Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா ... முத்தாளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்! முத்தாளம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் 9ம் தேதி 108 கோமாதா பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 செப்
2012
10:36

தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 9ம் தேதி 108 கோமாதா பூஜை நடக்கிறது. குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் வெள்ளி விழா, சாரதா ஆசிரமத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு மழை பெய்து நாடு வளம் செழிக்கவும், பசுவினம் பெருகி மக்கள் மகிழ்ந்து தர்மம் தழைத்திடவும் தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் வரும் 9ம் தேதி 108 கோமாதா பூஜை நடக்கிறது.

அதிகாலை 5 மணி முதல் புண்யாகவாசனம், அனுக்ஞை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வர்ண ஜெபங்கள், துர்கா ஹோமம், லட்சுமி ஹோமம், அபிஷேகம், கனகதாரா ஸ்தோத்திரம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோமாதா பூஜை துவங்குகிறது. டாக்டர் செண்பகராமன், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் அழகராஜா, தொழிலதிபர் ராஜகோபால் துவக்கி வைக்கின்றனர். தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.மாலையில் திருக்குறள் மண்டப வளாகத்தில் நடக்கும் விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதினம் ஆதின கர்த்தர் கல்யாணசுந்தர சத்ய ஞானசுவாமிகள் தலைமை வகிக்கிறார்.காசிவிசுவநாதர் கோயில் நிர்வாக அதிகாரி கணபதிமுருகன், மூத்தகுடிமக்கள் மன்ற தலைவர் துரை தம்புராஜ், தொழிலதிபர் அழகராஜா, வர்த்தக சங்க தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கின்றனர். ஆசிரம மாணவிகள் இறை வணக்கம் பாடுகின்றனர். திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்கிறார்.வடலூர் சமரச சன்மார்க்க சங்க தலைவர் சுவாமி ஊரன் அடிகள், வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் கருணாநந்த சுவாமிகள், சின்னமனூர் ராமகிருஷ்ண ஆசிரமம் முக்தானந்த சுவாமிகள், காஞ்சிபுரம் நிடுமாமடி சிவப்பிரகாச வீரேஸ்வர சுவாமிகள், சென்னை அகண்ட பரிபூரண சச்சினாந்த சபை தாம்பரானந்தம் அருளுரை வழங்குகின்றனர். திருவள்ளுவர் கழக தலைவர் கணபதிராமன், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர உதவி தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசுகின்றனர். பேராசிரியை இளம்பிறை மணிமாறன் சிறப்புரையாற்றுகிறார்.கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கரன், சிதம்பரநாதன்பஞ்சவடி, சங்கரநாராயணன் சீருடை வழங்குகின்றனர். முன்னாள் அரசு செயலாளர் லட்சுமிகாந்தன் பாரதி முதியோர்களுக்கு ஆடைகள் வழங்குகிறார். விவேகானந்த ஆசிரமம் சுவாமி அகிலானந்தா ஆசியுரை வழங்குகிறார். வக்கீல் கனகசபாபதி நன்றி கூறுகிறார்.

ஏற்பாடுகளை விழா கமிட்டி கவுரவ தலைவர் சுவாமி அகிலானந்தா, தலைவர் துரைதம்புராஜ், துணைத் தலைவர்கள் விவேகானந்தன், லிங்கராஜ், துணை செயலாளர் தர்மர், பொருளாளர் சங்கரன், உறுப்பினர்கள் சுவாமி குருபரானந்தா, சுவாமி ராகவானந்தா, புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் முருகையா, முத்துக்கிருஷ்ணன், கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று(பிப்.20) காலை ... மேலும்
 
temple
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்ப திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நத்தம் ... மேலும்
 
temple
கூடலுார் : கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகியும் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.