Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ரமலான் சிந்தனைகள் - நெருங்கியது தர்மத்திருநாள்
ஆகஸ்ட் 18,2012
அ-
+
Temple images
பெருநாளைக் கொண்டாட இருக்கும் இந்த நல்வேளையில் அண்ணல் நபிகள் நாயகம் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம். மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும். ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும்.இதிலிருந்து, ரம்ஜான் என்றால் தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. இதுவரை தர்மம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், இன்று அதை நிறைவேற்றி விடுங்கள். சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்.உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ செய்யுங்கள். அதுவே, உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடனாகும். ""ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து, அதற்கு அவன் நன்றிக்கடனுக்காக "அல்ஹம்துலில்லாஹ் (இது இறைவனால் வந்தது) என்று கூறுவானேயானால், அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை விட அதிகமான உபகாரங்களைக் கொடுத்து விடுகிறான், என்பது நபிமொழி.தர்மம் செய்ய வேண்டும், தர்மம் செய்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.36
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.