Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ரம்ஜான் சிந்தனைகள்: குடும்பம் வேறு! பொதுவாழ்வு வேறு!
ஆகஸ்ட் 16,2012
அ-
+
Temple images

நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், குடும்பம் வேறு, சுயவாழ்வு வேறு என வாழ்ந்து காட்டினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் திருமகள் பாத்திமா அம்மையார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். திருமணமான பிறகு, பாத்திமா அம்மையார் அவர்கள் ஒருமுறை தந்தையைக் காண வந்திருந்தார்கள். தந்தையே! எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு சிலர் வேண்டும். உங்களுடன் உள்ள கைதிகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்களேன், என்றார்கள்.நாயகம்(ஸல்) அவர்கள், ""மகளே! இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் பொதுச்சொத்து. இவர்களுக்கு பாதுகாப்பாளன் நான். உமக்கு உதவிக்கு வரும் இடத்தில், இவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால், நான் தான் பொறுப்பாவேன். மேலும், இவர்கள் மீது உமக்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், நம் வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீர். வேலையை முடிப்பதற்குரிய சக்தியைக் கேளுங்கள். அவன் உமக்கு அருள் செய்வான், என்று கூறி அனுப்பி வைத்தார்கள். குடும்ப விஷயம் வேறு... பொது விஷயம் வேறு... என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இன்றைய உலகம் பின்பற்ற வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.