Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ரமலான் சிந்தகைள்- 3: தொழுகையில் கவனம் பேணுவோம்!
ஜூலை 23,2012
அ-
+
Temple images

ரமலான் மாதத்தில் தொழுகையின் அளவு எந்தளவுக்கு மிகுகிறதோ, அந்தளவுக்கு அதிக பலனை அல்லாஹ் அருள்வான். ""நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒரு ஸஜதாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்து விடுகிறான், என்கிறார்கள் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள். மனிதன் தொழுதபிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு...இப்படியாக நாம் தொழும் தொழுகைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கென்ன! பல லட்சத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படும்ஆனால், அதுவும் அல்லாஹ்வின் கிருபையே ஆகும். சில தொழுகைகள் பழையதுணியைப் போன்று சுருட்டி தொழுதவருடைய முகத்தில் வீசப்படும். தொழுகையாளிகள் வணக்க வழிபாடுகளில் தமது திறமை முழுவதையும் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் ஷைத்தான் தோல்வி அடைந்துவிட்டான். இருப்பினும், முஸ்லிம்களிடையே பகைமைத்தீயை மூட்டுவதில் நம்பிக்கை இழக்கவில்லை. கியாமநாளில் முதலாவதாகக் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகும். அல்லாஹ் வானவர்களை நோக்கி,"" என்னுடைய அடியானின் தொழுகை குறைவாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள், என்று கட்டளை இடுவான். அது முழுமையாக இருந்தால் முழுமையென்று பதிவு செய்யப்படும். குறைவாக இருந்தால் குறைவென்று பதியப்படும். எனவே, தொழுகையில் கவனம் பேணுங்கள். நம் தொழுகை முழுமையானதென்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.