Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்கோயிலில் தங்கத் தொட்டில், ... பழனியாண்டவர் கோயிலுக்கு புதிய உற்ஸவர் சிலை பழனியாண்டவர் கோயிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி (ராகு) கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி (ராகு) கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 அக்
2021
03:10

கும்பகோணம்,-  கும்பகோணம் அருகே  திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிஜாம்பிகை, பிறையணி அம்பாள் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு மங்கள ராகுவாக  அருள்பாலித்து வருகிறார்.  ராகுதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது. இக்கோவில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, 5 கோடி ரூபாய் செலவில், 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்கள் திருப்பணிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகளுக்காக, 22,500 சதுரஅடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதூவார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினர்.பின்னர் காலை ஆறுகால பூஜைகள் முடிந்து,7 மணிக்கு 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர்,  யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar