Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
திருநாகேஸ்வரத்தில் 2ம் கட்ட லட்சார்ச்சனை விழா துவக்கம்!
டிசம்பர் 05,2012
அ-
+
Temple images

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில், ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இவ்வாண்டு ராகுபெயர்ச்சி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடப்பதால், இவ்விரு விழாவையும் விமர்சையாக நடத்த கோவில் நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கடந்த மாதம், 30ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நடந்தது.கடந்த இரண்டாம் தேதி காலை ராகுபகவான் விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி, காலை, 10 மணிக்கு கடம் ஊர்வலமாக புறப்பட்டு, ராகுபகவான் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. 10.05 மணி முதல், எண்ணெய், மஞ்சள், மாப்பொடி, திரவியப்பொடி, இளநீர், தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் என சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின் காலை, 10.45 மணிக்கு, ஒன்பது கடங்களில் எடுத்து வரப்பட்டு புனிதநீர் அபிஷேகம் நடந்தத. 10.53 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை ராகுபகவான் சன்னதியில், இரண்டாம் கட்ட பரிகார லட்சார்ச்சனை துவங்கியது. சரவணன் சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை உதவி கமிஷனர் பரணிதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.