Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநி வரதராஜபெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழா!
ஆகஸ்ட் 28,2012
அ-
+
Temple images

பழநி: பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடந்தது. விழாவின் முதல்நாளான நேற்று காலை 6 மணிக்கு சிம்ம லக்னத்தில் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரவு 7 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆவணி பிரம்மோற்சவ விழாவையோட்டி கோயிலில் தினமும் கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.