ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாணிப்பாறை, மாமரத்து ஓடை, வழுக்குப் பாறை, சங்கிலி பாறை ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நவம்பர் 5ந்தேதி முதல் 9ந்தேதி முடிய, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.