Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » மாத ராசி பலன்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) பணத்தேவை அதிகரிக்கும்!
செப்டம்பர் 07,2012
அ-
+
Temple images

புரட்டாசி: பொறுப்புகளைத் தட்டாமல் ஆர்வமாக ஏற்கும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் இரண்டாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். சனி, சுக்கிரன் சிறப்பான பலன்களைத்தருவர். நடை, உடை, செயல்பாடுகளில் வசீகர மாற்றம் ஏற்படும். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணி நிறைவேற்றுதல் போதுமானது. தாய்வழி உறவினர்களிடம் பழைய விவகாரம் குறித்து பேசவேண்டாம். புத்திரர்கள் ஆன்மிக விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். படிப்பிலும் தேவையான கவனம் இருக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.  தம்பதியர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து கூடுதல் அன்பு, பாசத்துடன் செயல்படுவர். பெண் ஒருவரால் நன்மை நடக்கும். தொழிலதிபர்கள் போட்டியாளர்களின் இடையூறு நடவடிக்கைகளைப் பொறுமையுடன் சரிசெய்வது நல்லது. அளவான உற்பத்தி, மிதமான பணவரவு உண்டு. வியாபாரிகள் அரசின் சட்டதிட்டங்களை கூடுதல் கவனமுடன் பின்பற்ற வேண்டும். சுமாரான விற்பனை, குறைந்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற சிரமப்படுவர். சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். இயந்திரங்களை இயக்குபவர்கள் பாதுகாப்பு நடைமுறையை கவனமுடன் பின்பற்ற வேண்டும். குடும்பப் பெண்கள் கணவரின் மனக்கஷ்டம் குறைய தகுந்த ஆலோசனை, பணஉதவி வழங்குவர். பணிபுரியும் பெண்கள் சிறு குளறுபடிகளால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்வர். நிதானமும் பயிற்சியும் அவசியம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஓரளவு விற்பனை, சுமாரான லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயரை பாதுகாப்பதில் கவனம் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு சிறந்த மகசூல், கால்நடை வளர்ப்பில் கூடுதல் லாபம் உண்டு. மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி கிடைக்கும். வாகன பயணத்தில் தகுந்த பாதுகாப்பு அவசியம்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் சிரமங்கள் வெகுவாகக் குறையும்.
உஷார் நாள்: 29.9.12 காலை 9.01- 1.10.12 மாலை 6.10.
வெற்றி நாள்: அக்டோபர் 6, 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம்       எண்: 4, 7

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.