Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்: அடிப்படை வசதிகள் இன்றி அவதி!
டிசம்பர் 19,2012
அ-
+

பழநி: பழநியில் ஐயப்பன் பக்தர் சீசனை தொடர்ந்து, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.பழநி கோயிலுக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி என்பதால் அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம். பிரச்னைகள்: பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி மிகவும் குறைவு. சரவணப்பொய்கையில் "இலவச கட்டணம் என போர்டு இல்லாததால், பக்தர்களிடம், குளிப்பதற்கு ரூ.5 முதல் 10 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். * மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திருஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல ரூ.500 முதல் 1000 வரை இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். "வேண்டாம் என்றால், பக்தர்களை கடுமையான வார்த்தைகளால் "அர்ச்சனை" செய்கின்றனர்.* தேங்காய், பழங்களை கூடுதலாக விலைக்கு விற்கின்றனர். * அடிவாரம், சன்னதி வீதி, திருஆவினன்குடி கோயில் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்கள் இந்த ரோட்டில் நடப்பதே சிரமமாக உள்ளன.பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நகராட்சி,தேவஸ்தானத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.