Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : கார்த்திகை ராசி பலன் மகரம் : கார்த்திகை ராசி பலன் மகரம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு : கார்த்திகை ராசி பலன்
எழுத்தின் அளவு:
தனுசு : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

மூலம்: எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த மூல நட்சத்திர அன்பர்களே!  இந்த மாதம்  பணவரவு அதிகமாகும். ஆனால் வீண்செலவும் அடிக்கடி உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.  எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் தற்போது வெற்றிகரமாக நடந்து முடியும். தொழில்.  வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட  லாபம் கூடுதலாகும். புதிய ஆர்டர்களால் ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு,  வர வேண்டிய பணம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமூகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை சேரும். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு சாதகமான காலகட்டம். கல்வியில் வளர்ச்சி காண்பர்.  
சந்திராஷ்டமம்: நவ.23, 24
அதிர்ஷ்ட நாள்: டிச.4, 5
பரிகாரம்: விநாயகரை  வணங்கினால் மனதில் நிம்மதி உண்டாகும்.

பூராடம்: பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப்பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் பூராட நட்சத்திர அன்பர்களே!  இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குற்றம், குறைகள் காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பண வரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். மனதில் தெய்வ பக்தி அதிகரிக்கும். திடீர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மகிழ்வர்.  
சந்திராஷ்டமம்: நவ.24, 25
அதிர்ஷ்ட நாள்: டிச.6
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க பிரச்னை தீரும்.

உத்திராடம் - 1: அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய உத்திராட நட்சத்திர அன்பர்களே!  இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். நிர்வாகச் செலவும் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
சந்திராஷ்டமம்: நவ.25, 26
அதிர்ஷ்ட நாள்: டிச.7
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குங்கள். 

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar