Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு கொடியேற்றம்: ஜூலை 20 ல் நடக்கிறது!
ஜூலை 17,2012
அ-
+
Temple images

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொடியேற்றம், ஜூலை 20 காலை 9.40 மணிக்கு நடக்கிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் பல வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஜூலை 23 ஆடிபூரத்தன்று, காலை 10 மணிக்கு, மூலஸ்தான அம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் ஏத்தி இறக்குதல் வைபவம் நடக்கும். ஜூலை 26 இரவு புஷ்ப பல்லக்கில், அம்மன் ஆடி வீதி வலம் வந்தபின், உற்சவர் சன்னதியில் அம்மன் - சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 27ல், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடக்கிறது. அன்று, சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் முறையே வெள்ளி யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில் வீதி உலா வந்தபின், திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக் காட்சி நடக்கிறது. ஜூலை 29 ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா முடிகிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்து வருகின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.