Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா -பகுதி 12
முதல் பக்கம் » சத்யசாய்பாபா - புட்டபர்த்தி
சாய்பாபா -பகுதி 13
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2011
05:01

அங்கு பாபாவை சேர்க்கக்கூடாது என்ற விவாதம் ஏதும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்பதை உணர்ந்து தங்கள் வகுப்பிற்கே அவரை அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் போராடிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், அந்தப் பையன் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தெய்வத்திடம் தானே முடிவை விட வேண்டும். அவன் விரும்பும் வகுப்புக்குச் செல்லட்டும், என்றார். ஒருவழியாக பாபா அங்கு வந்து சேர எல்லாரும் ஒற்றுமையாக அவரை வரவேற்றனர். அந்தப் பள்ளியிலேயே மிகச்சிறந்த மாணவராக அவர் விளங்கினார். அவரே அங்கு எழுதி நடத்திய நாடகம், பஜனை முதலானவை மாணவர்களையும், ஊர் மக்களையும் ஈர்த்தன. சிலகாலம் கழித்து புட்டபர்த்திக்கே திரும்பிய அவர், ஜிலேபி வரவழைத்துக் கொடுப்பது, உதிரிப்பூக்களை வீசி எறிந்து சாய்பாபா என தெ<லுங்கில் தனது பெயர் வரச்செய்வது என்று சித்து வேலைகளையும் செய்தார்.இந்த விஷயங்கள் பாபாவின் தந்தை வெங்கப்பராஜுவுக்கு தெரிய வர, அவர் தன் பெரியமகன் சேஷமராஜுவுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார். அவரும் பாபாவைக் கண்டித்து தன்னுடன் உரவுகொண்டாவுக்கே மீண்டும் அழைத்துச் சென்று விட்டார். ஒரு சமயம் ஹம்பி நகரிலுள்ள விருபாக்ஷர் கோயிலுக்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள கருவறைக்குள் பாபா சென்று விட்டார். அர்ச்சகர் அவரைக் கடுமையாகத் திட்டினார். வந்த பக்தர்களும் முகம் சுளித்தனர். ஆனால், திடீரென கருவறையில் இருந்து ஒளி வள்ளம் எழுந்தது கண்டு அவர்கள் அதிசயித்தனர். இன்னொரு சமயம் பாபாவின் தலையின் பின்பக்கம் ஒளிவெள்ளம் எழுந்தது கண்டு அவரது அண்ணியார் அதிசயப் பட்டார். ஆரம்பத்தில் அவரது அண்ணியாரும் அவர் தெய்வப்பிறவி என்பதை நம்ப மறுத்தார். இந்தக் காட்சி அவரது மனதை மாற்றிவிட்டது. காலவெள்ளத்தில் அவரது சகோதரரும் அவரது செயல்பாடுகள், முகத்தில் ஏற்பட்ட ஒளி ஆகியவற்றை நேரில் கண்டு அவரைத் தெய்வமென்று நம்பினார். போதாக்குறைக்கு அவ்வூரில் வசித்த நாராயண சாஸ்திரி என்ற பிரபல மனிதர், இளைஞர் என்றும் பாராமல் பாபாவின் கால்களில் விழுந்து நீயே தெய்வம் என்று கூறினார். இதன்பிறகு உரவுகொண்டாவிலுள்ள சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாபா, தலையின் பின்பகுதியில் ஒளிவட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்ட மக்களெல்லாம் அவரை வணங்கினர்.

என்னதான் தெய்வப்பிறவி போல தோன்றினாலும், சாய்பாபாவின் போக்கு சேஷமராஜுவுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனே தன் தாய் தந்தையை வரவழைத்தார். அவர்கள் ஊருக்குள் வந்தார்களோ இல்லையோ, தெய்வக்குழந்தையை எங்களுக்கு தந்த பெற்றோர் வாழ்க என்று அங்கு நின்றவர்கள் கோஷமிட்டனர். பாபாவும் உணர்வு நிலையிலேயே இல்லை, பெற்றோர்களைக் கவனிக்காமலே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பாபாவின் அண்ணன் சேஷமராஜு பெற்றோரை பாபா அருகில் அழைத்துச்சென்று,சத்யா! இவர்களை யார் தெரிகிறதா? என்றார்.பாபா அவர்களைப் பார்த்து, இவர்கள் மாயைகள் என்றார்.ஈஸ்வரம்மா கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.சத்யா! நீ நிஜத்தில் தெய்வமாகவே இருந்தாலும், எங்களை மாயை என எப்படி சொல்லலாம்? பற்றற்ற நிலைக்கு நீ வேண்டுமானால் போகலாம். பெற்ற எங்கள் வயிறு தாங்குமா? என்றார்.மேலும், மகனின் பேச்சால் அதிர்ந்து போன அவர், என்னங்க! சத்யாவை புட்டபர்த்திக்கே கூட்டிச் சென்று விடுவோம், என கணவரிடம் அழுதபடியே சொன்னார். வெங்கப்பராஜு மனைவியைத் தேற்றி,ஈஸ்வரா! நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபின் தானே, அவனுக்கு கிடைக்கும் மாலை மரியாதை, வழிபாடு ஆகியவையெல்லாம் தெரிகிறது. இனி அவன் நம் பிள்ளையல்ல! உலகத்துக்குச் சொந்தமாகி விட்டான், என்றார்.யார் என்ன சொன்னாலும் பெற்றவளின் மனம் கேட்குமா? ஈஸ்வரம்மா மகனிடம்,சத்யா! உன்னை இந்த சந்நியாசி கோலத்தில் பார்க்க மனம் சகிக்கலையடா! வா! உன் பாசத்துக்குரிய சொந்தமான இந்த தாயைப் பார், என்றார்.ஆனால் பாபா,இந்த உலகில் யார் யாருக்கு சொந்தம்? என்றுதிருப்பிக்கேட்டார். அந்த சமயத்தில் வந்த போட்டோகிராபர் ஒருவர்,அம்மா! அவரை வற்புறுத்தாதீர்கள். நேற்று நான் அவரை ஒரு படம் எடுத்தேன். பிரின்ட் போட்டுப் பார்த்தால் ஷிர்டிபாபாவின் படம் இருக்கிறது. அவர் அவரது அவதாரம், என்றார்.பின்னர் வெங்கப்பராஜு மனைவியிடம்,ஈஸ்வரா! கலங்காதே! அவன் இங்கே தானே இருக்கிறான்! அவனைத் தெய்வமென மக்கள் கொண்டாடுவதும் நமக்குப் பெருமை தானே! என்றார். அதன்பிறகு அம்மா வருகில் வரும்போதெல்லாம்,இதோ! மாயை வந்துவிட்டது என்பார்.

பிள்ளையின் இந்தச் சொல் அம்மாவுக்கு வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் திடீரென, அம்மா பசிக்கிறது, என்றார். ஈஸ்வரம்மா மகிழ்ந்தார். மகன் பழையநிலைக்கு திரும்பி விட்டதாக நினைத்தார். வகைவகையாக உணவு பரிமாறினார். சாய்பாபா அவற்றை மொத்தமாகப் பிசைந்தார். மூன்று உருண்டையாக உருட்டி, அவற்றை எடுத்துத்தரும்படி கேட்டார். அம்மா எடுத்துக் கொடுக்க அதைச் சாப்பிட்டார். உடனே தாய் அவரிடம்,சத்யா! நீ உன் விருப்பப்படியே இவ்வாறே பஜனை, சத்சங்கம் என்றே இரு! அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், புட்டபர்த்திக்கு வந்து இதைச் செய், என்றார். இதற்கு பாபா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர்களுடன் புறப்பட்டும் விட்டார்.பாபாவின் புகழைக் கேள்விப்பட்டிருந்த உள்ளூர் மக்கள் அவரை வரவேற்க காத்து நின்றனர். அவர்களில் ஒருவர் சுப்பம்மா. பாபாவை இளமையில் வளர்த்தவர். தன் வீட்டுக்கு பாபா வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தார். பாபா ஊரில் வந்து இறங்கி தன் வீட்டுக்கு முதலிலும், பின்பு தனது தாய்மாமனார் வீட்டிற்கும் சென்றார். ஆனால், அங்கெல்லாம் குடும்பச்சண்டைகள் நிகழ்ந்தன. முற்றும் துறந்தால் அவரால் அதையெல்லாம் பொறுக்க முடியவில்லை. சுப்பம்மா வீட்டிற்கு சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.ஊர்மக்கள் அவரை பாபா என்று அழைத்தனர். சில பக்தர்கள் அவரிடம்,நீங்கள் தெய்வம் என்றால் மனிதவடிவில் ஏன் லீலை புரிகிறீர்கள்? என்றனர். அவர்களிடம்,நான் சங்கு சக்கரத்துடன் காட்சியளித்தால் நீங்கள் என்னை நம்பத்தயாரா? அப்படிச்செய்தால் ஏதோ நாடக வேடதாரி என்று தானே சொல்வீர்கள்! என திருப்பிக்கேட்டார்.சாயி எங்காவது இமயமலை பக்கம் போய்விடுவாரோ என பலரும் கருதினர். ஆனால், அவர் இன்று வரை புட்டபர்த்தியிலேயே தங்கி அந்த கிராமத்தை உலகப்புகழ் பெற்றதாக்கி விட்டார். அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார்.  -முற்றும்.

 
மேலும் சத்யசாய்பாபா - புட்டபர்த்தி »
temple news

சாய்பாபா -பகுதி 1 நவம்பர் 10,2010

கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு ... மேலும்
 
temple news

சாய்பாபா - பகுதி 2 நவம்பர் 10,2010

ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து ... மேலும்
 
temple news

சாய்பாபா -பகுதி 3 நவம்பர் 11,2010

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் ... மேலும்
 
temple news

சாய்பாபா -பகுதி 4 நவம்பர் 11,2010

தொட்டிலில் படுத்திருந்த சத்யாவின் தலையில் வட்ட வடிவ ஒளி தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. பார்க்க கண் ... மேலும்
 
temple news

சாய்பாபா - பகுதி 5 நவம்பர் 11,2010

சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar