Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தசாயுத பிரதிஷ்டை
படலம் 68: தசாயுத பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

68வது படலத்தில் தசாயுத பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. முதலில் இலக்கண முறைப்படி தசாயுத பிரதிஷ்டை கூறப்படுகிறது என்பது உத்தரவு. வஜ்ரம் முதலான தசாயுதங்களின் பெயர் கூறப்படுகின்றன. இங்கு அங்குசத்தை விட்டு அந்த ஸ்தானத்தில் த்வஜத்தையோ ஸ்தாபிக்கலாம் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு பிம்பலக்ஷண முறைபடி ஒரு முகம், இரண்டுகண், கரண்டமகுடம் அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய இருகை, ஸர்வலக்ஷணம் இவைகளுடன் கூடியதான மூர்த்தி ரூபத்தை, கல்பிக்கவும், தசாயுதங்களில் சக்தியும், கதையும், ஸ்திரீருபம் சக்ரமும், பத்மமும், நபும்சகரூபம் மற்றவைகள் புருஷ ரூபம் என கூறப்படுகிறது. வஜ்ராதி ஆயுதங்கள் அஸ்திர வர்க்கத்தில் கூறி உள்ளபடி அமைத்து, அந்தந்த மூர்த்தியின் சிரஸில் கிரீடத்தின் மேலோ அல்லது இருகைகளின் நடுவிலோ அல்லது, வலது கையிலோ ஸ்தாபிக்கவும் என்று தசாயுதங்களின் உருவ அமைப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு முதலில் ரத்னன் நியாம் செய்யவும் என ரத்னந் நியாசவிதி கூறப்படுகிறது. பிறகு நயனோன் மீலனவிதியும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் யாகசாலா நிர்மாண விதி கூறப்படுகிறது. அங்கு நான்கு துவாரத்துடன் கூடியதாக ஒரு வேதிகையுடன் கூடிய ஒரு மண்டபமோ 10 வேதிகையுடன் கூடிய 10 மண்டபமோ செய்யவும் என இரண்டு இடத்திலும், குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது.

பிறகு மண்டபத்தில் பிராம்மண போஜனம், புண்யாக பிரோக்ஷணம் செய்யவும் என கூறி வாஸ்து ஹோமம் செய்யவும் என கூறி மண்டபத்தை அனுசரித்து வாஸ்து ஹோமம் ஒவ்வொரு மண்டபத்திலோ செய்ய வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு பல வஸ்திரங்களினாலோ அல்லது ஒரு வஸ்திரத்தினாலோ சயனம் அமைத்து பிரணவத்தினால் ஆசனம் கொடுத்து தர்பம், புஷ்பம், இவைகளால் பரிஸ்தரணம் அமைக்கவும். ஜலாதி வாசம், முடித்து ஸ்நபனம் செய்விக்கப்பட்ட பிம்பங்களை ரக்ஷõபந்தனம் செய்வித்து. சயனத்தில் பிரதட்சிணமாக சிரசை உடையதாக படுக்கவைக்கவும். வஸ்திரங்களால் ஆச்சாதனம் செய்யவும் என சயனாதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது. இங்கு தசாயுதங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு கும்பம் அதை சுற்றிலும் 8 கலசங்களை ஸ்தாபிக்கவும். மத்ய கும்பத்தில் அந்தந்த எழுத்துக்களையும் மூல மந்திரத்தையும் திசைகளில் பிரம்ம மந்திரத்தையும் ஆக்னேயாதி கோணங்களில் அங்க மந்திரத்தையும் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு திரவ்யங்களை குறிப்பிடும் முறையாக ஹோமவிதி மந்திரத்துடன் கூடி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் பூர்ணாஹுதி கொடுத்து மந்திரந்நியாசம் செய்ய வேண்டும். சந்தன, புஷ்பம் இவைகளுடன் நைவேத்யத்துடன் கூடியதாக பூஜிக்க வேண்டும். பிறகு ஸ்நபனம் உத்ஸவம் செய்யவேண்டுமா இல்லையா என வேறுபாட்டுடன் கூறப்படுகிறது. பிறகு இவ்வாறாக ஸ்தாபன முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. முடிவில் தசாயுதத்தை பிரதிஷ்டை செய்பவன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். இவ்வாறாக 68வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தசாயுத பிரதிஷ்டையை லக்ஷணத்துடன் கூடியதாக கூறுகிறேன். வஜ்ரம், சக்தி, தண்டம், கத்தி, பாசம், அங்குசம்.

2. கதை, திரிசூலம், பத்மம், சக்ரம் என்பதாக பத்து ஆயுதங்களாகும். இவர்களை ஒருமுகம், இரு கண்கள் கரண்ட மகுடமுடையவராய்

3. கூப்பிய இருகைகளை உடையவர்களாயும் எல்லா லக்ஷணத்துடனும் பிரதிமா லக்ஷணங்களுக்கு கூறப்பட்ட அளவுப்படி செய்ய வேண்டும்.

4. சக்தியையும் கதையும் பெண்பால் என்றும் சக்ரத்தையும், தாமரையையும் பலவின் பால் (நபும்ஸகமென்றும்) மற்றவைகள் ஆண் பால் என்றும் அறியவும் இவைகளை எட்டு தாள அளவில் செயற்பாலதாகும்.

5. தன் தலையில் ஆயுதம் உடையதாயும், தன் தலையிலிருந்து ஓர் தாளம் முதல் தாளம் என்ற அளவின் எட்டின் ஒரு பாக அதிகரிப்பால் நான்கு தாள அளவு வரையிலுமாக

6. ஆயுதங்களின் அமைப்பு முறைப்படி அறிஞன் தசாயுதத்தை செய்யவும், அந்த உருவ அமைப்பை உடையவர்களின் தலையிலோ கிரீடத்திலோ தசாயுதத்தை அமைக்க வேண்டும்.

7. இரு கைகளின் நடுவிலோ அல்லது வலது கையிலோ ஆயுதங்களை ஏந்திய வண்ணம் அமைக்கவும். அந்த இடத்தில் அங்குச ஆயுதத்தை விட்டு விட்டு அதற்கு பதிலாக த்வஜத்தையும் அமைக்கலாம்.

8. பிறகு பிரதிஷ்டா கார்யங்களையும் செய்ய வேண்டும். அதன் முறைகள் இங்கு கூறப்படுகிறது. ரத்ன நியாஸம் செய்து பிறகு நயோன்மீலனம் செய்ய வேண்டும்.

9. கண்களில் தேன், நெய் இவைகளால் தர்ப்பணத்தை செய்து தான்யங்களை தர்சிக்க செய்ய வேண்டும். பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட ஆயுதத்தை அலங்கரித்துக் கொண்டு வரவேண்டும் பிறகு

10. கிராம பிரதட்சிணத்தை செய்துவிட்டு ஜலத்தின் நடுவில் படுக்க வைக்க வேண்டும். முன் கூறியபடி மண்டபத்தை நான்கு திரவ்யங்களுடன் கூடியதாக செய்து

11. ஒரே வேதிகையுடன் கூடியதாகவோ அல்லது தனித்தனி வேதிகையுடன் கூடியதாகவோ அமைக்கவும். பத்து எண்ணிக்கை கொண்ட மண்டபமாகவோ (கொட்டகை) தனித்தனி குண்டங்களுடன் கூடியதாகவோ

12. கிழக்கு முதலாக அந்தந்த ஆயுதங்களின் திக்குகளில் குண்டங்களை உடையதாக அமைத்தோ, ஒரே மண்டபத்தில் எட்டு திக்குகளிலும் குண்டங்களை சுற்றிலுமாகவும் அமைக்க வேண்டும்.

13. கிழக்கிற்கும் ஈசான திக்கிற்கும் நடுவில் வட்ட வடிவ குண்டத்தையும் தென்மேற்கு, மேற்கு திக்குகளின் நடுவில் வ்ருத்த குண்டத்தையும் ஆக குண்டங்கள் எண்ணிக்கையானது பத்தாகும்.

14. பிராம்மண போஜனம் வாஸ்து ஹோமத்தை தனித்தனியாகவோ செய்து புண்யாஹ பிரோக்ஷணம் செய்து முடிவில் லக்ஷணத்துடன் கூடியதான ஸ்தண்டிலம் அமைத்து

15. ஒரு வஸ்திரத்தாலோ அல்லது பலவஸ்திரங்களாலோ சயனத்தை அமைக்க வேண்டும். ஆஸனத்தில் பிரணவத்தை எழுதி தர்ப்பங்களாலும் புஷ்பங்களாலும் பரிஸ்தரணம் போட வேண்டும்.

16. பிறகு ஜலத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்து பிம்பத்தை சிரங்கள் சுற்றி வரிசையாக இருக்கும்படி படுக்க வைக்க வேண்டும்.

17. குருவானவர் வஸ்திரங்களால் எல்லா ஆயுதங்களையும் மூடி சுற்றிலும் எட்டு திக்குகளிலும் எட்டு கும்பங்களை வைக்க வேண்டும்.

18. அந்தந்த ஆயுதங்களின் பெயர்களை மூலமந்திரத்துடன் பஞ்சப்ரம்ம அங்க மந்திரங்களினால் பூஜிக்க வேண்டும். நடு கும்பத்தில் மூலமந்திரங்களையும் திக்குகளில் பிரம்ம மந்திரங்களையும் பூஜிக்க வேண்டும்.

19. விதிக்குகளில் அங்க மந்திரங்களை பூஜித்து தத்புருஷம் முதலியவர்களிடத்தில் சேர்ந்ததாக அறிந்து அந்தந்த மந்திரங்களால் ஹோமத்தை சமித்து நெய் எள்ளுடன்

20. அன்னத்தாலும் நிறைந்ததாக அந்தந்த அக்னியில் அந்தந்த ஹோமத்தை செய்ய வேண்டும். புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை திக்குகளிலும்

21. வன்னி, கருங்காலி, மயிற் கொன்றை வில்வம் முதலியவை விதிக்ஷúகளிலும் கூறப்பட்டுள்ளது. புரசு பிரம்ம ஸ்தானத்திலும் வில்வம் விஷ்ணு ஸ்தான குண்டத்திலும் ஏற்புடையன.

22. மறுநாள் காலையில் பூர்ணாஹுதியை செய்து மந்த்ர ந்யாஸத்தை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து மஹா நைவேத்யத்தையும் செய்து

23. ஸ்நபனத்தை செய்தோ செய்யாமலோ அவ்வாறே உத்ஸவமும் நடத்தவும், இவ்வாறு எவர் தசாயுத பிரதிஷ்டை செய்கிறாரோ அவர் எல்லா இடையூறுகளில் இருந்தும் விடுபடுவர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் தசாயுத பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தி எட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar