Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பூமிக்கடியில் இருந்து கிடைத்த அம்மன் சிலை!
செப்டம்பர் 10,2012
அ-
+
Temple images
மேலூர்: மேலூர் அருகே உள்ளது கீழவளவு. இவ்வூரின் காவல் தெய்வம், வீரகாளியம்மனின் கோயில் உள்ளது. தவறு செய்தவர்களை, அம்மன் தண்டிப்பதாக மக்கள் கருதுகின்றனர். இதனால், பல ஆண்டுகளுக்கு முன், அம்மன் சிலையை புதைத்து விட்டு, வேறு ஒரு சிலையை வைத்து வழிப்படுகின்றனர். கடந்த பங்குனியில், திருவிழாவிற்காக, கோயிலை சுத்தம் செய்தபோது, புதைக்கப்பட்ட சிலை கண்டெடுக்கப்பட்டது.

கீழவளவை சேர்ந்த பிரபு கூறியதாவது:தவறு செய்தவர்களை தண்டிக்கத்தான், இச்சிலை வெளிப்பட்டுள்ளது. இச்சிலையை கோயிலுக்குள் வைக்க கூடாது என, இரவோடு இரவாக அப்புறப்படுத்த முயற்சி நடந்தது. இளைஞர்கள், ஒரு வாரம் காவல் காத்து, இச்சிலையை கோயிலுக்குள் வைத்துள்ளோம். எவ்வளவு பிரச்னை வந்தாலும், இச்சிலையை இடம் மாற்ற, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இப்பகுதியில் கற்களுக்கு வைத்த வெடியால், கோயிலின் சுற்றுச்சுவர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிரானைட் தூசு, கோயில் முழுவதும் நிறைந்துள்ளது, என்றார்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.