Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » ஆவணி ராசிபலன்
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - காத்திருக்கு சலுகை!
ஆகஸ்ட் 13,2012
அ-
+
Temple images

பிறருக்கு இரக்க மனதுடன் உதவும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமாவாசை நாளில் தனது பயணத்தை துவக்குகிறார். இதனால் உங்களின் செயல் புகழ்பெறும் நோக்கிலும் தாராள பணவரவை தரும் வகையில் இருக்கும். நவக்கிரகங்களில் சுக்கிரன், சனி, குரு, கேது உங்கள் வாழ்வுநலம் சிறக்க மிகுந்த உதவிகரமாக செயல்படுவர். உங்களை அவமானப்படுத்த நினைப்பவர் ஏமாந்து போவர். உடல்நலத்தை சீராக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவது நல்லது. புத்திரர் நடத்தை குறைவானவர்களுடன் நட்பு பாராட்டுவதால் சிரமம் அடைவர். ஆரோக்கியம் பலம்பெறும். தம்பதியர் குடும்ப பெருமையை காக்கும் விதத்தில் ஒற்றுமையுடன் நடப்பர். வீட்டில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும். உறவினர் வருகை மனதைச் சந்தோஷப்படுத்தும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறையில் சீர்திருத்தம் செய்து உற்பத்தி தரத்தை மேம்படுத்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் ஆதாயத்தை  உயர்த்துவர். விரிவாக்க முயற்சியிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் குறித்தநேரத்தில் இலக்கை நிறைவேற்றுவர். புதிய சலுகைப்பயன் கிடைக்கப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியில் திறமையை வெளிப்படுத்துவர். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர்,தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபம் கூடும்.அரசியல்வாதிகள் தகுதிக்கு மீறிய புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவதுடன், பெற்றோரின் அரவணைப்பைப் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: முருகனைவழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 30.8.12 இரவு 6.29 - 2.9.12 அதிகாலை 1.30.
வெற்றி நாள்: ஆகஸ்ட் 20, 21, செப்., 16
நிறம்: மஞ்சள், ஆரஞ்ச்  எண்: 3, 7

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.