சுதையில் குறை ஏற்பட்டாலோ

46. சிறிது காலம் நிறுத்தி கர்மா செய்யும் சமயத்தில் பூஜையில்லாமல் இருக்கலாம். ஹோமம் முதலியவை இல்லாமல் லிங்கத்தை பூஜிக்க வேண்டும்.

47. சந்தனம் முதலிய உபசாரங்களால் சாந்தி ஹோமம் செய்யவும். குறைபாடுள்ள இடம் சிறியவை, பெரியவை என அறிந்து மூர்த்தி ஹோமம், திசா ஹோமத்தை செய்ய வேண்டும்.

48. பீடமும் தளவரிசையும் குறைவுபட்டால் தேவனுக்கும் பீடத்திற்கும் ஸ்நபனம் செய்யவும். பீடத்திற்கும் தளவரிசைக்கும் இடையில் உள்ள சேர்க்கையில் கடின தன்மை குறைவுபட்டால்

49. வஸ்திரங்களால் லிங்க பீடத்தை சுத்தி செய்து நிர்மால்ய சோதனம் செய்து அதன் பிறகு அஸ்திர தீர்த்த பிரோக்ஷணமும் ஸ்நபனமும் செய்யவேண்டும்.

50. பலதினங்கள் அபிஷேகம் செய்யாமல் இருந்தால் மஹா ஸ்நபனம் செய்யவும். ராஜ்யம், ராஜா அமைதிக்காக மஹாஹவிஸ், நிவேதனம் செய்யவேண்டும்.

51. கிராமஜனங்களுக்கும், கிராமத்தை சுற்றியுள்ள ஜனங்களுக்கும் கர்த்தாவிற்கும் செய்விப்பவர்களுக்கும் ஆசார்யனுக்கும் சாந்திக்காக மஹாஹவிஸ் கூறப்பட்டுள்ளது.

52. ஆலயம் பின்னமானாலும் கீழே விழுந்தாலும் முன் கூறியபடி பிராயசித்தம் செய்யவேண்டும். சுயம்பு லிங்கங்கலிலும் இது ஸாமான்ய விதியாகும்.

53. சில்பியின்றி விடுபட்ட கர்மாவை ஸம்ப்ரோக்ஷண கர்மாவுடன் சேர்த்து செய்யவும். மற்ற பூஜா விஷயங்கள் பொதுவாக லிங்க பிரதிஷ்டையில் கூறப்பட்டவையாகும்.

54. ஸ்வாயம்புவாதி லிங்கங்களில் மந்திர ஸங்கரம் ஏற்றத்தக்கதல்ல, ரத்னஜ லிங்கத்திலும் இந்த பிரகாரப்படி ஸ்தாபனமாகும்.

55. ஸ்வர்ணம், லோஹஜம் முதலிய சலமூர்த்தியிலும் அசலமூர்த்தியிலும் அங்கங்கள் குறைவு ஏற்பட்டால் முன்பு கூறியபடி ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

56. சலமூர்த்தியானது அங்கம், ப்ராதானிகம் என இருவகைப்படும். சுவற்றிலுள்ள படபிம்பங்களுக்கு அதன் முன்பு பூஜைக்காகவும்

57. செய்யப்பட்ட பூஜை அங்கி எனப்படும். மற்றவை பிராதானிகமாகும் அங்கிகளோவினில் சாஸ்திரத்தில் கூறியபடி எந்தெந்த காலத்தில் பூஜைகள்

58. நித்யோத்ஸவம் முதலானகளாக கூறப்பட்டுள்ளதோ அதன்படி செய்வது அங்கி பூஜையாகும். மற்ற பூஜா விஷயத்தில் சுத்த ந்ருத்தத்துடன் முன்புபோல் நித்யோத்ஸவாதிகளை

59. தவிர்த்து முன்பு கூறியபடி ஆத்மார்த்த பூஜையோடு விசேஷமாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பாணலிங்க பிரதிஷ்டா முறையாகிற முப்பத்தியாறாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar