Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » நேபாளம்
புத்தநீலண்டா கோயில் (சயன கோலத்தில் விஷ்ணு) - நேபாளம், காத்மாண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
04:10

புத்தநீலண்டா கோயில் அமைந்துள் இந்த இடத்திற்கு வந்தவுடன் ஆன்மிகத்தை உணர முடிகிறது. ஆனந்தமும் தன்னம்பிக்கையும் காற்றோடு நம் உள்ளத்திலும் அலைபாய்கிறது... மந்திரமும் பிரார்த்தனைகளும் தானாகவே மனதிலிருந்து வெளிவரும் இடமாக இத்தலம் அமைந்துள்ளது. புத்தநீலண்டாவிலிருக்கும் ஆனந்த நாராயணனின் கம்பீர சிற்பத்தை பார்க்கும்போது, படுக்கையிலிருக்கும் பாம்பு முழுவதும் ரோஜாக்கள் நிறைந்த படுக்கைக்கு சமமாகும்.  சிவபுரி மலை நீர்வீழச்சியின் அடிவாரத்தின் இடையில் மிதப்பதை போலவும் விஷ்ணு ஆழ்ந்த அமைதியாகவும், மிகவும் அமைதியான மனதுடனும், சுருண்ட உடும்பான பதினொன்று தலை ஆனந்த சீசா நாகத்தின் மீது சயனம் கொண்ட நிலையில் இச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

புத்தநீலண்டா காத்மாண்டுவிலிருந்து 9 கி.மீ தொலைவில், ஐந்து மீட்டர் நீளமுள்ள பெரிய பாறையில் கம்பீரமான சிற்ப வேலை செய்யப்பட்டுள்ளது.  இத்தலத்தின் குளத்தில், விஷ்ணு சுருண்ட பாம்பில் படுத்த நிலையில் பெரிய கற் சிலையில் தரிசனம் தருகிறார். இந்த பெரிய படுத்த விஷ்ணுவின் சிலை பள்ளத்தாக்கிலும் கிடைக்காத அரிய வகையான ஒரே கருப்பு கற்களில் செதுக்கப்பட்டது. சில காலத்திற்கு முன் விவசாயிகளான கணவன், மனைவி இருவரும் தங்கள் நிலத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் நிலத்தை உழும்பொழுது இச் சிலைகளை கண்டறிந்தார்கள். அங்கிருக்கும் ஒருவர் கூறியதாவது இந்த சிலை ஒருமுறை விசித்திரமாக காணாமல் போனது. இதை மறுபடியும் இந்த விவசாயிகள்  உழும் பொழுது எதிர்பாரத விதமாக இந்த சிற்பத்தின் மீது பட்டதால், உடனே அதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து, தற்போது உள்ள இந்த சிலை இரண்டாவது முறையாக மறுபடியும் செதுக்கியத்தில் கிடைத்தது.

அனைத்திற்கும் மேலாக, இந்த சிலை உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பதே உண்மை. இந்த சிலை 1000 வருடம் பழமையானது. விஷ்ணு 5 மீட்டர் (17 அடி) உயரமாக,  13 மீட்டர் (43 அடி) நீள குளத்தில் சயன நிலையில் இருக்கிறார். இவரது கால்கள் நீந்துவதை போல் சாய்வாக அமைந்துள்ளது. இவருடைய நான்கு கைகளில் வைத்துள்ள சங்கு, சக்கரம், ஜபமாலை, தாமரை ஆகியவை விஷ்ணுவின் நான்கு முத்திரைகளை குறிக்கிறது. இச்சிலை 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் ஆண்ட லிச்சாவி காலத்தில் செதுக்கப்பட்டது. புத்த நீலகண்டன் என்ற பெயர் புதுமையை குறிக்கிறது. அதாவது பழைய நீல கழுத்து மற்றும் குறிப்பாக தேவர்கள்  பாற்கடலை கடையும் போது வந்த விஷத்தினை சிவன் உட்கொண்டதால் அவரது தொண்டை நீல நிறமாக மாறியது அதனை தணித்து கொள்ள அதனை அவர் கோசயின்குண்ட் என்ற ஏரியில் எறிந்துவிட்டார். ஆகவே அவை புத்த நீலகண்டனின் தொட்டியில் விழுந்தது. எப்படியிருந்தாலும் இந்த சன்னதி கட்டாயம் விஷ்ணுகுரியதாக அர்ப்பணிக்கப்பட்டது.

Default Image

Next News

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar