Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருப்புன்கூரில் நந்தனார் குருபூஜை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
அக்டோபர் 05,2012
அ-
+
Temple images
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் தேவார பாடல் பெற்ற அருள்மிகு சவுந்தரநாயகி உடனாகிய சிவலோகநாத சுவாமி கோவில் உள் ளது. இது நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் தன்னை தரிசனம் செய்வதற் காக நந்தியை விலகி இருக்க சொன்ன தலம். இக்கோவிலில் ஆண்டு தோறும் நந்தனாருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நந்தனார் குருபூஜை விழா அக்.5 அன்று நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமி, அம்பாள், நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் செ ய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், நந்தனாரை எழுந்தரு ள செய்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. ஹோமத்தை வைத்தீஸ்வரன் கோவில் ராஜாமகாதேவன் சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தினர். விழாவில் ஸ்ரீ சிவநந்தனார் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், மண்ணிப் பள்ளம் செந்தில்வைரவன், வி.எச்.பி. பொறுப்பாளர்கள் செந்தில்குமார், செ ல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குருபூஜையையொட்டி மாலை நந்தனார் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவிலின் ஆய்வர் மதிவாணன், செயல் அலுவலர் ராம லிங்கம் ஆகியோருடன் ஸ்ரீ சிவநந்தனார் அறக்கட்டளையினர் இனைந்து செய்திருந்தனர்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.