Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : கார்த்திகை ராசி பலன் தனுசு : கார்த்திகை ராசி பலன் தனுசு : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

விசாகம் -4: ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுடைய விசாக நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் பணவரவு தரும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடப்பது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குழந்தைகள், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை
தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு நன்மைகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ.20
அதிர்ஷ்ட நாள்: டிச.1, 2
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர வாழ்க்கை வளம் பெறும்.

அனுஷம்: அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய அனுஷ நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வீட்டை விட்டு வெளியிடத்தில் தங்க நேரிடும். உடல் களைப்பு, பித்தநோய் உண்டாக வாய்ப்புணடு. மனதில்  வீண் கவலைகள்  இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் கூடுதல் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன், வீண் தாமதம்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க அடிக்கடி மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலை பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 21
அதிர்ஷ்ட நாள்: டிச.2, 3
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள்.

கேட்டை: அமைதியும், கருணையும் கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பார்த்த அளவு லாபம் கூடுதலாக வராவிட்டாலும், தேவை ஓரளவு பூர்த்தியாகும்.  புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான  நிர்வாகச் செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். மனம் விட்டு பேசுவது நிம்மதிக்கு வழிவகுக்கும்.  பிள்ளைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். அவர்களின் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் திட்டமிட்டு படிப்பது மிகவும் அவசியம்.  
சந்திராஷ்டமம்: நவ.22, 23
அதிர்ஷ்ட நாள்: டிச.3, 4
பரிகாரம்: வராஹப் பெருமாளை வணங்க நன்மை பெருகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar