Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருத்தணி ஆடித் தெப்ப உற்சவம்: 205 பஸ்களை இயக்க முடிவு
ஜூலை 28,2012
அ-
+
Temple images

நகரி: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடிக் கிருத்திகை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, திருத்தணிக்கு, 205 பஸ்களை இயக்க ஆந்திரா, தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அடுத்த மாதம், 10ம் தேதி ஆடி கிருத்திகை தினத்தையொட்டி, பக்தர்கள் புஷ்ப காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், தெப்ப திருக்குளத்தில் சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி வலம் வரும் தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, 205 பஸ்களை இயக்க, தமிழக, ஆந்திரா போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான, ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இருமாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர். இதன்படி, ஆந்திர போக்குவரத்துக் கழகம் சார்பில், 120 பஸ்களும், தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில், 85 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட், 8ம் முதல், 12ம் தேதி வரை, 5 நாட்களுக்கு இப்பஸ்கள் இயக்கப்படும்.திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, பிச்சாட்டூர், நாகலாபுரம், கொத்தபள்ளி மிட்டா, பச்சிகாபாளையம், பலமநேர் ஆகிய இடங்களில் இருந்து ஆந்திர மாநில பஸ்களும், சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், பள்ளிப்பட்டு, புத்தூர், நகரி ஆகிய இடங்களில் இருந்து தமிழக பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இத்தகவலை, ஆந்திர போக்குவரத்துக் கழக திருப்பதி வட்டார மேலாளர் நாக கிவுடு தெரிவித்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.