Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தட்சிணாமூர்த்தி ஸ்தாபனம்
படலம் 51: தட்சிணாமூர்த்தி ஸ்தாபனம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

51 வது படலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் வியாக்யாணம், கேயம், யோகம் இவைகளில் இருக்கும் மூன்று விதமான தட்சிணாமூர்த்தியின் ஸ்தாபனம் கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பின்பு ஞானமுத்திரையுடன் கூடியவர் வியாக்யான மூர்த்தி, வீணையுடன் கூடியவர் கேயமூர்த்தி, வியாக்யானம் வீணை இவை இரண்டும் இல்லாமல் இருப்பவர் யோகமூர்த்தி என்று மூன்று மூர்த்திகளின் சாமான்யமான லக்ஷணத்தை கூறி இந்த மூன்று மூர்த்திகளுக்கும் சூத்ரபாதம் என்ற முறைப்படி விசேஷலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு வியாக்யானத்துடன் கூடியவர் அறிவை கொடுப்பவர் என்றும் கேயமூர்த்தியும் யோகமூர்த்தியும் மோக்ஷத்தை கொடுக்ககூடியவராகவும் கூறப்படுகிறது. மேலும் வியாக்யானமூர்த்தி விஷயத்தில் கவுசிக, காச்யப, பாரத்வாஜ, அத்திரி, கவுதமர் என்ற முனிவர்களின் அமைப்பு முறை கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு போல் திதி வாரம் இவைகளை உடைய நல்லகாலத்தை அறிந்து அங்குரார்பணம் செய்து வேதிகை குண்டத்துடன் கூடியதான மண்டபம் அமைக்கவும். பிறகு ரத்ன நியாஸ நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிண ஜலாதிவாசம் வரையிலான காரியங்கள் செய்யவேண்டும் என்று கிரியைகளின் மேலான பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. பிறகு யாகத்திற்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் புண்யாக பிரோக்ஷண, பிராமண போஜனம் மறுபடியும் புண்யாஹ பிரோக்ஷணம் வாஸ்து சாந்தி பூமி பரிகிரஹம் முதலிய கர்மாக்களை செய்யவும். பிறகு மண்டபம் ஸ்தண்டிலம் அமைத்து தட்சிணாமூர்த்திக்கும் முனிவர்களுக்கும் தனித்தனியாக சயனம் அமைக்கவும்.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்துவந்த பிம்பங்களுக்கு ஸ்நான வேதியில் ஸ்நபனம் செய்யவும். அந்தபிரதிமைகளை சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக சயனாதிவாசம் செய்யவும் என்ற சயனாதிவாஸ முறை கூறப்பட்டது. இவ்வாறு வியாக்யான கேய யோக நிஷ்டர்களான மூன்று மூர்த்திகளின் விஷயத்தில் பிரதிஷ்டை கூறப்படுகிறது. பிறகு அந்த அந்தந்த மூர்த்திகளுக்கு அந்த மூர்த்தியின் சிரோதேசத்தில் அவர்களின் கும்பங்களை அலங்கரிக்க பட்டதாக சிவ கும்பத்தின் வடக்கு பாகத்தில் வர்த்தனியை ஸ்தாபிக்கவும் பிரதிமா லக்ஷணத்தில் கூறப்பட்டபடி ரூபத்தியானத்துடன் முறைப்படி பூஜிக்கவும். தத்வ தத்வேச்வர மூர்த்தீஸ்வர நியாஸம் முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் தத்வ தத்வேஸ்வர மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவேண்டுமென்று அறிவிக்கப்படுகிறது. பிறகு குண்டஸம்ஸ்கார அக்னிஸம்ஸ்காரம் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணமுறைப்படி ஹோமம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை போக்கி சுத்தமான காலை பொழுதில் ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி நித்ய அனுஷ்டானம் முடித்து பிம்பங்களை எடுத்து பூஜித்து கும்ப அக்னி இவைகளையும் பூஜிக்கவும், பிறகு எஜமானன் தேசிகர்களுக்கு தனித்தனியாக தட்சிணை கொடுக்கவும். ஆசார்யன் பிம்பத்திற்கு முன் ஸ்தண்டிலத்தில் கும்பத்தை வைத்து மந்திர நியாஸம் செய்யவும் என்று கூறி மந்திரநியாஸம் முறை கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் பீஜமந்திரங்களை அவர்கள் ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் இவ்வாறே முனிவர்களின் கும்பதீர்த்தங்களால் முனிவர்களுக்கும் அபிஷேகம் செய்விக்க வேண்டும். வியாக்யான தட்சிணாமூர்த்தி கையில் உள்ள காமிகம் முதலான ஆகமங்களை உபாகமத்துடன் கூடியதாக ஸ்தாபிக்கவும். பிறகு தேவேசனை ஸ்தாபிக்கவும் வலது இடது பாகங்களில் முனிவர்களை ஸ்தாபித்து, ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்தியம் செய்யவும். முடிவில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டையை செய்பவன் எல்லாம் அனுபவித்து முடிவில் பரமேஸ்வரனை அடைகிறான் என்பதில் சந்தேகம் இல்லை இவ்வாறு 51 வது படல கருத்தாகும்!!

1. ஹே, விப்ரச்ரேஷ்டர்களே, தட்சிணாமூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை கேளுங்கள். வ்யாக்யான லக்ஷணம், கேயலக்ஷணம், யோகலக்ஷணம் என நிஷ்டையில் மூன்று விதங்களாம்

2. அந்த தட்சிணாமூர்த்தியானவர் வ்யாக்யான லக்ஷணத்தில் ஞான முத்ரையோடும் (சின்முத்ரை) கேய லக்ஷணத்தில் வீணையோடும், இரண்டிலிருந்தும் வேறுபட்ட யோகத்தில் பலவிதமான திருஉருவ பேதங்களாகும்.

3. நான்கு கைகள், மூன்று கண்கள், வெண்மையாகிற காந்தியோடு கூடிய இளம் சந்திரனோடும், வெளுப்பு, பவள நிறமாகவும், பொன்னிறமாகவும், கருப்பு திருமேனியோடு கூடியவராகவும்

4. புலித்தோல் ஆடையை தரித்தவராகவோ, அல்லது பீதாம்பரங்களை தரித்தவராகவோ மேல் (அங்க) வஸ்திரத்துடன் கூடியவராகவும் வெண்மையான பூணூலை அணிந்தவரும்

5. விரித்த ஜடையோடு கூடியவராகவோ, ஜடாமகுடத்தோடு கூடியவராகவோ (தலையில்) பட்டையான பட்டுத்துணியால் கட்டப்பட்டவராகவோ, தலையில் மண்டை ஓட்டை தரித்தவராகவும்

6. ஊமத்தம்பூ, கொன்றை புஷ்பம், பாம்பு படங்களுடன் கூடியவரும் சந்திரனோடு கூடியவராயும் ஐந்தாவது தொழிலான (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனுக்ரஹமுத்ரையுடன் (தலையில் கங்கை மற்றும் மணிச்சரங்களோடு கூடியவராயும்)

7. ஆலமரத்தினுடைய அடியில் பாறாங்கல்லில் மீது அமர்ந்தவராகவும், புலித்தோலின் மீது அமர்ந்தவராகவும் அல்லது மரத்தினடியில் நின்ற கோலத்துடனோ, வீராஸனமுடையவராகவோ

8. வலது காலை தொங்கவிட்டு அதனுடைய முழங்காலின் மீது வளைந்த இடது கால்விரல்களை வைக்கப்பட்டவராய் வலது கையில் முத்ரையோடு கூடியவராய் செய்ய வேண்டும்.

9. நன்கு காண்பிக்கப்பட்ட ஸமிக்ஞைகளோடு இடது கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தோடு கூடியவராயும் முப்பத்திரண்டு அங்குல நீளமான (சாய்ந்த) புஸ்தகத்தை கையில் உள்ளவராயும்

10. அல்லது இடதுகையில் ஸர்ப்பம் (பாம்பு) உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முழங்காலில் வைக்கப்பட்டுள்ள மணிக்கட்டுடன் கூடியதாக வரதஹஸ்தத்தை அறியவும்.

11. முழங்காலில் சேர்ந்த முழங்கையை உடையதாக தொங்குகிற கையை அமைக்கவும். விரிந்த (மலர்ந்த) தாமரையின் காந்தியைப் போன்று உள்ள விரிந்த விரல்களோடு கூடிய கையை உடையவராகவும்.

12. பின்கையில் இரண்டிலும் அக்ஷமாலை, அக்னியோடு கூடியவராகவும் தாமரையையோ, நீலோத்பலத்தையோ, பாம்பையோ இடதுகையில் வைத்திருப்பவராகவும்

13. அந்த இருகைகளையும் கடக முத்ரையோடு கூடியதாகவும் பிரஸன்னமான நேர்பார்வையோடு கூடியவராகவோ, அல்லது தனது மூக்கு நுனியில் பார்வையுடையவராகவோ இடது கையில் புஸ்தகத்தோடு கூடியவராகவும்

14. சரீர மத்தியிலிருந்து இடதுபாகத்தில் சிறிது வளைவான பங்கத்தோடு அதாவது ஆபங்க ஸஹிதமாக செய்ய வேண்டும். சூத்திரமானது முறையாக இடது பாகத்தில் ஹ்ருதய, தொப்பூழ், குஹ்யப்ரதேசம் இவைகளில் இருக்க வேண்டும்.

15. மத்தியிலிருந்து மூன்று மாத்ரை அளவு விட்டதாக தொங்கும் பாதமுள்ளதாகும். லம்ப பாதத்தின் இருக்கையானது மத்ய சூத்ரத்திலிருந்து 1/2 அங்குல இடைவெளியுள்ளதாகும்.

16. 1/2 அங்குல அதிகரிப்பால் ஒன்றறை யவப்பிரமாணம் வரையாகும். கட்டைவிரலின் அடிபாக உயரத்திலிருந்து (மார்பு) நுனிவரை உள்ள இடைவெளி பத்து அங்குலமாகும்.

17. கட்டை விரலுக்கும் மார்பகத்திற்கும் உள்ள இடைவெளி இரு கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும். நாபியிலிருந்து மணிக்கட்டின் இடைவெளி நான்கங்குலமென்று உதாரணம் கூறப்படுகிறது.

18. புஸ்தகமுள்ள கைக்கும் துடையின் மேல் பாகத்தின் இடைவெளியும் தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலான இடைவெளியும் பத்தொன்பது அங்குலமாகும்.

19. கையின் தோள் பக்க மத்தியிலிருந்து பக்க வாட்டு மத்யபாகம் வரையிலான இடைவெளி ஆறங்குலமாகும். பக்கக்கையின் மணிக்கட்டிலிருந்து அந்த கையின் தோள்பட்டையின் மத்தியும் எட்டங்குலம் ஆகும்.

20. நடுபாகமுள்ளகை, பக்கவாட்டுக் கையின் இடைவெளி பத்து மாத்ரையாகும். தோள்பட்டைபாக அடியிலிருந்து கையின் முடிவுபாகம் ஓரங்குலமாகும். இடுப்பு பாக சூத்ரம், கடக முத்ரையின் உயர அளவினால் இருமாத்ரை அங்குல அளவாகும்.

21. ஜடாமகுடம், ஸ்தனம், கழுத்தின் அடிபாகம் இவைகளின் முறையே இரண்டங்குல நீளம் மட்டும் அளவாகும். அவைகள் அந்தந்த அழகுடன் கூடியவைகளாகவும், வெண்மையான பூணூலை தரித்தவர்களாயும்

22. வெண்மையான பட்டு முதலிய வஸ்திரங்களை தரித்தவர்களாகவும், விபூதி ருத்ராக்ஷங்களை அணிந்தவர்களாயும், கவுசிகர் மஞ்சள் நிறமுள்ளவராகவும், காச்யர் கரும்பச்சை நிறமாகவும்

23. பரத்வாஜர் சிகப்பு நிறமாகவும், அத்ரி, கவுதமர் இவர் இருவரும் புகை நிறமாகவும், உள்ள இவர்களை சுவாமிக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒருவராகவோ மூவராகவோ வைக்க வேண்டும்.

24. வ்யாக்யான (லக்ஷண) மூர்த்தியானவர் இவ்வாறாகவும், கேயமூர்த்தி என்ற வீணா தக்ஷிணா மூர்த்தியானவர் (நடுபக்கத்தில் உள்ள வலது கையில் கடகமுத்ரையோடு கூடியதாகவும்) வலது இடது பாகம் உள்ள நான்கு கைகளில் கடக முத்ரையையும்

25. கடக முத்ரையுடன் கூடிய வலதுகையில் வீணையும், அந்த வீணை இடது தொடையில் சேர்ந்ததாக அமைக்கவும். வலதுகை கடகமுத்ரையுடன் துடையின்மேல் வைத்ததாக அமைக்க வேண்டும்.

26. அந்த வீணையினுடைய வட்டபாகமானது தொடைக்கு வெளியிலும், அதனுடைய மூலபாகமானது கடகமுத்ரைக்கு மேல் உள்ளதாகவும், இடது பாகம், ஒரு பங்காகவும், ஐந்து பாகத்தை உடையதாயும்,

27. அகலமானது ஐந்து அங்குலம், நீளமானது, ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் சுற்றளவு ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் உயர அளவானது ஆறங்குலமும்

28. வீணை வட்டபாகத்தின் உயரம் மூன்று அங்குலம் என்று அறிந்து செய்யவேண்டும். கையிலிருந்து மணிக்கட்டு வரையும் இடுப்பு சூத்ரமுதலும், முறையாக

29. 30 அங்குலம் என்றும், வேறு கை மணிக்கட்டிலிருந்து தொப்பூழ் வரையிலுமான இடைவெளியானது முன்பு போல 30 அங்குலமாகும்.

30. வ்யாக்யான மூர்த்தியையும் இவ்வாறாக கவனித்து செய்யவும். அவ்விடத்தில் கண்ணின் பார்வை வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.

31. விரிந்த இடது கையை உடையவர் யோக மூர்த்தி என்றும் பிறகு வளைந்த இடது குதிகால் நுனியானது இடுப்பு பிரதேசத்தை ஒட்டியதாகவும்

32. தூக்கப்பட்ட அவருடைய இடது முழங்கால் நுனியானது இடதுகையின் பின் பாகத்துடன் சேர்ந்ததாகவும் நன்கு பார்வையோடு கூடியவராகவும் சிறிது ஆபங்கத்தோடு கூடியவராகவும்

33. பலவித பிராணிகளோடு கூடியவராகவும், பலவித பாம்புகளோடு கூடியவராகவும், அனேக முனிவர்களோடு கூடியவராகவும் சித்த வித்யாதரர் களோடு கூடியவராகவும்

34.  பூதகணங்கள், கின்னர கிம்புருஷாதிகளோடு கூடியவராகவும், மரங்களால் சூழப்பட்ட வராகவும், அவருக்கு பக்கத்தில் மலை முதலியவை களைச் செய்தும் ஆலமரம், புல்லடர்ந்த பிரதேசத்தில் வீற்றிருப்பவராகவும்

35. பழங்களோடும், கிளைகளோடும், விழுதுகளோடும் பலவித பக்ஷிகளோடும் கூடிய மரத்தின் அடியில் தென்புறமாக நிழலில் அமர்ந்திருப்பவராகவும் கருணையோடு கூடியவராகவும்

36. ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் விரிக்கப்பட்ட புலித்தோலின் மீது நன்கு அமர்ந்தவராகவும் கவுசிகாதி முனிவர்களோடு கூடியவராகவும்

37. ஆதிசைவர் குலத்தில் முதன் முதலில் தோன்றியவர்களும், ஆகமங்களை அறிந்த மனதை உடையவர்களும், பரமேச்வரர்களும் தீøக்ஷ செய்யப்பட்டவர்களுமான கவுசிகாதி முனிவர்களால் சூழப்பட்டவராயும் ஆக

38. தட்சிணாமூர்த்தியினுடைய மூர்த்தி பேதங்களானது கூறப்பட்டுள்ளது. வ்யாக்யான மூர்த்தியானவர் ஞானத்தை கொடுக்கக் கூடியவராகவும், கேய தட்சிணாமூர்த்தியானவர் போகத்தையும் கொடுக்கக்கூடியவராக அறிய வேண்டும்.

39. யோக தட்சிணாமூர்த்தியானவர் முக்தியை கொடுக்கக்கூடியவராக அறியவும், (நினைத்து பூஜை செய்யவும்) உட்கார்ந்த கோலமாகவோ நின்ற கோலமாகவோ, ரிஷிகளோடு கூடியவராக இல்லாமலோ வடிவமைக்க வேண்டும்.

40. ஆலமரம் இல்லாமலோ பூதகணங்களால் சூழப்பட்டவராகவோ பூதத்தின் மீது தொங்கிய திருவடியை வைத்தவராகவோ, தட்சிணா மூர்த்தியானவர் கூறப்படுகிறார்.

41. இவ்வாறு அமைப்பு முறைகள் கூறப்பட்டு பிரதிஷ்டா முறையானது கூறப்படுகிறது. திதி, வார, யோகாதிகளை முன் போல் எடுத்துக் கொண்டு அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

42. யாக மண்டபத்தை முன்போல் செய்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் சதுரச்சமும், சுற்றிலும் அஷ்டாச்ரமுமோ அமைக்க வேண்டும்.

43. ரத்னந்யாஸம், நயனோன்மீலனம், பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம் முதலியவைகள் செய்து ஜலத்தில் அதிவாஸம் செய்ய வேண்டும்.

44. புண்யாஹ ஜலத்தை தெளித்தலை செய்த பிறகு அந்தணர்களுக்கு உணவளிப்பதை செய்விக்க வேண்டும். புண்யாஹவாசனம், வாஸ்துஹோமாதிகளை செய்து பூமியை ஏற்றுக் கொண்டு

45. பூஜிக்கத்தக்க அந்த ரிஷிகளையும், சுவாமியையும், வேதிகையின் மீது தனியாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் சயனத்தை அமைக்க வேண்டும்.

46. பிறகு ஸ்தான வேதிகையில் ரிஷிகளோடு கூட சுவாமிக்கு ஸ்நபனாபிஷேகம் செய்வித்து, பிறகு அந்த கவுசிகாதி ரிஷிகளோடு கூட சுவாமியை படுக்கையில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

47. கவுசிகர் முதலிய ரிஷிகள் சுவாமியின் வலது பாகத்திலும், பாரத்வாஜர் முதலியவர்கள் சுவாமியின் இடது பாகத்திலும் சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம், ஆபரணம் இவைகளுடன் கூடியதாக தனித்தனியாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

48. வ்யாக்யான, கேய, யோக பேதங்களுக்கும் பொதுவாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவரவர்களுடைய தலைபாகத்தில் அவரவர்களுடைய கும்பத்தை வஸ்திராலங்காரங்களோடு கூட வைக்க வேண்டும்.

49. சிவ கும்பத்தினுடைய இடது பாகத்தில் வர்த்தினியை வைக்க வேண்டும். சுற்றிலும், எட்டு கும்பங்களை வைத்து வித்யேச்வரர்களை பூஜிக்க வேண்டும்.

50. உருவ அமைப்புகளோடு கூடிய அந்த வடிவத்தை முறைப்படி பூஜை செய்து தத்வந்யாஸம் மூர்த்திந்யாஸாதிகளை செய்து ஹோமத்தை செய்ய வேண்டும்.

51. தத்வங்களை முன்போல சுவாமிக்கு செய்து முனிவர்களுக்கும் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அவ்வாறு செய்து குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை உற்பத்தி செய்து

52. ஸமித்து, நெய், ஹவிஸ், பொறி, எள், வெண் கடுகு, மூங்கில் முதலியவைகளை கிழக்கு முதலிய திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும். பிரதானத்தில் புரசு சமித்தை ஹோமம் செய்ய வேண்டும்.

53. வில்வம் முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களில் ஹோமம் செய்து பிரதானத்தில் ரிஷிகளை தர்பண, தீபநம் செய்து இந்த பொருள்களால் ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

54. இரவுப் பொழுதை முடித்து சுத்தமான காலைப்பொழுதில் குருவானவர், சிஷ்யர்களோடு கூட ஸ்நானத்தை முடித்தவராய் மந்திர சுத்திகளை செய்து கொண்டவராய்

55. குண்டங்களில் அக்னிகளை பூஜித்து கும்பங்களையும் பூஜித்து (சயன கும்பம்) பிம்பங்களை எடுத்து பூஜிக்கவும். ஆசார்யர்களுக்கு தட்சிணா தாம்பூலம் முதலியவை அளிக்கச் செய்து

56. நல்ல முஹூர்த்த நாழிகைக்கு முன்பாக மந்திர நியாஸத்தை முதலில் ஆரம்பிக்க வேண்டும். முன்போல பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து

57. கும்பத்திலிருந்து பீஜமந்திரத்தை சுவாயினுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தனியிலிருந்து பீஜத்தை சுவாமியினுடைய பீடத்தில் சேர்க்க வேண்டும்.

58. வித்யேச்வரர்களுடைய பீஜங்களை பீடத்தில் பிரதட்சிணமாக சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களை அந்தந்த பிரதேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

59. ரிஷிகளுடைய பீஜமந்திரங்களை அவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

60. ஸ்ரீ கண்ட முனிவராகிய தட்சிணா மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தில் காமிகம் முதலான ஆகமங்களை, உபாகமங்களுடன் கூடியதாக அமைக்கவும்.

61. பிறகு ஸ்வாமியை ஸ்தாபித்து சுவாமியினுடைய இருபக்கங்களிலும் ரிஷிகளை ஸ்தாபனம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து உத்ஸவம், மஹாஹவிர் (படையல்) நிவேதனம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

62. இங்கு சொல்லப்படாதவைகளை பொதுவாக கூறப்பட்ட ஸ்தாபனங்களில் சொன்னதுபோல் செய்யவும். எந்த ஒரு மனிதன் தட்சிணா மூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை இவ்விதம் (பிரதிஷ்டையை) செய்கிறானோ

63. அவன் இவ்வுலகில் தனக்கு விருப்பப்பட்டவைகளை அனுபவித்து கடைசியில் பரமேச்வரனை அடைவான், அதில் ஸந்தேஹம் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தியோராவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar