Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
குருவாயூரில் அஷ்டமி ரோகிணி உற்சவம்!
செப்டம்பர் 08,2012
அ-
+
Temple images

குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (அஷ்டமி ரோகிணி) உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, 50 ஆயிரம் நெய் அப்பங்கள், அடையுடன், சுவாமிக்கு சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு விருந்தும் நடைபெறும். இன்று மூலவர் சன்னிதியில், வழக்கமாக இருக்கும் சிறப்பு விளக்குகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் எல்லாம், நெய் அப்பம் மற்றும் அடை போன்ற நைவேத்தியங்கள் நிரப்பப்படும். தங்கத்தாலான உற்சவ மூர்த்தி, கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கும். இதில், பத்மநாபன் என்ற யானை, உற்சவ மூர்த்தியை, தன் முதுகில் சுமந்து வலம் வரும். அந்த யானைக்கு இருபுறமும், கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரநாராயணன் ஆகிய, இரு யானைகளும் வலம் வரும். நாளை காலை, கோவிலில் உறியடி உற்சவமும், பேரணியும் நடைபெறும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.