Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » மாத ராசி பலன்
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பணமழை பெய்யும்!
செப்டம்பர் 07,2012
அ-
+
Temple images

புரட்டாசி:சாதனைச் செயல்களில் நாளும் ஈடுபடுகின்ற விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சி பலம்பெற்று உச்சம்பெற்ற ராகுவுடன் உள்ளார். இதனால் சக்திக்கு மீறிய செயல்பாடுகளை தவிர்ப்பது நல்லது. நற்பலன் தரும் கிரகங்களாக குரு, சூரியன் உள்ளனர். பேச்சிலும் செயலிலும் ஆளுமைத்தன்மை இருக்கும். சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். வீடு, வாகன வகையில் சிறு பராமரிப்புச்செலவு உண்டாகும். பூர்வசொத்தில் அதிக பணவரவு உண்டு. புத்திரர்கள் படிப்பில் திறமை, தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். அறிமுகம் இல்லாத எவருக்கும் உதவுவதில் நிதானம் நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். சீரான ஓய்வு நலம்பெற உதவும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால் மட்டுமே நிம்மதி பிறக்கும். தொழிலதிபர்கள் பொருட்களின் தரத்தை உயர்த்தி புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். தாராள பணவரவு உண்டு. வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனையில் சாதனை புரிவர். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணியாளர்கள் சக பணியாளர்களின் உதவியைப் பெறுவர். உற்சாகமுடன் பணிபுரிந்து நிர்வாகிகளிடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வரலாம். இரவல் நகை கொடுக்க, வாங்கக்கூடாது. பணிபுரியும் பெண்கள் வேலையை விரைவில் முடித்து அதிகாரிகளின் நன்மதிப்பு, சலுகை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த கடன் கிடைத்து, தொழிற்கருவி வாங்குவர். உற்பத்தி, விற்பனை, லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு புகழைப் பாதுகாக்க செயல்பாடுகளில் கவனம் வேண்டும். விவசாயி களுக்கு சராசரி மகசூல் உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: புரட்டாசி சனியன்று ரங்கநாதரை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
உஷார் நாள்: 6.10.12 மாலை 4.53- 9.10.12 அதிகாலை 3.29.
வெற்றி நாள்: அக்டோபர் 13, 14
நிறம்: சாம்பல், பச்சை   எண்: 4, 5

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.