Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மெட்டீரியல் ரோப்கார்: பழநியில் சோதனை ஓட்டம்!
ஜூலை 14,2012
அ-
+
Temple images

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு பொருட்கள் கொண்டு செல்ல, "மெட்டீரியல் ரோப்கார் சோதனை ஓட்டம் நடந்தது. பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல "வின்ச், "ரோப்கார் வசதி உள்ளது. தற்போது, மலைக்கோயிலுக்கு பூஜை, அன்னதான பொருட்களை கொண்டு செல்ல, "மெட்டீரியல் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில் இது திட்டமிடப்பட்டுள்ளது. மலைக்கோயில் மேல்பகுதியில் இருந்து இயக்கும் வகையில், மேல்தள பெரிய சக்கரத்தில் கம்பி வடம் இணைக்கப்பட்டு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இரு பெட்டிகளில் சிமென்ட் மூடை, உலோக பொருட்களை ஏற்றி, சோதனை ஓட்டம் நடந்தது. "அடுத்த மாதம், இது பயன்பாட்டிற்கு வரும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.