Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தக.. தக..வென ஜொலிக்கும் மீனாட்சி ... சூரியனை ஏன் வணங்க வேண்டும்? சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
முதல் பக்கம் » துளிகள்
சதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2012
03:09

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு,அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும்.  புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம். வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகல பாக்கியத்தையும் அடையலாம். உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம். வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம். பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வெண்ணெயில் பிள்ளையார் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.

நிவேதனம் நமக்கு சொல்வது என்ன: விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar