Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » மாத ராசி பலன் (ஆனி மாதபலன்)
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) கைகொடுக்கும் நம்பிக்கை!
செப்டம்பர் 07,2012
அ-
+
Temple images

புரட்டாசி: பிறருக்கு உதவிட முன்வரும் தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு ஆறாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். கேது, சுக்கிரன், சூரியன், புதன், சனி அளப்பரிய நற்பலன்களைத் தருவர். பேச்சிலும் செயலிலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும். சகோதரர் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகனத்தில் புதிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரரின் எதிர்பார்ப்புக்களை விருப்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வசொத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிரித்தொல்லை, கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். இயன்ற அளவில் சமூகப்பணி, உறவினர்களுக்கு உதவுதல் ஆகிய தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியை வளர்த்துவருவர். உறவினர்களிடம் இணக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை எதிர்பாராத வகையில் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபம் அதிகரிக்கும். வியாபாரிகள் விற்பனை சிறந்து நல்ல ஆதாயம் காண்பர். புதிய இடங்களில் கொள்முதல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் வளர்ச்சி காண்பர். உற்பத்தி, விற்பனை சிறந்து வருமானம் உயரும். அரசியல்வாதிகள் சமூகத்தில் செல்வாக்குடன் திகழ்வர். புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 9.10.12 அதிகாலை 3.30 - 11.10.12 பகல் 11.51
வெற்றி நாள்: அக்டோபர் 16, செப்டம்பர் 19
நிறம்: வாடாமல்லி, ஆரஞ்ச்      எண்: 1, 7

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.