Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : ஆனி மாத பலன் மகரம் : ஆனி மாத பலன் மகரம் : ஆனி மாத பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு : ஆனி மாத பலன்
எழுத்தின் அளவு:
தனுசு : ஆனி மாத பலன்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
09:06

மூலம்: தனது சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான  சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினருக்கு சூரியன் சஞ்சாரத்தால் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: ப்ரத்தியங்கிரா தேவியை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினம்: ஜூலை 1
அதிர்ஷ்ட தினம்: ஜூலை 10

பூராடம்: பேச்சில் இனிமை சாதுர்யம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் அறிவுத் திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். நட்சத்திரநாதன் சுக்கிரன் மனநிம்மதியை தருவார். குழப்பமான விஷயங்களில் கூட சாமர்த்தியமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல் திறமை கூடும். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் விலகும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
பரிகாரம்: பெருமாள் கோவிலில் தாயாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
சந்திராஷ்டம தினம்: ஜூலை 2
அதிர்ஷ்ட தினம்: ஜூலை 11

உத்திராடம் - 1: எந்த கடின சூழ்நிலையிலும் நிதானமாகவும் சாமர்த்தியமாகவும் முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். புதிதாக வீடு மனை பூமி வாங்க முற்படுவீர்கள். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. பண விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். சக ஊழியர்களின் உதவியால் எந்த வேலைகளையும் சரியாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்னை தீரும்.
சந்திராஷ்டம தினம்: ஜூலை 3
அதிர்ஷ்ட தினம்: ஜூன் 15, ஜூலை 12

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar