Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நடராஜரின் பிரதிஷ்டை
படலம் 46: நடராஜரின் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

46 வது படலத்தில் நடராஜரின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு லக்ஷண அமைப்பு முறையுடன் நடராஜமூர்த்தி பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. பின்பு நடராஜமூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் ஸூத்ரபாதம் என்ற முறைப்படி கூறப்படுகிறது. இங்கு நான்கு கை மூன்று கண் ஜடாமகுடத்துடன் கூடி அபஸ்மாரன் மேல் வலது காலால் நின்று கொண்டு பலவித ஸர்ப்ப பூஷணங்களோடு இருப்பவர் புஜங்க த்ராஸர் என கூறப்படுகிறது. ஜடையில் தட்சிண பாகத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய கங்கை, வாம பாகத்தில் இளம்பிறை சந்திரன் பிரகாசிக்கிறார்கள் என கூறப்படுகிறது. அபஸ்மாரம் கங்கை இல்லாததாகவோ இருக்கலாம் என வேறுபாடுகள் கூறப்படுகிறது. பிறகு சிரஸில் உள்ள பாலச்சந்திரன் உயர அளவிற்கு புஜாங்கத்ராஸ மூர்த்தி பக்கத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்கவும் இவ்வாறே பிருங்கிரிடியையோ பத்ரகாளியையோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு புஜங்கத்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் கூறி புஜங்கத்ராஸரை போல் எல்லா லக்ஷணமும் கூடியதான புஜங்க லலிதம் என்ற நடராஜர் இருப்பார். ஆனால் இங்கு கால் வைக்கும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என கூறி விசேஷம் கூறப்படுகிறது. பிறகு புஜங்கத்ராஸ, நடராஜர் போல புஜங்க பைரவரும் இருப்பார். ஆனால் அங்கும் ஒரு விசேஷம் என கூறி பாத விஷயமே வேறு விசேஷம் என கூறப்படுகிறது. ஆனால் பைரவர் நான்கு கையோடோ எட்டு கையோடுமோ இவைகளுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறாக நடராஜ மூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸ, புஜங்க லலித, புஜங்க பைரவ என்று மூன்று மூர்த்திகளின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரீசிட்சித்து அங்கு ரார்ப்பணம் செய்து, ரத்னநியாஸம், நயனோன்மீலனம் நன்கு செய்ய வேண்டும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என அங்குரார்பணம் முதல் ஜலாதி வாசம் வரையிலான காரியங்கள் வரிசைப்படி கூறப்படுகின்றன. பிறகு யாகத்திற்காக மண்டப முறையையும் குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பிராம்மண போஜன, வாஸ்து ஹோம, புண்யாக வாசனம், பூ பரிகிரஹம் செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூபரிக்கிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூ பரிகிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு வேதிகைக்கு மேல் பிரோக்ஷண பூர்வமாக ஸ்தண்டிலம் அமைத்து அங்கு சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிரதிமையை சுத்தி செய்து ரக்ஷõபந்தன பூர்வமாக சயனாதி வாசம் செய்யவும் என்று சயனாதி வாச முறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் சிவகும்பம் வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அஷ்டவித்யேஸ்வரர்களையும் ஸ்தாபிக்கவும். வர்த்தினியில் கவுரியை பூஜிக்கவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் நைவேத்தியம் வரை பூஜிக்கவும். தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு கூறப்பட்ட காலத்தில் மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணம் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை பாட்டு, நாட்டியம், ஸ்தோத்திரம், வேத கோஷங்களால் கழித்து காலையில் ஸ்நாநம் செய்து ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்தை எடுத்து கந்த புஷ்பங்களால் பூஜித்து குண்டம், அக்னி, கும்பம் இவைகளை பூஜிக்கவும். பிறகு பூர்ணாகுதி செய்யவும். யஜமானன் ஆசார்ய பூஜையும் தட்சிணை கொடுப்பதும் முறைப்படி செய்யவும். ஸ்தாபனம் ஆரம்பிக்கவும். சல பிம்பமாக இருந்தால் ஸ்நான வேதிகையில் வைக்கவும். அசலமாயிருப்பின் அதன் ஆலய மத்தியில் ஸ்தாபிக்கவும். ஸ்தாபன விஷயத்தில் கும்பங்களை எடுத்து பலவித வாத்ய ஸஹிதமாக ஆலய பிரதட்சிணம் செய்து கும்பங்களை பிம்பத்திற்கு முன்பாக வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திரன்யாஸ முறையும் கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. பிறகு தேவி பிரதிஷ்டை முறைப்படி தேவியை ஆசார்யன் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. நிதி நிலையை அனுசரித்து ஆசார்யன் கல்யாணகர்மாவும் உத்ஸவமும் செய்ய வேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதன் சிவ பாவனையுடன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ இந்த லோகத்தில் போகங்களை அனுபவித்து பிறகு ஈஸ்வர பதத்தை அடைகிறான் என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 46வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நடராஜாவின் பிரதிஷ்டையை லக்ஷணத்துடன் கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள், விகீர்ணமான (பரந்த) ஜடையை உடையவரும்

2. ஜடாமகுடத்துடன் கூடியவரும் சுருட்டி கொண்டு படத்துடன்கூடி சுற்றப்பட்ட ஸர்பமுடையவரும், ஐந்து முதல் ஒவ்வொன்றதிகமான பின்பாகம் இருபக்கமுடைய

3. இடைவெளியுடைய முப்பது எண்ணிக்கையுடைய ஜடையை உடையவரும் கருவூமத்தை, கொன்னை, எருக்கு முதலிய புஷ்பங்களையும் பிங்கள வர்ணமுடைய ஜடைகளை உடையவரும்

4. ஜடையின் தட்சிண பாகத்தில் அஞ்சலிஹஸ்தமுடைய கங்கையையுடையவரும் இடப்பாகத்தில் ஜடையில் இளம்பிறை சந்திரனை உடையவரும் (ஜடா மகுடத்தில்)

5. மகிழம்பூ மாலையுடையவரும், ஸர்பாபரணம் அணிந்தவராயும், புலித்தோலை அணிபவரும், ஸர்வாபரண பூஷிதராகவும்

6. இடது தோள் முதல் தொங்கிக் கொண்டிருக்கிற புலித் தோலை தரித்தவராகவோ, திவ்யாம்பரத்தோடு கூடியவராகவோ, மான் தோலை தரித்தவராகவோ

7. தலையில் உள்ள பிரம்ம கபாலமும், எல்லா புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் பன்றியின் தந்தத்தை தரித்தவரும், புலி நகத்தை உடையவரும் ஆமையின் ஓட்டையும்

8. சங்கு மணிகளால் தொடுக்கப்பட்ட மாலையால் அலங்கரித்த ஹ்ருதயத்தையுடையவராகவும் வலது காலால் நின்று கொண்டு இடது காலால் மேலே குறுக்காக மடித்தோ

9. குஞ்சித பாதமாகவும், இடது கையை குஞ்சித பாதத்திற்கு மேல் பிரஸாரிதகரமாகவும், அம்பிகையின் முகமாகிய தாமரையில் சுற்றுகின்ற வண்டை போல் கண்ணையுடையவராகவும்

10. பாதத்தில் சலங்கையும், கொலுசு என்ற ஆபரணத்தையுடையவராகவும், இடது காதில் கர்ண பத்ரமும், வலது காதில் மகர குண்டலமும் உடையவரும்

11. வலக்கை அபயமுத்ரையும், படத்துடன் கூட ஸர்பத்தையுடையவரும் பார்ச்வ இடக்கையில் நெருப்பையும், வலக்கையில்

12. டமருகம் (உடுக்கை) யுடையவராகவும், யக்ஞோபவீதமுடையவரும் பால்போல் வெண்மையானவரும், பன்னிரண்டங்குலம், பங்கமாக உடையவரும் (வளைந்ததாக)

13. பல ஸர்பாபரணங்களையுடையவரும், அபஸ் மாரத்தின் மேல் நிற்பவராகவும் சிரஸ் நெற்றியின் வலப்பக்கம், மூக்கின் வலப்பக்கமும்

14. நாபியின் வலப்பக்கம், குதிகால் மத்தியிலும், ஸூத்ரம் காண்பிக்கவும். மத்திய சூத்ரம் இரண்டு மாத்ரமாகும்.

15. கடி (இடுப்பு) பாக சூத்ரங்களின் மத்தி மூன்று மாத்ரமாகும். இடுப்பு முதல் இடது துடை வரை உள்ள சூத்ரமும் மூன்று மாத்ரமாகும்.

16. இரண்டு கணுக்கால் மத்தியில் உள்ள சூத்ரம் ஒரு அங்குலமாகும். வளைந்த முழங்கால் வரை உள்ள சூத்ரமானம் பன்னிரண்டு, எட்டு, ஏழு என்ற மாத்ரங்குலமாகும்.

17. அந்த ஜாநுசூத்ரத்திலிருந்து, இடது ப்ருஷ்டம் வரையுள்ளது. பதினேழு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து இடது முழங்கால்வரை நாற்பத்தியொன்றும் பத்தங்குலமுமாகும்.

18. இடது சூத்ரத்திலிருந்து வயிறு பக்கம் குக்ஷி பாகம் எட்டு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து வலது குக்ஷி பாகம் பண்ணிரண்டங்குலமாகும்.

19. வலது துடையிலிருந்து சூத்ரம், பதினேழு அங்குலமாகும் இடதுபக்க வாமபாக துடையிலிருந்து ஒன்பது மாத்ரமாகும்.

20.  இடது கண்டம் மத்ய சூத்ரத்திலிருந்து ஐந்தங்குலமாகும். வலது கண்ட (கழுத்து) சூத்ரமும் அதே பாக அளவான ஐந்தங்குலமாகும்.

21. அந்த சூத்ரத்திலிருந்து இடது தோள்வரை மூன்றங்குலம் குறைவானதாகும். அல்லது வேறு விதமாகவும் சூத்ரபாதம் (கோடிடும் முறை) கூறப்படுகிறது.

22. கண்ணின் கருவிழி வரையும், தலை மூக்கின் வலது பாகம் தொப்பூழின் வல இடப்பாகம் ஊன்றியதான வலது முழங்கால், கணுக்கால் மத்தியமும் வரை

23. ஸ்பர்சமான சூத்ரம், மத்யசூத்ரம் எனப்படும், மேல் சூத்திரத்திலிருந்து இடப்பாகம் ஐந்து மாத்ரமும் முகமும் கழுத்தும் மூன்று மாத்ரமும்

24. தோள்பாகம் வரை பதினைந்து மாத்ரமும், கக்ஷ பாகம் வரை ஒன்பது மாத்ரமும், வயிறு மத்தியில் எட்டு மாத்திரையும், இடுப்பு பாகம் ஏழங்குலமாகும்

25. இடுப்பு பாகம் பதினைந்து அங்குலமாகவும் வேறு இடத்தில் 60 அங்குலமாகும் ஒன்பது மாத்ரம் துடை பாகமாகும். குதிகால் வரை நான்கங்குலமாகும்

26. ஏழங்குல முகமும் வேறு இடத்தில் கழுத்து ஆறு மாத்ரமுமாகும். தோளின் கடைபக்கம் மூன்று மாத்ரையும், கக்ஷõந்தம் ஏழு மாத்ரையுமாகும்

27. பதினான்கங்குலம் குக்ஷி பாகமும் இடுப்பின் மேல் பாகம் நான்கு மாத்ரமும் கடிபாகம் நான்கு மாத்ரமும், முழங்கால் எட்டங்குலமும் ஆகும்.

28. பாதாக்ரபாகம் ஒரு மாத்ரமும் (முகத்திற்கு சொன்ன ஏழு மாத்ரமும்) அறிந்து செய்யவும். நீட்டபாதத்தின் நீளம், ஸ்தித பாதத்தின் முழங்கால் சமமாகும்.

29. அப்பக்கத்து முழங்கால்களின் இருமுக இடைவெளி இரண்டங்குலமாகக் கூறப்பட்டது. இடுப்பின் மேல் உயரமானது, இடது முழங்காலின் உயரமாகும்.

30. அந்த துடை மத்தியிலிருந்து நாபி வரை இடைவெளி ஒன்பது மாத்ரையாகும். இடது முழங்கால் லம்பஹஸ்தத்ததின் மணிக்கட்டின் இடைவெளி பதினான்கு மாத்ரையாகும்.

31. தொங்குகின்ற இடது ஹஸ்தத்திற்கும், அபய ஹஸ்தத்திற்கும், இடைவெளி ஆறங்குலம் வலக்கை கட்டைவிரல் கடைபாகத்திலிருந்து மார்பக நுனி வரை இரண்டங்குலம் இடைவெளி ஆகும்.

32. அந்த பாஹு உச்சமும், அந்த தோள்களிலும் மத்ய ஹ்ருதயத்திற்கு சமமாகும். பதினேழு அங்குலம் தண்ட ஹஸ்த (லம்ப) புறங்கை பிரதேசத்திற்கும் இடைவழியாகும்.

33. முழங்கை கடையிலிருந்து அக்னி கை உச்சமும் அக்னியின் உயரமும் ஐந்தங்குலம் சிரோபாகம் முதல் கேசம் வரை உள்ள கோலகமும் மூன்று சிகைகளுக்கும் ஐந்தங்குலம்

34. உடுக்கை தரித்த ஹஸ்தம், கர்ணத்தின் உயரத்தில் ஓரங்குல மதிகம் டமருக விஸ்தாரம் ஒன்பதங்குலமாகும், முக விஸ்தாரம் ஐந்தங்குலமாகும்.

35. கோலக மத்ய விஸ்தாரம், சுற்றிலும் உள்ள விஸ்தாரமும், மூன்றங்குலம் ஒரு நாக்கு உடையதும், கம்பீர சத்தம் உடையதுமாக, ஸர்பமுடையவராக உள்ள

36. இரண்டு கைகளிலிருந்து மணிக்கட்டின் கடையளவு முப்பதங்குலமாகும். அபஸ்மார உயரமானது பதினொன்று, பன்னிரண்டு (ஒன்பது) எட்டு மாத்திரை ஆகும்.

37. தேவருடைய முகம் போல் அபஸ்மார முகம் அமைக்கவும். இரண்டு மடங்கு முதல் ஐந்து வரையளவுள்ளதாகவும்

38. முகத்தின் அரை அளவு அதிகமாக்கி ஏழு அளவு வரை உதாரணம் கூறப்பட்டது. நான்கு தாள அளவில் அபஸ்மார உருவம் அமைக்க வேண்டும்.

39. சிரோ பாதத்திலிருந்து பாதம்வரை ஆறு, எட்டு என்று பாகமாக பிரிக்கவும். சிரோ பாகத்திலிருந்து கேசம் வரை உள்ள பிரதேசம் கோளகம் ஆகும். தலைப்பாகையிலிருந்து தலைகேசம் வரை கோளகம் ஆகும்.

40. கேச கடைபாகம் முதல் சரீரம் வரை அஷ்டபாகமாகும். களதேசம் அரையங்குலம் ஒன்ரை அங்குலம் கர்ணதேசம்

41. இடுப்பிலிருந்து பாகத்திலிருந்து ஹ்ருதயம் வரை ஆறங்குலம் ஆகும். ஹ்ருதயத்திலிருந்து நாபி வரை ஆறங்குலமாகும்.

42. நாபியிலிருந்து ஆண்குறி கடைபாகம் வரை ஐந்தங்குலமாகும். அதிலிருந்து துடைபாக நீளம் ஏழு அம்சமாகும். முழங்கால் உயரம் இரண்டு மாத்ரை ஆகும்.

43. ஜங்கை (முழங்கால் கீழ்ப்பிரதேசம்)யின் அளவு ஏழம்சம், பாதத்தின் அளவு இரண்டு மாத்ரை, இருபுஜம், இரண்டு கண், மேல் நோக்கிய உடம்பு கீழ்நோக்கிய முகம். 

44. ஸர்பசரீரம் இடது கையிலும், ஸர்பசிரஸ்தக்ஷ ஹஸ்தத்திலும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டதும், வளைந்த சரீரம் உடையவராகவும், ஸ்வாமியின் வலப்பாக சிரசை உடைய அபஸ்மாரத்தை அமைக்க வேண்டும்.

45. தேவருடைய முக அளவு சமமாகவே கங்கையின் முழு அளவு ஆகும். இருகைகளும் முக்கண்ணும் கரண்டமகுடமுடையவளாகவும்

46. ஸர்வாபரண பூஷிதையாயும், அஞ்சலி ஹஸ்தமுடையவளாயும், ஊர்த்வபாகத்திலிருந்து அதோ பாகம் வரை நீர்வழியும் தோற்றத்துடனும், அமைத்து லக்ஷணமுடைய

47. கங்காதேவியுடன் கூடியவராகவோ கங்கா தேவி ரஹிதமாகவோ அமைக்கவும். பிரபை என்கிற திருவாசியின் விஸ்தாரம் நூற்று பத்தங்குலமாகும்.

48. நூற்றி முப்பத்தி ஏழு ஆயாமம் பிரபையின் தண்டபாக அளவாகும். ஒன்று முதல் பத்து மாத்ரைகளால் குறைவாகவோ, அதிகமாகவோ ஆகும்.

49. இரண்டங்குலம், முதல் ஓரங்குல கணத்தில், ஏழங்குல பரிமாணமாக பிறை சந்திரனாகும். அதை போலவே ஈசனை அனுசரித்து பக்கத்தில் தேவியை கல்பிக்கவும்.

50. பத்ரகாளியையோ ப்ருங்கீரடியையோ அமைக்கவும், பரந்து விரிந்த கையையுடையாக புஜங்கத்ராஸர் கூறப்பட்டு, நிருத்த லக்ஷணமான புஜங்கத்தையுடையாதாகவும் அமைக்கவும்.

51. புஜங்கத்ராஸமாகவே செய்யவும் விசேஷமாகவும் கூறப்படுகிறது. மேல்பாகம் முழங்காலக்கு மேல் தூக்கியதாகவும் அமைக்கவும் முழங்காலுக்கு

52. இரண்டு மாத்ரம், மூன்று மாத்ரம், நான்கு மாத்ரையாகவோ, நிருத்யலக்ஷணம் புஜங்கலவிதமாகும். அது பைரவம் எனப்படுகிறது.

53. புஜங்க திராஸப்படி எல்லாம் செய்யவும், என விசேஷமாக கூறப்படுகிறது. மேல்தூக்கிய தட்சிண பாதத்தையோ, இடது பாதத்தை உடையதாகவோ அமைக்கவும்.

54. பாதத்துடன் கூடிய சரீரமத்தியில் மேல் நோக்கிய பாததளமுடையவராகவும் அமைக்கலாம். சதுர்புஜமோ, அஷ்டஹஸ்தமோ, பலவித திவ்ய அஸ்த்ர பூஷிதராகவும் அமைக்கவும்.

55. கற்சிலை முதலான திரவ்யங்களை சேர்த்து நடராஜரை அமைக்கவும். இவ்வித நடராஜ லக்ஷணம் கூறப்பட்டது. பிரதிஷ்டையை பற்றி கூறுகிறேன்.

56. பிரதிஷ்டை காலம் முன்போல் எனக் கூறப்பட்டுள்ளது. அங்குரார்ப்பணம், ரத்னந்யாஸம், நயஜேனான் மீலனம், முதலியவை முன்போலவே செய்ய வேண்டும்.

57. பிம்பசுத்தி, கிராமாதி, பிரதட்சிணம், ஜலாதி வாஸம், மண்டபபிரவேசம், முதலியவை செய்ய வேண்டும்.

58. சதுரஸ்ரம், வ்ருத்தம், அஷ்டாச்ரம் முதலிய ரூபத்தில் எந்த ரூபத்திலோ ஒன்பது ஐந்து, ஒன்று முதலிய எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

59. பத்து நபரதிகமானதாக ஆயிரம் பிராம்ணர்களுக்கு போஜனம் செய்வித்து மண்டப சுத்திக்காக புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

60. மரீசிபத பூஜையுடன் வாஸ்த்து ஹோமம் செய்யவும், வாஸ்த்து ஹோமம் இல்லாமலாவது பூமி பரிக்ரஹம் செய்ய வேண்டும்.

61. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைக்கவும் ஸ்தண்டிலத்தின் மேல் சயனம் அமைத்து பிம்பசுத்தி செய்யவேண்டும்.

62. ரக்ஷõபந்தனம் செய்து சயனாதி வாசம் செய்யவும், தேவருடைய சிரோபாகத்தில் சிவகும்பம் வைக்க வேண்டும்.

63. உத்தர பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அதில் கவுரியை ஆவாஹிக்கவும். லக்ஷ்ண ரூபத்துடன் தியானம் செய்து சந்தனங்களால் பூஜிக்க வேண்டும்.

64. அஷ்டவித்யேச்வர கலசம் ஸ்தாபித்து, சந்தன, புஷ்பம், நைவேத்யங்களால் அர்ச்சிக்க வேண்டும்.

65. தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீச்வர நியாஸம் செய்யவும், ரித்விக்குகளோடு ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

66. குண்ட, அக்னி ஸம்ஸ்காரம், அக்னிகார்ய விதிப்படி செய்யவும், ஸமித், நெய், அன்னம், நெல்பொறி, கடுகு, யவம், எள் இவைகளாலும்

67. தினை நெல், பாசிபயறு, இவைகளால் ஹோமம் செய்யவும். அத்தி, ஆல், அரசு, இச்சிசமித்துகளால் பூர்வாதி திக்குகளிலும்

68. வஹ்நி, நாயுருவு, பில்வம், கருங்காலி முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களிலும், பிரதானத்தில் புரசு, சமித்தையும் ஹோமம் செய்ய கூறப்பட்டது.

69. ரிக்வேதாதி பாராயணம், மந்திரஜபம், சங்கீதம், நடனம் ஸ்துதீ, ஸ்தோத்ரங்களால் துதித்து முறைப்படி கழித்துவிட்டு

70. ராத்திரி இரவை கழித்து பூஜை முடித்து காலையில் ஸதாசிவரை ஸ்மரித்து ஸ்னானம், மந்திர சுத்தி, தேஹ சுத்தி செய்து கூடினவனாய்

71. சயனத்திலிருந்து, பிம்பத்தை எடுத்து கிழக்கு முகமாக வைத்து, வஸ்திர கூர்ச்சாதிகளை எடுத்து விட்டு, சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

72. கும்ப சண்ட, அக்னி, இவைகளை பூஜித்து வவுஷடந்த மூலத்தால் பூர்ணாஹுதி செய்யவும். மூலமந்திரத்தோடு கடைசியில் வவுஷட் என்பது முடித்து பூர்ணாஹுதி கொடுக்க வேண்டும்.

73. வஸ்திர ஹேமாங்குலீயங்களால் ஆசார்யரை பூஜித்து முன்பு போல் தட்சிணை கொடுத்து ஸ்தாபனம் ஆரம்பிக்க வேண்டும்.

74. பிறகு வேதிகையிலிருந்து கும்பத்தை எடுத்து ஸ்னாந வேதிகையில் ஸ்தாபிக்க சலபேரமாயின் ஆலய மத்தியிலும் அசலபேரமாயின் பிரதிஷ்டை செய்து

75. பிறகு கும்பங்களை எடுத்து ஸர்வவாத்யங்களோடு கூட ஆலய பிரதட்சிணம் செய்து பிம்ப முன்பாக வைத்து

76. சிவகும்ப மந்திரத்தை, நடராஜர் பிம்பத்தில் நியஸித்து வர்த்தநீ பீஜத்தை பிம்ப பீடத்தில் நியஸித்து

77. வித்யேச கடங்களை பத்மபீடத்தில் சுற்றிலும் (அந்த இடத்திலே) ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும். தேவீ பிரதிஷ்டை விதிப்படி தேவீ ஸ்தாபனம் செய்யவேண்டும்.

78. பிரதிஷ்டை முடிவில், புத்தியுள்ளவனான தேசிகன் கல்யாண உத்ஸவத்தை அதன் முடிவில் செய்ய வேண்டும். பணத்தின் நிலையை அனுசரித்து உத்ஸவம் செய்யவேண்டும்.

79. இப்படலத்தில் சொல்லப்படாததை ஸாமான்ய ஸ்தாபன விதிப்படி செய்யவும். இந்த சிவபாவனையோடு யார் பிரதிஷ்டை செய்கிறானோ

80. அவன் இந்த லோகத்தில் போகத்தை அடைந்து பிறகு சிவபதம் அடைகிறார்.

இவ்வாறு உத்தரகாமிகத்தில் ந்ருத்த மூர்த்தி ஸ்தாபன முறையாகிற நாற்பத்தியாறாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar