Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : புரட்டாசி ராசிபலன் மேஷம்: ஐப்பசி ராசிபலன் மேஷம்: ஐப்பசி ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம் : புரட்டாசி ராசிபலன்
எழுத்தின் அளவு:
மீனம் : புரட்டாசி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:09

பூரட்டாதி - 4:
அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக தீர்க்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். பெண்கள் சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: அக். 6, 7
அதிர்ஷ்ட நாள்: செப் 28, 29

உத்திரட்டாதி:
மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த மாதம் காரியத் தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபவிஷயயம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 7, 8
அதிர்ஷ்ட நாள்: செப் 29, 30

ரேவதி:
தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய ரேவதி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பல வகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம்: அக். 8, 9
அதிர்ஷ்ட நாள்: செப் 30, அக். 1

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar