Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » ஆவணி ராசிபலன்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) - பயணத்தில் கவனம்!
ஆகஸ்ட் 13,2012
அ-
+
Temple images

நல்ல சிந்தனைகளை வளர்த்திடும் தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு ஆறாம் இடத்தில் யோகமற்ற குணத்துடன் உள்ளார். ஆனால், செவ்வாய், கேது நல்ல பலன் தருவர். சுக்கிரனும் தன் பங்கிற்கு மாத பிற்பகுதியில் உதவிகரமாக செயல்படுவார். காரியத்துடன் தான் யாருடனும் பேசுவீர்கள். இளைய சகோதரரின் யோசனையால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வாகனப் பயணத்தில் கண்டிப்பாக மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவர். படிப்பில் திறமை வளரும். பூர்வசொத்தில் எதிர்பாராத அளவில் வருமானம் உண்டு. அந்தப் பணத்தை நகை, மனை வகைகளில் மூலதனம் செய்வீர்கள். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவரவர் ஜாதக புண்ணியத்திற்கு ஏற்ப கிடைக்கும். எதிரிகள் பலமிழந்துபோவர். இதனால் உங்களின் புதிய முயற்சி வெற்றிபெறும். உடல்நலம் பலம் பெறும். தம்பதியர் சிறு அளவில் கருத்து வேறுபாடு கொண்டாலும் குடும்பநலன் கருதி நல்வாழ்வு நடத்துவர். தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்வதால் நிர்வாக நடைமுறை சிறந்து உற்பத்தி அளவு உயரும். வியாபாரிகள் விற்பனை சரிவால் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டி வரும். லாபம் ஓரளவுக்கு உண்டு. பணியாளர்கள் குழப்பமான எண்ணங்களை சரிசெய்வதால் பணி சீராக நிறைவேறும். வழக்கமான சலுகைகள் உண்டு.  குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாட்டால் சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவர். உற்பத்தி நடைமுறை எளிதாகும். பணவரவு உயரும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான வகையில் பதவிப்பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூல் பெறுவர். புதிய நிலம் வாங்க யோகமுண்டு. மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து தரத்தேர்ச்சியை சீராக்குவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பயணத்தில் பாதுகாப்பு கிடைக்கும்.
உஷார் நாள்: 17.8.12 காலை 6- இரவு 8.40 மற்றும் 11.9.12 இரவு 8.14- 14.9.12 அதிகாலை 4.21.
வெற்றிநாள்: ஆகஸ்ட் 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட்   எண்: 3, 4

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.