Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை துலுக்காணத்தம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரந்தை கருணாசாமி கோவில் குளம் தூர்வாரும் போது 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கரந்தை கருணாசாமி கோவில் குளம் தூர்வாரும் போது  7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

21 மே
2022
02:05

தஞ்சாவூர், தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணாசாமி கோவில் திருக்குளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியின் போது சுடுமண்ணாலான 7 உறை கிணறுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவில் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டு போனது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்குதி மக்கள் கடந்த 2019ம் ஆண்டு  தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.
 இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இக் குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதையுடன் கூடிய வகையில் குளத்தை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளத்தில் தூர்வாரும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக இக்குளத்தில் தூர்வாரும் போது ஆங்காங்கே மூன்று அடி சுற்றளவு சுடுமண்ணாலான உறைகிணறு தென்பட்டுள்ளது இதுவரை ஏழு கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரும் போது பல உறை கிணறுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார் செல்லப்பெருமாள் கூறுகையில், தஞ்சாவூரில், பிரசித்திபெற்ற கருணா சாமி கோவில் குளத்தில் சோழ மன்னன் கரிகால சோழன் தன்னுடைய தோல் நோய் நீங்குவதற்காக இந்த குளத்தில் குளித்து இங்கு உள்ள சாமியை வழிபட்டதாக வரலாறுகள் கூறுகிறது. பழமைவாய்ந்த இந்த கோவில் எதிரே உள்ள இந்த குளம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இருந்தது. குளத்துக்கு வரும் நீர் வழிப்பாதையை கண்டறிந்து அதனை மீட்டு தற்போது குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம். இந்நிலையில் தற்போது தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி குளத்தின் கரையை, அகலமாக்கி அதில் நடைபாதை அமைக்கவும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூர்வாரும் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஏழு உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மேலும் தெற்கு மற்றும் மேற்கு கரைகளில் தூர் வாரினால் அந்த பகுதியிலும் இது போன்ற உறை கிணறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள தீர்த்த கிணறு போன்று இந்த குளத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக தமிழக தொல்லியல் துறையினர் முழுமையாக கள ஆய்வு செய்து இந்த குளத்தில் உள்ள கிணறுகளை ஆய்வுசெய்து வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar