Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ஜூலை 06,2012
அ-
+
Temple images

இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ஆயிர வைசிய சபையின் முயற்சியால் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக பூஜை ஜூலை 2 ல் துவங்கியது. மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜையும் , ஜூலை 3 ல் காலை 9.30 மணிக்கு 2 ம்கால யாக பூஜையும் , மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாக பூஜையும் , ஜூலை 4 ல் காலை 9 மணிக்கு 4ம் கால யாகபூஜையும் , மாலை 5.30 மணிக்கு 5ம் கால யாகபூஜையும் நடந்தது. நேற்று (ஜூலை 5 ) ல் காலை 5.50 மணிக்கு 6ம் கால யாகபூஜையும் , காலை 8 மணிக்கு கோ பூஜையும் , 8.30 மணிக்கு கடம் புறப்பாடும் , காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. காலை 11 மணிக்கு மஹா அபிஷேகம் , 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.ஆயிர வைசிய சபை, ஆயிர வைசிய இளைஞர் சங்கம் , ஆயிர வைசிய இளைஞர் அன்புக்குழு, ஆயிர வைசிய இளைஞர் நற்பணி மன்றம் , காயத்ரி மகளிர் மன்றம் , கலைமகள் மகளிர் மன்றம், சதாசிவம் ஜூவல்லர்ஸ் சதாசிவம் செட்டியார், காயத்ரி மோட்டார்ஸ் வெங்கடேஷ், உஷா டிரேடர்ஸ் பாலகுமார் இளையான்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள்,ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.