Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் மேஷம்: குருப்பெயர்ச்சி பலன்.. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை)
மீனம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023
எழுத்தின் அளவு:
மீனம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

பூரட்டாதி 4 ஆம் பாதம்: இடமாற்றம் உண்டாகும்

அறிவாற்றலால் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருபவர்கள் நீங்கள். உங்கள் நட்சத்திர அதிபதியும், ராசி நாதனும் குருவே என்பதால் குருவினுடைய வலிமையை முழுமையாக கொண்டவர்களாக இருப்பீர்கள். சிந்தனையாற்றல், செயலாற்றல் மிக்கவர்களாக  இருப்பீர்கள். உங்களுக்கு 12ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு, 2022 ஏப்.13 முதல் உங்கள் ஜென்ம ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார். ஜென்ம குரு நன்மைகளை வழங்குவாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, குடும்ப ஸ்தானமெனும் 2ல் ராகு, ஆயுள் ஸ்தானமெனும் 8ல் கேது  சஞ்சரிப்பதால் நன்மைகள் உண்டாகுமா? சங்கடங்கள் உண்டாகுமா? என்ற கேள்விகளும் எழும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

நிதி: லாப ஸ்தானத்தில் உள்ள சனி பொருளாதார நிலையை சீராக்கித் தருவார். பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குரு  வர வேண்டிய வரவுகளுக்கு வழிவகுப்பார். தனக்காரகனே உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்குத் தேவைகள் உண்டாகும் போதெல்லாம் அதற்கேற்ப வரவுகள் வந்து கொண்டிருக்கும். இயற்கையாகவே செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவரான உங்களுக்கு வரவிற்குரிய வழிகள் அதிகரிக்கும். கடன் காரணமாக சொத்துகளை விற்கும் நிலைக்கு ஆளானவர்கள் புதிய சொத்துகள் வாங்குவர். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக புதிய முதலீடு செய்வீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி இக்காலத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு  சங்கடங்களை உருவாக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

குடும்பம்: ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என வாழக்கூடிய நிலை உருவாகலாம். வேலை, இடமாறுதல் என நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இடைவெளி உண்டாகும் என்றாலும் உங்கள் சிந்தனை யாவும் குடும்பத்தை மேம்படுத்துவதிலேயே இருக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். அவர்களும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு  திருமணயோகம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். புதிய பொருட்கள் வீட்டில் சேரும்.

கல்வி: அறிவாற்றல் மிக்கவரான உங்களுக்கு எதையும் சிந்தித்து செயல்படும் குணம் இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உங்களுக்கு ஆழமாக இருக்கும். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி கல்வி மீது கவனம்  இருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பீர்கள். தேர்வில் முழுகவனம் செலுத்துவீர்கள். பட்டப்படிப்பு குறித்த உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக உண்டாகும். மேல்படிப்பிற்காக சிலர் வெளிநாட்டிற்கு செல்வர்.

பெண்கள்: திருமண வயதில் இருப்பவர்களுக்கு தாலி பாக்கியம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வீட்டிற்குள் நிதானமும், வார்த்தைகளில் கவனமும் தேவை.  குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் குறைகள் தீரும். ஆயுள். மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நிலையில் மட்டுமல்ல கணவரின் உடல்நிலையிலும் எச்சரிக்கை  தேவை. பிள்ளைகளின் வழியிலும், பூர்வீக வகையிலும்  நன்மைகள் அதிகரிக்கும்.

உடல்நிலை: ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்துவார். இனம் புரியாத நோய்களால் சிலர் பாதிக்கப்படுவர். மருத்துவ சிகிச்சைக்கும் ஆளாவீர்கள். சிலர் தங்களின் கவனக் குறைவால் விபத்துகளை சந்திக்கலாம். மூட்டு வீக்கம், நரம்புத்தளர்ச்சி, தொற்றுநோய், உடல்சோர்வு, வேகமாக செயல்பட முடியாத அளவிற்கு மயக்கம், பிரஷர் என்று சங்கடங்கள் உண்டாகும். ஏதேனும் ஒருவகையில் மருத்துவச்செலவு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தொழில்: லாப ஸ்தானத்தில் உள்ள சனியும், பாக்ய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவும் உங்களுடைய தொழில் நிலையில் ஆதாயத்தை வழங்குவர். இயந்திரவகைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் முன்னேற்றம் காண்பர். தனியார் பள்ளியினர் வளர்ச்சி காண்பர். ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழில் வகையில்  ஆதாயமான நிலையைக் காண்பீர்கள்.

பரிகாரம்: ராமேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள்புரியும் ராமநாத சுவாமியை மனதில் நினைத்து செயல்படுங்கள். வினைகள் தீரும். நன்மைகள் உண்டாகும்.

உத்திரட்டாதி: வார்த்தைகளில் கவனம் தேவை

ஆயுள், மன உறுதிக்கு காரகனான சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், தன புத்திர காரகனான குரு பகவானை ராசி நாதனாகவும் கொண்டவர்கள் நீங்கள். ஒரு பக்கம் உங்களிடம் அறிவாற்றலும், பிறரை வழிநடத்தும் சக்தியும் மேலோங்கி இருக்கும். மறுபக்கம், கடுமையும் அலட்சியப்போக்கும், உங்களுக்குப் பிடிக்காதவரை எடுத்தெறியும் போக்கும் எப்போதும் இருக்கும். உங்களுக்கு வேண்டியதைத் தேடி எப்போதும் நீங்களாக போக மாட்டீர்கள். சில நேரங்களில் சரியான முடிவிற்கும் உங்களால் வர முடியாமல் போகும். குரு உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுகிறார் என்றால், சனி அதற்கு எதிரான வழியைக் காட்டுவார். இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி பல நேரங்களில் நீங்கள் அவதிப்பட வேண்டியவர்களாக இருப்பீர்கள். இந்த நிலையில் 12ல் சஞ்சரித்த குரு 2022 ஏப்.13 அன்று உங்களின் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்க உள்ளார். இந்த காலத்தில், கணவர் ஓரிடம். மனைவி வேறிடம் என வாழ நேரிடும். இந்த நேரத்தில் மற்ற கிரகங்களின் நிலையையும் பார்த்திட வேண்டும்.

நிதி: பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் ஆதாயம் வர ஆரம்பிக்கும். புதிய தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். பணப்புழக்கம் ஏதாவது ஒரு வகையில் இருக்கும். வங்கியில் இருந்து எதிர்பார்த்த தொகைகள் வந்து சேரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். தந்தை வழியினர் உங்களைத் தேடி வருவர்.  சிலர், புதிய நிலம் இடம் வாங்குவர். சிலர் புதிய வீடு கட்டி அதில் குடியேறுவர். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களின் நிலைபாட்டை உயர்த்துவார். தேவையான நேரத்தில் உங்களுக்குத் தேவையானதை வழங்குவார். சிலர் புதிய வாகனம் வாங்குவர். பிள்ளைகளின் மேல்படிப்பு, திருமணம் என்று இருப்பை செலவிடுவீர்கள்.

குடும்பம்: வேலை, தொழில்களின் வழியே உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும் இடையே ஜென்ம குரு இடைவெளியை உண்டாக்குவார். இந்த நேரத்தில் 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு குடும்பத்திற்குள் ஏதாகிலும் ஒரு சங்கடத்தை உண்டாக்கலாம். 5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் விலகும். கல்வி, வேலை, திருமணம் என்று அவர்கள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வீட்டில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு குருவின் 7 ஆம் இடத்தின் மீதான பார்வையால் திருமணம் நடந்தேறும். பெற்றோர், நண்பர்களின் வழியே நன்மை உண்டாகும். நினைத்தவை ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.

கல்வி: குடும்பத்தில் உண்டான சங்கடங்கள், அசாதாரணமான நிலை காரணமாக கற்பதில இடையூறு உண்டா்இருக்கும். இக்காலத்தில் எல்லா சூழல்களும் உங்களுக்கு சாதகமாகும். தேர்வுகள் பற்றிய எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். பள்ளி, கல்வி நேரத்திற்குப் பிறகும் உங்கள் கவனத்தை கல்வியின்மீது செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளுடன் பயிற்சிகளையும் மேற்கொள்வீர்கள். தேர்வில் கூடுதல் சிந்தனை மேலோங்கும். பெரும்பாலான மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லுாரியில், பொறியியல், மெக்கானிசம், ஹார்டுவேர், எலெக்ட்ரானிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மொழியியல், கல்வியியல், சட்டம் என பாடங்களை தேர்வு செய்வீர்கள்.

பெண்கள்: திருமண வயதில் உள்ள பெண்களுக்கு தாலி பாக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியமும் சிலருக்கு உண்டாகும். குடும்பத்திற்குள் இக்காலத்தில் ஆரோக்கியமான நிலையை எதிர்பார்க்க முடியாமல் போகும். 2 ல் உள்ள ராகு உங்களுக்கு கோப நிலையை உண்டாக்குவார். இதுவரையில் லாப ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு நன்மைகளை வழங்கிய சனி பகவான் 2022 மே 5 முதல் வக்ரகதி அடைவதால் வருவதெல்லாம் செலவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாங்கல்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உடல்ரீதியாக சங்கடங்களை உருவாக்குவார்.

உடல்நிலை: ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடலில் ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருப்பார். தசாபுத்தி நன்றாக இருப்பவர்களுக்கு சங்கடம் உண்டாகாது. மூட்டுவலி, கழுத்துவலி, கால்வலி என அவதி உண்டாகும். சுவாசப் பிரச்னை, நெஞ்சுவலி, வயிற்றுவலி, டென்ஷன் என சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. நேரத்திற்கு ஓய்வு எடுப்பதால் ஆரோக்கியத்தை சீராக வைக்க முடியும். சிறிய பிரச்னை என்று உருவாகும்போதே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

தொழில்: சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். தொழிலை வெளியூர்களிலும் தொடங்குவீர்கள். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். கூட்டுத்தொழிலுக்கு வழியுண்டாகும். அரசு பணியாளர்கள் இடமாற்றத்தை சந்திப்பர். தொழிற்சாலைகள், கம்பெனிகள் வைத்திருப்போர், பில்டர்ஸ் 2022 மே5 க்குப் பிறகு தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு துறைகளைச் சார்ந்தவர்கள் வார்த்தைகளில்  நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் அதன்வழியே பாதிப்பு உண்டாகலாம்.

பரிகாரம்: சோளிங்கரில் குடிகொண்டுள்ள நரசிம்ம மூர்த்தியையும், ஆஞ்சநேயரையும் மனதில் எண்ணி செயல்பட நன்மைகள் உண்டாகும். ஒருமுறை சோளிங்கர் சென்று இருவரையும் தரிசித்து வாருங்கள்.

ரேவதி: பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி

கல்விக்கும் வித்தைகளுக்கும் காரகனான புத பகவானை நட்சத்திர அதிபதியாகவும், பொன்னுக்கும் புகழுக்கும் காரகனான குரு பகவானை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். கல்வி கேள்விகளில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். கவுரவமான தலைமைப் பதவிகளில் அமரக்கூடியவர்களாக இருப்பீர்கள். மற்றவரை வழிநடத்தும் நிர்வாகிகளாகவும், ஆலோசகர்களாகவும் இருப்பீர்கள். அந்த அளவிற்கு உங்களை குரு, புதன் சேர்க்கை உருவாக்கி இருக்கும். சாதுர்யமும் சாணக்கியத்தனமும்  இயல்பாக இருக்கும். இதுவரை ராசிக்கு 12ல் விரய குருவாக சஞ்சரித்து பலன்கள் வழங்கிய குரு 2022 ஏப்.13 அன்று பெயர்ச்சியாகி உங்களுக்கு ஜென்ம குருவாக மாறுகிறார். அவர் எத்தகைய பலன் வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

நிதி: வாழ்க்கைத் தேவைக்காக கையில் இருப்பதை விற்றும் அடகு வைத்தும் செலவு செய்து வந்திருப்பீர்கள். இக்காலத்தில் இழந்ததை அடையக்கூடிய நிலை உருவாகும். தொழில்ரீதியான வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். முதலீடுகள் லாபத்துடன் திரும்பும். சிலர் வங்கியில் இருந்து நிதியுதவி கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். செலவுகளை விட இக்காலத்தில் வருவாய் அதிகரிக்கும். அதன் வழியே சேமிப்பு உயரும்.

குடும்பம்: ஜென்மகுரு காலத்தில் வேலை, தொழில் முன்னேற்றம் என்ற வகையில் உங்களை சுற்றலில் விடுவார். குடும்பத்துடன் நீங்கள் செலவு செய்யும் நேரம் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்ப பிரச்னை தோன்றும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய பணிகளை இக்காலத்தில் மேற்கொள்வீர்கள். தந்தை வழியில் நன்மைகள் தோன்றும். வீட்டில் திருமணம், சுப நிகழ்வுகள் நடந்தேறும்.

கல்வி: வித்யா காரகனான புதனை நட்சத்திர அதிபதியாக கொண்டவர் நீங்கள் என்பதால் கல்வியில் கவனம் செலுத்தக்கூடியவராக இருப்பீர்கள். இதுவரை ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தி இருப்பீர்கள். தற்போது நிலைமை சீராகியுள்ளதால் ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்படுவீர்கள். தேர்வின் மீது முழு கவனமும் செல்லும். மன, உடல் ரீதியாக பாதிப்புகளை சந்தித்தாலும் முயற்சிகளால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வி பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பெண்கள்: அரசு பணியாளர்கள் இட மாறுதல், டெப்டேஷன் என இடத்தைவிட்டு வெளியூர் செல்ல வேண்டியிருக்கும்.  குடும்பத்தில் ஏதாவது குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனமாக இருப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் வெற்றியாகும். புதிய நட்புகள் உருவாகும் என்றாலும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர் வழியில் நன்மைகள் உண்டாகும்.

உடல்நிலை: வேலைகளின் காரணமாக படபடப்பு, அவசரம், டென்ஷன் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு வேலைப்பளு உண்டாகும்.  ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் சங்கடத்திற்கு ஆளாவர். ஆயுள் ஸ்தானத்தில் உள்ள கேது அச்சமூட்டிடக்கூடிய வகையில் உடல்நிலையில் மாறுதலை உண்டாக்கலாம். தொற்று நோய்களாலும், இதயக்கோளாறு, கை, கால்களில் வீக்கம், மூட்டு வலி, மறைமுக நோய்கள் சங்கடங்களை உண்டாக்கலாம். சின்னதாக ஒரு பாதிப்பு உண்டாகும்போதே மருத்துவரை சந்திப்பது நல்லது.

தொழில்: லாப ஸ்தானத்து சனியும், பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவும் தொழில் வளர்ச்சி, லாபத்தை உண்டாக்குவர். சுய தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப லாபம் வரும்.  தசாபுத்தி நன்றாக இருப்பவர்கள் நற்பலன் காண்பர். பள்ளி உரிமையாளர்கள். ஆசிரியர்கள். மத போதகர்கள். வழக்கறிஞர்கள். ஆலோசகர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். அரசு பணியாளர்கள் இடமாற்றம் வழியே ஆதாய நிலையை அடைவர். வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பேசும்போது யோசித்து பேசுவதும், நிதானமாக செயல்படுவதும் நன்மை தரும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதரை மனதில் எண்ணி செயல்படுங்கள். நன்மைகள் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை) »
temple news
அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவுகுருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் ... மேலும்
 
temple news
கார்த்திகை: போட்டியில் வெற்றிகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மைகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் ... மேலும்
 
temple news
மகம்: ஒன்பதில் குருபகவான்குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar