Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
புரட்டாசி மூன்றாம் சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை!
அக்டோபர் 06,2012
அ-
+
Temple images

கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

இன்று (அக்.,6)புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காரிமங்கலம், அக்ரஹாரம், லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் இன்று காலை, 5 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.காலை 6 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்ககும் நிகழ்ச்சியை டவுன் பஞ்சாயத்து சேர்மன் சத்யா துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.* காரிமங்கலம் அடுத்த கோவிலூர், ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில், பிக்கனஅள்ளி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், கெரகோடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள நடக்கிறது.

* தர்மபுரி கோட்டை, பரவாசுதேவர் கோவில், கடை வீதி சென்னகேசவ பெருமாள் கோவில், மூக்கனூர் வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், ஏ.கொல்லப்பட்டி பெருமாள் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.