Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
தொப்பார சேவையில் வீரராகவ பெருமாள்!
அக்டோபர் 19,2012
அ-
+
Temple images

திருவள்ளூர்: நவராத்திரி விழாவின் நான்காவது நாளான நேற்று, கனகவல்லி தாயாருடன் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்து தொப்பார சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு பிற்பகல் 2 மணியளவில், திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு தேசிகன் சன்னிதி எதிரில் உள்ள கொலு மண்டபத்தில் பத்தி உலாவும், பின்னர் ஒவ்வொரு அலங்காரத்திலும் உற்சவர் அருள் பாலிக்கிறார்.நான்காவது நாளான நேற்று, கனகவல்லி தாயாருடன், வீரராகவ பெருமான், ஸ்ரீதேவி, பூதேவியுடன், தொப்பார சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை பெருமாளுக்கு முத்தங்கி சேவை நடக்கிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.