Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அங்கலிங்க பிரதிஷ்டை
படலம் 42: அங்கலிங்க பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
05:06

42வது படலத்தில் அங்கலிங்கத்தின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் எங்கு மண்டபங்கள் பரிவாரங்கள் பிராகாரங்கள் (இந்த) கோபுரங்கள் லிங்கத்திற்கு இருக்கின்றனவோ அந்தலிங்கம் பிரதானம் என கூறப்படுகிறது. எந்தலிங்க மானது. ஐந்து பிராகாரத்தின் நடுவில் பரிவார தேவர்கள் இன்றி பிரதான லிங்கத்திற்கு இடையூறின்றி உள்ளதோ அந்தலிங்கம் அங்கலிங்கம் எனப்படும் என்று பிரதான, அங்கலிங்கத்தின் அமைப்பு கூறப்படுகிறது. அங்கலிங்க விஷயத்தில். மேற்கு, வடக்கு, கிழக்கு, திக்குகளில் மூலஸ்தான லிங்க ஆலய அளவில் விமானம் முதலியவைகள் செய்து அங்கு அங்கலிங்கம் ஸ்தாபனம் செய்யவும். அங்கலிங்கம் ஸ்தாபனத்திற்கு உரிய இடத்தில் பிரதிமையையோ, ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. மூலஸ்தானத்திற்கு மூன்றாவது பிராகாரத்தின் வெளியில் தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தால் அங்கு பரிவாரம் முதலியவற்றை சூக்ஷ்மமாக ஸ்தாபித்து பூஜிக்கவும். அங்கு நித்யோத்ஸவம் முதலியவைகளை செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்கம் முதலியவைகள் சைவமார்க்கத்தினாலேயே பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். பாசுபத தந்திரத்தினாலோ மஹாவ்ருத தந்திரத்தினாலோ பிரதிஷ்டை செய்யக் கூடாது. பவுத்த ஆர்கத, காபால, பாஞ்சராத்திர, முதலிய வேறு சித்தாந்த கிரந்த முறையினாலும் பிரதிஷ்டை செய்யக் கூடாது. அறியாமையினால் ஸ்தாபித்தாலும் உடனேயே சைவதந்திரத்தால் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்க விஷயத்தில் விமானம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. அங்கு ஸார்வதேசிகம் என்ற விமானம் ஆலயம் செய்யப்படவேண்டும். லிங்கமும் ஸார்வ தேசிகமே விரும்பத் தக்கதாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயம் அமைக்கும் விஷயத்தில் தனிமையாக உழுதல் முதலிய கிரியைகள் செய்ய வேண்டுமா என்பது விளக்கமாக கூறப்படுகிறது. ஆத்யேஷ்டிகை முதலிய கார்யங்கள் அங்கு செய்ய வேண்டியதாகும் மூர்த்நேஷ்டிகை முதலிய கார்யம். பிரதிஷ்டை ஜீர்ணோத்தாரணம் ஆகியவைகள் முன்பு கூறப்பட்டுள்ள விதிப்படி. எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. மூலஸ்தான லிங்கத்திற்கு பவித்ர சமர்பணம் முதலிய கார்யங்கள் செய்யும் பொழுது அங்கலிங்கம் முதலியவைகளுக்கு பவித்ர ஸமர்பணம். அந்த காலத்தில் செய்ய வேண்டுமா? இல்லையா? என்று விளக்கம் கூறப்படுகிறது. பிறகு தனியாகவோ சாஸ்திர முறைப்படி செய்ய வேண்டும் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும் யஜமானன் ஆயுள், ஆரோக்யம், முதலியவைகளை உடையவராகவும் நல்லவிருப்பத்தை அடைந்த வராகவும் தேகம் அழியும் சமயம் சிவனுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 42வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அங்க லிங்க பிரதிஷ்டையை சுருக்கமாகக் கூறுகின்றேன். லிங்கம் பிரதானம் என்றும் அங்கம் என்றும் இருவகைப்படும்.

2. மண்டபங்கள் பிரகார கோபுரம் முதலியன பரிவாரங்கள் எந்த லிங்கத்திற்கு இருக்கின்றனவோ அது பிரதான லிங்கம் எனக் கூறப்படுகிறது.

3. ஐந்து பிரகாரங்கள் நடுவில் எது பிரதான லிங்கத்திற்கு விரோதம் இல்லாமல் பரிவாரம் இல்லாமல் உள்ளதோ அது அங்க லிங்கம் எனப்படும்.

4. மேற்கு வடக்கு கிழக்கு திக்குகள் சுபமான திசைகள் எனப்படும். சுபதிசையில் பிரதிஷ்டை செய்வது யோகத்தின் பொருட்டும் எல்லா திக்குகளிலும் பிரதிஷ்டைசெய்வது முக்தியின் பொருட்டும் ஆகும்.

5. அவைகளுக்கு விமானம் முதலியவைகள் மூல லிங்கத்திற்கு பெரிதாக இருக்கக் கூடாது. அந்த இடத்தில் லிங்கத்தையோ பிரதமையையோ இரண்டையுமோ பிரதிஷ்டை செய்யலாம்.

6. பரிவார தேவதைகளாகி கூறப்பட்டவைகளை மூன்றாவது பிரகார வெளியில் விரிவு இல்லாமல் செய்ய வேண்டும்.

7. அங்கு நித்யோத்ஸவம் முதலியவை செய்வது விரோதமாகாது. ஆனால் அங்க லிங்கம் முதலியவைகள் சுத்த சைவ முறையினால் செய்ய வேண்டும்.

8. பாசுபதம், ஜைனம், பவுத்தம், ஆர்ஷதம், காபாலிகம், பாஞ்சராத்ரமிவைகளால் முறைப்படி பிரதிஷ்டை ஒருபொழுதும் செய்யக்கூடாது.

9. வேறு மத நூல்களின் முறையறிந்த மற்றவர்களாலும் செய்யக்கூடாது. ஆணவத்தினால் அவர்களால் செய்யப்படுமானால் பிரதிஷ்டை, காலங்கடத்தாமல் உடன் சைவ முறைப்படி செய்ய வேண்டும்.

10. அங்க லிங்கத்தின் பிரமானம் (அளவு) ஓர் முழம் முதல் மூன்று முழம் வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயரமாக செய்யக் கூடாது. செய்தால் எல்லா கெடுதல்களையும் செய்யும்.

11. பதினைந்து முழத்திற்கு மேல் ஆலயமமைக்கக் கூடாது. தனது கர்பகிரஹத்தின் அளவுப்படியோ அங்குல அளவில் செய்ய வேண்டும்.

12. இந்த ஆலயமும் லிங்கமும் ஸார்வதேசிகம் எனப்படும். கர்ஷணம் முதலிய கார்யங்களை தனியாக செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

13. ஆத்யேஷ்டிகை முதலிய கார்யங்களை செய்து லிங்கம் விமானம் முதலியவை செய்து புத்திமானாவன் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

14. எதனால் இது முன்பே விதிக்கப்பட்டதோ அதனாலேயே அது பிரதிஷ்டை என சொல்லப்படுகின்றன. மூர்த்தினேஷ்டகா முதலிய செப்பனிடுதல் முதலான கார்யங்களை

15. மேற்கூறிய விதியினால் எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும். பவித்ரோத்ஸவம் முதலியன மூலலிங்கத்திற்கு செய்த போதிலும்

16. அங்க லிங்கம் முதலியவைகளுக்கு அந்த காலத்திலே பவித்ராரோபணம் செய்யலாம். தனியாகவும், செய்யத் தகுந்தது. பிராமணோத்தமர்களே அவை சாஸ்திர முறையாகும்.

17. எந்த மனிதன் இந்த பிரகாரம் அங்க லிங்க பிரதிஷ்டை முதலியவைகளை செய்கின்றானோ அவன் வயது, சவுபாக்கியம், வியாதி இல்லாமை, போகம், வம்சாவிருத்தி

18. விரும்பியதை அடைந்து சரீர முடிவில் சிவனோடு கூட ஆனந்தம் அடைகிறான். ஒன்று முதல் ஒவ்வொன்று அதிகமாக்கி பதினொன்று வரையிலும்

19. நூற்று எட்டோ, ஐம்பத்து நான்கோ, இருபத்தி ஏழோ, நூறோ ஐந்பதோ, இருபத்தி ஐந்தோ நூற்றுக்கு மேற்பட்ட அங்க லிங்க பிரதிஷ்டைகளை

20. இது மாதிரி எவன் செய்கிறானோ அந்தக் கிரியைக்கு கர்த்தா நானேதான் ஸந்தேஹம் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அங்கலிங்க பிரதிஷ்டா முறையாகிய நாற்பத்தியிரண்டாம் படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar