Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
கல்யாணிக்காக வந்தாச்சு தனி உண்டியல்
ஆகஸ்ட் 08,2012
அ-
+
Temple images
பேரூர்: கல்யாணி யானை பராமரிப்புக்காக, தனி உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி யானை உள்ளது. 22 வயதாகும், இந்த யானை, அரசால் நடத்தப்படும், யானைகள் புத்துணர்ச்சி முகாமில் இரண்டு முறை கலந்து கொண்டுள்ளது. ஒத்துழைப்பு கொடுப்பது முதல் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டு, புத்திசாலி யானை என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின் பேரில், யானை பராமரிப்புக்கென, தனி உண்டியல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் மூலம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்யானை நிறுத்தப் பகுதியில் யானைபராமரிப்பு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மூலம் பெறப்படும் நிதியில், யானைக்கு தேவையான கூடுதல் உணவு, தீவனம், சுகாதார சோதனை, யானை தங்குமிட மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கோவில் யானையின் நலன்கருதி, பராமரிப்பு நிதியை முழுமையாக, யானையின் மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்திட, தனிக்குழுவின் கவனத்துடன் மேற்கொள்ளவேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.