Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெம்பாவை பாடல் 7 குன்றத்தில் திருவாதிரை திருவிழா துவங்கியது! குன்றத்தில் திருவாதிரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிசம்பர் 21: உலகின் அழிவா? ஆரம்பமா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2012
04:12

தற்போது அனைத்து இடங்களிலும் பேசப்பட்டு வரும் ஒரு செய்தி 2012ல் உலகம் அழிந்துவிடும், அதிலும் டிசம்பர் 21ல் உலகம் அழியப்போவதாக பீதி கிளம்பி வருகிறது. இதற்கு கூறும் காரணம் மாயன் காலண்டர். அந்த மாயன் காலண்டரில் 2012, டிசம்பர் 21 உடன் முடிந்து போகிறது.அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடும் என்று குறிபிடுகின்றனர்.

யார் அந்த மாயன்கள்?

கி.மு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவில் மாயா என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். வானவியல் சாஸ்திரம், கணித சூத்திரம் மற்றும் பல கலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  அவர்கள் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மாயன் காலண்டர். இக்காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்  21-ம் தேதி முடிவுக்கு வருகிறது.  அக் காலண்டரில் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது.  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. அவர்கள் காலண்டரின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது  தற்போதுள்ள நவீன நாள்காட்டியின் படி கி.மு. 3114-ஐ குறிக்கிறது. மாயன்  காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நாள்காட்டியின் படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11  மணிக்கு முடிவடைகிறது.

மாயன்கள் தங்கள் காலண்டரை டிசம்பர் 21,2012ம் தேதியிடன் முடித்தது ஏன்? அன்றுடன் உலகம் அழிந்து விடுமா! இதுதான் இக்காலண்டரை நம்புவோர் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

இது பற்றி விஞ்ஞானிகளோ வீண் புரளி என்று கூறுகின்றனர். சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன்  ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4  டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம்  அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம்  அழியாது. எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்கிறார்கள்.

ஆன்மீகம் கூறுவது என்ன?

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

மாயன்கள் உருவாக்கியது ஒரு சுழற்சி காலண்டர். எனவே அவை மீண்டும் அவர்களது முறைப்படி முதல் தேதியான 0, 0, 0, 0, 0ல் தொடங்கலாம். எப்படி பார்த்தாலும் அது உலகின் அழிவாக இருக்காது. நல்ல ஆரம்பமாகவே இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar